
First Capital தொடர்ந்தும் இலங்கையின் மிக சிறந்த மற்றும் பெறுமதியான 100 வர்த்தக நாமங்களில் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், முதலீட்டு வங்கி துறையில் உயர்ந்த தரப்படுத்தலையும் பெற்றுள்ளது.
JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னணி முழு முதலீட்டு -சேவைகளை வழங்கும் நிறுவனமுமான First Capital ஹோல்டிங்ஸ் பிஎல்சி, இலங்கையின் சிறந்த 100 மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் வரிசையில் Brand Finance இனால் தரப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டு வங்கியியல் பிரிவில் (AA) எனும் உயர்ந்த தரப்படுத்தல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தரப்படுத்தலின் ஊடாக, First Capital இலங்கையின் முதலீட்டு வங்கியியல் பிரிவில் தனது தலைமைத்துவத்தை மேலும் வலிமைப்படுத்தியதுடன், அதன் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை, வாடிக்கையாளர்களை மையப்படுத்திய மூலோபாயங்கள், நிறுவனத்தின் தொடர்ச்சியான வினைத்திறன், வெளிப்படைத்தன்மை, டிஜிட்டல் துறையில் புத்தாக்கம் மற்றும் சந்தை நோக்குடைய புத்தாக்கத் தீர்வுகள் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையிலும் இந்த தரப்படுத்தல் அமைந்துள்ளது.

First Capital ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் வீரசேகர கருத்துத் தெரிவிக்கையில், “முதலீட்டு வங்கியியலில் உயர் வர்த்தக நாம தரப்படுத்தலுடன், இலங்கையின் சிறந்த 100 மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்களில் ஒன்றாக கௌரவிக்கப்பட்டுள்ளமையினூடாக, நாம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளிலும் வாடிக்கையாளர்களை முன்னிலைப்படுத்துவதில் First Capital காண்பிக்கும் உறுதியான கவனம் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொள்வதில் எமது அணியினர் கவனம் செலுத்துவதுடன், பொருத்தமான, அணுகக்கூடிய மற்றும் தாக்கம் செலுத்தும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன் டிஜிட்டல் புத்தாக்கத்தை பயன்படுத்தி முதலீடுகளை மேற்கொள்வதை எளிமைப்படுத்துவதுடன், அதிகளவு ஈடுபாட்டைக் கொண்டிருக்கச் செய்கின்றனர். நிதிசார் உள்ளடக்கம், தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கி வலுவூட்டல் மற்றும் புத்தாக்கமான நிதிசார் தீர்வுகளினூடாக நீண்ட கால சுபீட்சத்தை ஏற்படுத்தும் First Capital இன் அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பரந்த நோக்கினை பிரதிபலிப்பதாகவும் இந்த சாதனை அமைந்துள்ளது.” என்றார்.
First Capital ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி ரந்தினித் மடநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்களில் மீண்டும் தரப்படுத்தப்பட்டுள்ளமையையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். வாடிக்கையாளர்களை மையப்படுத்திய எமது வழிமுறை, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு செவிமடுத்தல், தீர்வுகளை வடிவமைத்தல் மற்றும் ஒவ்வொரு முதலீட்டாளரும் நம்பிக்கை மற்றும் வலுவூட்டப்பட்டதாக உணர்வது போன்ற செயற்பாடுகளை பிரதிபலிப்பதாக இந்த கௌரவிப்பு அமைந்துள்ளது. அனைத்து இலங்கையர்களுக்கும் நிதிசார் தீர்மானங்களை மேற்கொள்வதில் அறிவு மற்றும் சாதனங்களை பயன்படுத்தக்கூடிய நிலைக்கு உயர்த்துவதற்கு, முதலீடு தொடர்பில் பரந்த சமூகத்தாருக்கு விழிப்புணர்வூட்டல் என்பது முன்னுரிமையானதாக அமைந்துள்ளது. இந்த முயற்சிகளுக்கு அப்பால், இந்த கௌரவிப்பு என்பது First Capital வர்த்தக நாமத்தின் வலிமை மற்றும் நம்பகத் தன்மையை வெளிப்படுத்துவதாக இந்த கௌரவிப்பு அமைந்துள்ளது. நம்பிக்கை, தொடர்ச்சியான வினைத்திறன் மற்றும் ஒவ்வொரு பகுதியிலும் பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வர்த்தக நாமம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.” என்றார்.
உலகின் முன்னணி சுயாதீன வர்த்தக நாம மதிப்பாய்வு மற்றும் மூலோபாய ஆலோசனை தரப்படுத்தல்களை முன்னெடுக்கும் Brand Finance UK இன் துணை நிறுவனமாக Brand Finance Lanka திகழ்கிறது. முதலீடு, வர்த்தக நாம நேர்மை நெறி மற்றும் வர்த்தக நாமத்தின் வினைத்திறன் ஆகியவற்றின் அடிப்படையிலான துரித முறையினூடாக வருடாந்தம் வர்த்தக நாமங்கள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. துரித நிதிசார் பகுப்பாய்வுகள் மற்றும் மூன்றாம் தரப்பு நுகர்வோர் உள்ளம்சங்கள் போன்றவற்றினூடாக தரப்படுத்தல்களுக்கு மேலும் ஆதரவளிக்கப்பட்டு, வர்த்தக நாமத்தின் வலிமை மற்றும் கீர்த்தி நாமத்துக்கான சுயாதீன மற்றும் இலக்கு சார் மதிப்பாய்வுகள் உறுதி செய்யப்படுகின்றன.
###.
படங்கள்
தில்ஷான் வீரசேகர – முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி, First Capital ஹோல்டிங்ஸ் பிஎல்சி