Home Lands நிறுவனத்தின் வர்த்தகநாம தூதுவராக கைகோர்க்கிறார் பீட்டர் குருவிட்ட

இலங்கையின் முதல்தர மற்றும் நம்பிக்கைக்குரிய ரியல் எஸ்டேட் வர்த்தகநாமமான Home Lands நிறுவனம், உலகப்புகழ் பெற்ற சமையல்கலை நிபுணரும் உணவகத் துறையின் புகழ் பெற்று விளங்கும் பீட்டர் குருவிட்டவை தமது உத்தியோகபூர்வ வர்த்தகநாம தூதுவராக நியமித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் வர்த்தகநாமம் எனும் வகையில், Home Lands நிறுவனம் தற்போது உலக மேடையில் வலம் வருகின்றது. நம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் விசேடத்துவத்தின் அடையாளமாகவும், தெளிவான தூரநோக்கு மற்றும் வலுவான மதிப்புகளுடன் இந்தத் துறையை இந்நிறுவனம் வழிநடத்துகின்றது. இலங்கையின் பண்பாட்டையும் உணவுமுறையையும் தனது சமையல் திறமைகளின் வழியாகவும், கதையாகக் கூறும் ஆக்கத்திறன் ஊடாகவும் உலகறிய வைத்த பீட்டர் குருவிட்டவுடன் கைகோர்ப்பதானது, இலங்கையின் அடையாளத்தை சர்வதேசத்துடன் பகிரும் Home Lands நிறுவனத்தின் இலக்கை பிரதிபலிக்கின்றது.
இது குறித்து Home Lands குழுமத்தின் தலைவர் நளின் ஹேரத் தெரிவிக்கையில், “பீட்டர் குருவிட்ட ஒரு சமையல்கலை நிபுணர் மாத்திரம் அல்ல. அவர் ஒரு சிறந்த கதை சொல்பவர், பண்பாடுகளுக்கான பாலம், இலங்கை பாரம்பரியத்தினை உண்மையாக பிரதிபலிக்கும் தூதுவர் ஆவார். அவரது உலகளாவிய பயணமும், இலங்கையுடன் உள்ள ஆழ்ந்த இணைப்பும் அவர் எம்மை பிரதிநிதித்துவப்படுத்த மிகச் சிறந்த நபர் என தெளிவாகக் காண்பித்துள்ளன. அவரை Home Lands குடும்பத்திற்கு வரவேற்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.” என்றார்.
இந்த கூட்டணி குறித்து பீட்டர் குருவிட்ட கருத்து தெரிவிக்கையில், “உண்மையான வெற்றியின் அர்த்தம், உங்களின் பாரம்பரியத்தில் வேரூன்றி இருப்பதும், அதே நேரத்தில் விசேடத்துவத்தை நோக்கி பயணிப்பதுமாகும். Home Lands இதைச் சாதித்துள்ளது. அவர்கள் நிர்மாணிக்கும் திட்டடங்கள் ஊடாக இலங்கையின் அடையாளத்தை உயிர்ப்பிக்கின்றனர். வீடுகளை மாத்திரமன்றி, அர்த்தமுள்ள மற்றும் வளமான வாழ்க்கைமுறைகளையும் அமைக்கின்ற இந்த வர்த்தகநாமத்துடன் இணைவதில் நான் பெருமை கொள்கிறேன்.” என்றார்.
இந்த கூட்டணியானது, தேசிய மற்றும் சர்வதேச மேடைகளில் இலங்கையின் மதிப்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில், இலங்கையின் முதல்தர ரியல் எஸ்டேட் வர்த்தகநாமமும் சர்வதேச பண்பாட்டு தூதுவரும் இணைந்து செயற்பட முடியும் என்பதைக் காண்பிக்கின்றது.