
Hettichஉடன்இணைந்துமுழுஅளவிலானவன்பொருள்தீர்வுகளைஅறிமுகப்படுத்தும் Delmege
175 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட, பன்முகப்படுத்தப்பட்ட வணிகத் துறைகளுக்கு பெயர் பெற்று விளங்குகின்ற, முன்னணி நிறுவனமான Delmege, 137 ஆண்டுகள் பழமையான, உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற தளபாடங்களுக்கான இணைந்த உபகரணங்கள், சமையலறை உபகரணங்கள் மற்றும் கதவுகளுக்கான இணைந்த உபகரணங்கள் ஆகியவற்றில், உயர் தர வர்த்தகநாமமான Hettich உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளதை பெருமையுடன் அறிவித்துள்ளது.
இந்த மூலோபாய கூட்டாண்மையானது, இலங்கைச் சந்தையில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது. காரணம், இது குடியிருப்பு மற்றும் வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதிநவீன, ஜேர்மனிய பொறியியல் வன்பொருள் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் உள்ளூர் தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Hettich வர்த்தகநாமத்தின் உலகளாவிய ரீதியில் பெருமைக்குரிய தயாரிப்பு வகைகள் துல்லியம், புத்தாக்கம், செயற்பாட்டுப் பயன்பாடு, சிறந்த ஆயுள் மற்றும் தரம் ஆகியவற்றுடன் சிறந்த செயல்திறனுக்கு பெயர் பெற்று விளங்குகின்றன.
இக்கூட்டாண்மை குறித்து கருத்து வெளியிட்ட Delmege Forsyth மூலோபாய வணிக மேம்பாடு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் அம்ரித் அதிஹெட்டி, “பொறியியல் மற்றும் புத்தாக்கங்களில் சிறந்து விளங்குகின்றமை தொடர்பான உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகநாமமான Hettich உடன் கைகோர்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். Hettich தளபாடங்களுக்கான இணைந்த உபகரணங்கள், சமையலறை உபகரணங்கள் மற்றும் கதவுகளுக்கான இணைந்த உபகரணங்களின் முழுமையான தயாரிப்புகளும் இலங்கை முழுவதும் உள்ள Delmege இன் விரிவான விநியோக வலையமைப்பு மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
இது குறித்து Vallibel One/Delmege Ltd நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தினுஷா பாஸ்கரன் தெரிவிக்கையில், “Delmege அதன் வாடிக்கையாளர்களுக்கு உயர்மட்ட தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் விளங்குகின்றது. Hettich தளபாடங்களுக்கான இணைந்த உபகரணங்கள், சமையலறை உபகரணங்கள் மற்றும் கதவுகளுக்கான இணைந்த உபகரணங்கள் ஆகியன, நாம் வழங்குகின்ற Delmege உட்புற அலங்கார தீர்வுகளின் செயற்பாடு, அழகியல் மற்றும் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் ஒன்றுடன் ஒன்று வலுவான ஒத்திசைவை உருவாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை”. என்றார்.
புத்தாக்கம் மற்றும் தனித்துவத்துக்கு பெயர் பெற்ற Hettich, உலக சந்தையில் வலுவான நற்பெயரைக் கொண்டுள்ளது. மேம்பட்ட இணைப்புகளுடனான தளபாட உபகரணங்கள், லாச்சு அமைப்புகள் மற்றும் ஸ்லைடிங் கதவு பொருத்துதல்களைக் கொண்டுள்ள அதே நேரத்தில், சமையலறை உபகரணங்கள் உயர்தர உள்ளார்ந்த சமையலறை தீர்வுகளைக் கொண்டுள்ளன. கதவுகளுக்கான உபகரணங்கள் குறிப்பாக மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் நவீன பாணி, அதிநவீன பூட்டுகள், கைப்பிடிகள் மற்றும் பாதுகாப்பு தீர்வுகளாக அமைகின்றன.
இவ்வர்த்தகநாமத்தின் தளபாடங்கள் மற்றும் பொருத்துதல்கள் கட்டடக் கலைஞர்கள், கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் விருப்பமான தெரிவாக அமைகின்றன. இந்த தயாரிப்புகள் Delmege இன் பரந்துபட்ட விநியோக வலையமைப்பு ஊடாக கிடைக்கப் பெறும் என்பதுடன், இலங்கை முழுவதுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு அதனை அணுகுவதற்கும் அது தொடர்பான உடனடி சேவையைப் பெறுவதற்கும் இது வாய்ப்பாக அமையும்.
இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் Hettich SAARC நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அண்ட்ரே எக்கோல்ட், “எமது மாயாஜால உட்புற தீர்வுகளை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்லும் பொருட்டு, இலங்கையின் புகழ்பெற்ற கூட்டு நிறுவனமான Delmege உடன் கூட்டுச் சேர்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஒத்துழைப்பானது, சந்தையை வடிவமைப்பதிலும், புத்தாக்கம், தரம் மற்றும் நேர்த்தியுடன் வாழிடங்களை மாற்றியமைப்பதிலும் ஒரு முக்கிய படியைக் காட்டுகிறது. அத்துடன் பரந்துபட்ட வீடுகள் மற்றும் வணிகங்கள் ஜேர்மனிய பொறியியல் தளபாட பொருத்துதல்கள், கதவு இணைப்பு உபகரணங்கள் மற்றும் உள்ளமைந்த உபகரணங்களின் சிறந்த அனுபவத்தை பெறுவதனை உறுதி செய்கின்றன.
இந்த கூட்டாண்மையானது, Delmege இன் தயாரிப்புகளை மேம்படுத்துவதோடு, முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட உட்புற அலங்காரம் மற்றும் கட்டடக்கலை தீர்வுகளில் இலங்கையின் முன்னணி வழங்குனராக நிறுவனத்தை நிலைநிறுத்துகிறது.
Delmege இன் நன்கு நிறுவப்பட்டுள்ள வலையமைப்பு மற்றும் Hettich இன் உலகளாவிய நற்பெயர் ஆகியவற்றுடன் இந்த ஒத்துழைப்பானது, உள்ளூர் நிபுணத்துவம் மற்றும் சேவைக்கான விசேடத்துவத்தைக் கொண்ட உயர்மட்ட தயாரிப்புகளை வழங்குவதை உறுதி செய்கிறது.
Delmege வழங்கும் Hettich சாதனங்கள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.delmege.com தளத்தை பார்வையிடவும்
Image caption – ஜேர்மனிய பொறியியலில் உருவாக்கப்பட்ட அதிநவீன உபகரண தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் உள்நாட்டு தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் Hettich உடன் ஒரு மூலோபாய உரிமைக்கான கூட்டாண்மையை அறிவித்துள்ள Delmege நிறுவனம்.