ISO 9001:2015 சான்றிதழை பெற்று தரச் சிறப்பம்சங்களுக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் Sathosa Motors PLC

ISO 9001:2015 சான்றிதழை பெற்று தரச் சிறப்பம்சங்களுக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் Sathosa Motors PLC

Off By

இலங்கையில் ‘Isuzu’ வாகனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான சதொச மோட்டர்ஸ் பிஎல்சி (Sathosa Motors PLC – SML), ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளது. இது நிறுவனத்தின் தர முகாமைத்துவம், வாடிக்கையாளர் திருப்தி மற்றும் செயற்பாட்டுச் சிறப்பம்சங்கள் தொடர்பில் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

சதொச மோட்டர்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவ கட்டமைப்பு கணக்காய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, Bureau Veritas Certification Holding SAS – UK Branch அமைப்பானது இந்தச் சான்றிதழை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் முகாமைத்துவ கட்டமைப்பானது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ISO 9001:2015 தர முகாமைத்துவ கட்டமைப்புத் தரநிலைகளின் தேவைகளுக்கு அமைவாக இருப்பது இச்சான்றிதழ் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Isuzu வாடிக்கையாளர்கள் பயணம் முழுவதிலும் தரத்திற்கான அர்ப்பணிப்பு
இந்தச் சான்றிதழானது, புதிய Isuzu வாகனங்களின் இறக்குமதி மற்றும் விற்பனை, அசல் Isuzu உதிரிப் பாகங்களின் விற்பனை, பழுதுபார்ப்பு, பராமரிப்பு உள்ளிட்ட விற்பனைக்கு பிந்தைய சேவைகளை உள்ளடக்கியுள்ளது.

புதிய Isuzu வாகனத்தை கொள்வனவு செய்வது முதல் அசல் உதிரிப் பாகங்களை வழங்குதல் மற்றும் தொழில்முறை பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புச் சேவைகளை வழங்குதல் வரை, வாடிக்கையாளர் பயணம் முழுவதும் கட்டமைக்கப்பட்ட மற்றும் சீரான நடைமுறைகளைப் பராமரிப்பதற்கான Sathosa Motors PLC நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இந்தச் சாதனை பிரதிபலிக்கிறது.

மிக முக்கியமாக, வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், நம்பகமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்காகத் தனது கட்டமைப்புகளைத் தொடர்ச்சியாக வலுப்படுத்துவதில் SML அதிக கவனம் செலுத்துவதை இச்சான்றிதழ் மீள உறுதிப்படுத்துகிறது.

SML வலையமைப்பு முழுவதும் தரமான தரநிலைகள்

ISO 9001:2015 அங்கீகாரமானது, கொழும்பில் உள்ள நிறுவனத்தின் பிரதான அலுவலகத்திற்கு அப்பால் பல்-தளங்களுக்கான சான்றிதழாகும் (multi-site certification). இது பேலியகொடை, வொக்க்‌ஷோல் வீதி மற்றும் குருணாகல் பணிமனைகள் உள்ளிட்ட SML வலையமைப்பிற்குள் உள்ள முக்கிய செயற்பாடுகளையும், இரத்தினபுரி, பதுளை, தம்புள்ளை, கண்டி, பஞ்சிகாவத்தை, மாத்தறை, குருணாகல், நீர்கொழும்பு ஆகிய கிளைகளில் உள்ள அசல் உதிரிப் பாகங்கள் தொடர்பான நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக அமைகின்றது.

பல்வேறு இடங்கள் இதில் உள்ளடக்கியிருப்பதானது, தமது செயற்பாடுகள் முழுவதும் சீரான தர முகாமைத்துவ நடைமுறைகளைச் செயற்படுத்துவதிலும், தமது வலையமைப்பு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சேவைத் தரங்களை வழங்குவதிலும் SML கொண்டுள்ள முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

வாடிக்கையாளர் நம்பிக்கையை வலுப்படுத்துதல்

சதொச மோட்டர்ஸ் பிஎல்சி நிறுவனத்தைப் பொறுத்தவரை, ISO 9001:2015 சான்றிதழைப் பெறுவதானது ஒரு சர்வதேச அங்கீகாரத்தை பெறுவற்கு அப்பாற்பட்ட ஒரு முக்கிய விடயமாகும். நிறுவனம் முழுவதும் நடைமுறை ரீதியான ஒழுக்கம், பொறுப்புக்கூறல், சேவைச் சீரமைப்பு மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பை இது வழங்குகிறது.

இலங்கையில் Isuzu நிறுவனத்தின் இருப்பை SML நிறுவனம் தொடர்ச்சியாக விரிவுபடுத்தி வரும் வேளையில், தரமான வாகனங்கள், அசல் உதிரிப் பாகங்கள் மற்றும் நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய ஆதரவை வழங்குவதற்கான SML நிறுவனத்தின் திறனில் வாடிக்கையாளர் நம்பிக்கையை இச்சான்றிதழ் மேலும் வலுப்படுத்துகிறது.

தரத்துடன் முன்னோக்கிப் பயணித்தல் ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றிருப்பதானது சதொச மோட்டர்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் உயர் செயற்பாட்டு விசேடத்துவம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை நோக்கிய பயணத்தில் மற்றுமொரு முக்கிய படியாகும்.

இலங்கையின் வாகனத் துறையில் தாம் நிறுவியுள்ள இருப்பின் மூலம், தனது தர முகாமைத்துவ நடைமுறைகளை தொடர்ச்சியாக வலுப்படுத்தி, தனது ஊழியர்களையும் நடைமுறைகளையும் மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த Isuzu வாகன உரிமை அனுபவத்தையும் SML மேலோங்கச் செய்யும்.

சதொச மோட்டர்ஸ் பிஎல்சியைப் பொறுத்தவரை, தரம் என்பது வெறுமனே, கொண்டிருக்க வேண்டிய ஒரு நிலை என்பது மாத்திரமல்லாமல், அது எப்போதும் பேணப்பட வேண்டிய, வாடிக்கையாளர்கள் தொடர்பான ஒரு அர்ப்பணிப்பாகும்.