FACETS 2025 கண்காட்சியில் இலங்கையின் இரத்தினங்களின் பாரம்பரியத்தை அறியுங்கள்
– இது தெற்காசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி
இலங்கை இத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) தெற்காசியாவின் முதன்மையான இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka வின் 31ஆவது பதிப்பை பெருமையுடன் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. FACETS Sri Lanka 2025 கண்காட்சியானது, 2025 ஜனவரி 04 முதல் 06 வரை கொழும்பு Cinnamon Grand ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கான உலகளாவிய சந்திப்புப் புள்ளியான இந்த மதிப்புமிக்க கண்காட்சியானது, உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பட்டைதீட்டும் கலைஞர்கள், சேகரிப்பாளர்களை ஈர்க்கவுள்ளது
இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்களில் இலங்கையின் புகழ்பெற்ற பாரம்பரியத்தின் கொண்டாட்டமாக FACETS கண்காட்சி நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஒரு தீவு நாடான இலங்கை விலையுயர்ந்த இரத்தினக்கற்களுக்கு பெயர் பெற்று விளங்குவதன் மூலம், இரத்தினக்கல் உற்பத்தியில் உலகளாவிய தலைவனாக அங்கீகாரம் பெற்றுள்ளது. உலகின் மிகப் பழமையான வண்ணமிகு இரத்தினக் கற்களின் வளமான வரலாற்றைக் கொண்ட இலங்கை, சர்வதேச அளவில் மிகவும் விருப்பத்திற்குரிய பிரபலமான இரத்தினக் கற்களின் கவர்ச்சிகரமான தெரிவுகளை வழங்குகிறது. இந்த பொக்கிஷத்தை பூரணப்படுத்துவது நாட்டிலுள்ள விலைமதிப்பிட முடியாத கைவினைத்திறமை ஆகும், இது நவீன போக்குகளை ஆழமான கலாசார தாக்கங்களுடன் ஒன்றிணைத்து காலத்தால் அழியாத அழகை உருவாக்குகிறது.
FACETS Sri Lanka 2025 கண்காட்சியானது, Sapphire Night உள்ளிட்ட அற்புதமான நிகழ்வுகளை வழங்கவுள்ளதை உறுதியளிக்கிறது. இது பங்கேற்பாளர்களிடையே ஒரு வலையமைப்புத் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் கவர்ச்சிகரமான இரத்தினங்களைக் கொண்டாடுகின்ற ஒரு பிரத்தியேக தளத்தை வழங்கும். அத்துடன் இதிலுள்ள Story Corner பகுதியானது, தொழில்துறையின் நடைமுறைகள் மற்றும் செழிப்பான வரலாறு உள்ளிட்ட விடயங்களை பங்கேற்பாளர்கள் அறிந்து கொள்ள உதவும். இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள Power Breakfast நிகழ்வானது, ஒரு சுரங்கச் சுற்றுலாவாகும். இது இரத்தினச் சுரங்கம் மற்றும் தொழில்துறை வல்லுநர்களிடமிருந்து நேரடியான அறிவுப் பரிமாற்றத்தையும், கொழும்பின் முதன்மை முதலீட்டு நகரமும் வளர்ந்து வரும் பொருளாதார மையமுமான துறைமுக நகரிற்கான (Port City) விஜயம் உள்ளிட்டனவும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும். அது மாத்திரமன்றி VIP Golf Tournament போட்டித் தொடரும் இதில் உள்ளடங்குகின்றது. இது உயர்மட்ட பங்கேற்பாளர்களுக்கு பிரத்தியேக அனுபவங்களை உருவாக்குகிறது.
1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட FACETS Sri Lanka கண்காட்சியானது, உலகளாவிய அரங்கில் இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறையை காட்சிப்படுத்தி வருகின்றது. இலங்கை, விலை மதிப்பிட முடியாத இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்களுக்கான முதன்மையான இடம் எனும் நற்பெயரை இது உறுதிப்படுத்துகிறது. இக்கண்காட்சியானது, உலகம் முழுவதிலுமிருந்தான கொள்வனவாளர்களையும் கண்காட்சியாளர்களையும் தொடர்ச்சியாக ஈர்த்து வருவதோடு, இத்தொழில்துறையில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது.
FACETS Sri Lanka 2025 கண்காட்சி, இலங்கையின் செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டாடும் அதே வேளையில், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் இதயத்துடன் பங்கேற்பாளர்களை இணைக்கும் சிறந்த அனுபவத்தையும் வழங்குகிறது. கண்காட்சியாளர்களுக்கான பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு www.facetssrilanka.com அல்லது FACETS Sri Lanka உத்தியோபூர்வ Facebook மற்றும் Instagram பக்கங்களை பார்வையிடவும்.
ENDS