International Logistics & Movers (Pvt) Ltd இற்கு DIMO விடமிருந்து Tata SIGNA Prime Movers

இலங்கையில் Tata Motors நிறுவனத்தின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரும், 85 வருடங்களுக்கும் மேலாக நாட்டில் வாகனங்கள் தொடர்பான விசேடத்தும் கொண்ட நிறுவனமுமான DIMO, அண்மையில் 22 Tata SIGNA Prime Movers வாகனங்களை, முன்னணி போக்குவரத்து நிறுவனமான International Logistics & Movers (Pvt) Ltd (ILM) நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது.
இலங்கைச் சந்தையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இந்த வணிக வாகனங்களின் விநியோகமானது, இலங்கையின் வணிக வாகனத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. கடந்த நிதியாண்டில் மாத்திரம் 100 இற்கும் மேற்பட்ட Tata Prime Movers வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம், நாட்டின் Prime Movers வகை வாகனப் பிரிவில் முன்னணித் தெரிவாக DIMO மாற்றமடைந்துள்ளது.
களஞ்சியம், போக்குவரத்து, சுங்கத் தரகு, செயற்பாடு மற்றும் திட்டங்களுக்கான பொருட்கள் போக்குவரத்து தீர்வுகள் போன்றவற்றின் முக்கிய விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடும் ILM நிறுவனம், ஆரம்ப கட்டமாக கோரிய 22 Tata SIGNA Prime Movers வாகனங்களின் எண்ணிக்கையை உடனடியாக 50 ஆக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான ILM இன் ஒரு மூலோபாய நடவடிக்கையின் அடிப்படையில், அதன் போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதன் மூலம் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களின் முனையங்களுக்கு இடையேயான உள்ளக போக்குவரத்து நடவடிக்கைகளில் கவனம் செலுத்துதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இது தொடர்பில் International Logistics & Movers (Pvt) Ltd நிறுவனத்தின் தலைவரும் அதன் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஹேட்லி ரொட்ரிகோ கருத்து வெளியிடுகையில், “Tata SIGNA Prime Movers வாகனமான, போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு அவசியமான அதிகரித்த சுமையை சுமக்கும் திறன், மேம்பட்ட எரிபொருள் திறன், சாரதிக்கு சிறந்த சொகுசான வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ILM நிறுவனத்தின் செயற்பாடுகளை மேம்படுத்த Tata வாகனங்களைத் தெரிவு செய்யவதில் DIMO கொண்டுள்ள ஒப்பிட முடியாத விற்பனைக்குப் பின்னரான சேவை ஒரு முக்கியமான காரணியாக அமைந்தது.” என்றார்.
இதன் முக்கியத்துவம் தொடர்பில் DIMO நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே கருத்துத் தெரிவிக்கையில்: “இந்த வாகன கொள்வனவானது, DIMO மற்றும் Tata தயாரிப்பின் தரத்தில் கொண்டுள்ள நம்பிக்கையை நிரூபிக்கிறது. DIMO நிறுவனம், அதன் 24 மணி நேர வீதி உதவி மற்றும் முழு நாட்டையும் உள்ளடக்கிய இணையற்ற விற்பனைக்குப் பிந்தைய சேவை மூலம், வணிக வெற்றிக்கு வழி வகுக்கும் மிகவும் திறனான வணிக வாகனங்களை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை இது காட்டுகின்றது. நவீன வணிக வாகனங்களுக்கான அதிகரித்து வரும் கேள்வியை பூர்த்தி செய்ய, மேம்பட்ட பொறியியல் தொழில்நுட்பத்துடனான, அதிநவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த Tata SIGNA Prime Movers வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட கால மதிப்பையும் சிறந்த நன்மைகளையும் வழங்குகிறது.” என்றார்.
ILM தமது செயற்பாட்டு விரிவாக்க செயன்முறைக்கு Tata LPS 5530 SIGNA Prime Movers மற்றும் Tata LPS 4018 SIGNA மாதிரிகளைப் பயன்படுத்த தெரிவு செய்துள்ளது. இது முந்தைய வாகன மாதிரிகளை விட அதிக சுமையைத் தாங்கும் திறனுடன் பயணிக்க உதவுகின்றது. Tata SIGNA Prime Movers உச்ச ஆயுள் மற்றும் எரிபொருள் சிக்கனத்திற்காக மேம்படுத்தப்பட்ட எஞ்சின் மற்றும் 9-speed GRT கியர் தொகுதியை கொண்டதாக அமைந்துள்ளது.
Tata SIGNA Prime Mover வாகன வரிசையானது, உயர் செயல்திறனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அதையும் தாண்டி சாரதிக்கான சொகுசான வசதியை புதிய மட்டத்திற்கு கொண்டு செல்கிறது. ஆடம்பரமான உள்ளக கெபின், சாரதியின் வசதிக்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடிய மூன்று முறையிலான இயக்கத்துடனான சாரதி ஆசனம், USB சார்ஜிங் வசதி, விசாலமான தூங்கும் பெட்டி, தெளிவாக பார்ப்பதற்கு வசதியான சூரிய ஒளி மறைக்கும் பகுதி ஆகியவற்றுடனான Tata SIGNA Prime Mover வாகனமானது, செயற்றிறனையும் தாண்டி சாரதிக்கான வசதியை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. Emergency Locking Retractor (ELR), seat belts போன்ற அம்சங்களானவை சாரதி மற்றும் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் Tata கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் எடுத்துக் காட்டுகின்றன.
இந்த அம்சங்களுடன், நவீன, காலத்திற்கேற்ற மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மேம்பட்ட பொறியியல் தொழில்நுட்பங்கள் மூலம் வணிகப் போக்குவரத்தை Tata SIGNA வாகன வகைகள் மேலும் மேம்படுத்துகின்றன.