EVO by DIMO பிரிவை இணைந்து அறிமுகப்படுத்தும் DIMO மற்றும் Siemens
இலங்கையின் மின்சார வாகன (EV) சார்ஜிங் உட்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதற்காக DIMO நிறுவனத்தின் வலுசக்தி பிரிவினால் வடிவமைக்கப்பட்ட அதிநவீன தீர்வான ‘EVO by DIMO’, அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 11kW முதல் 360kW வரையிலான சார்ஜிங் கொள்ளளவுகளைக் கொண்ட இந்த அறிமுகமானது, நாட்டின் மின்சார வாகன கட்டமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இதன் மூலம், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட Siemens commercial EV chargers தொகுதிகளை DIMO நிறுவனம் இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதுடன், நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான வலுவான அடித்தளத்தையும் அமைக்கிறது.
Siemens commercial EV charging வகைகளானது அலுவலக வளாகங்கள், வர்த்தக கட்டடங்கள், விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள், உல்லாச விடுதிகள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகங்கள், தனியார் EV சார்ஜிங் நிலையங்கள் போன்ற அதிக மின்சாரத் தேவை கொண்ட இடங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் அதிகரித்து வரும் EV துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சார்ஜர்கள், உயர் செயல்திறன் மற்றும் வலுசக்தி பாதுகாப்புடன் உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பை வர்த்தக ரீதியான வாடிக்கையாளர்களுக்கு போட்டித் தன்மையான விலையில் வழங்குகின்றன.
EVO by DIMO ஊடாக, இலங்கையின் முதலாவது dual-gun AC 22kW சார்ஜர் ஆனது IP65 தரப்படுத்தலுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்களை சார்ஜ் செய்யக்கூடிய வசதி கிடைப்பதுடன், இது இலங்கையின் தட்பவெப்பநிலை மற்றும் வெளிப்புறச் சூழலுக்கு ஏற்றவாறு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், EVO by DIMO App செயலி ஊடாக நாடு முழுவதும் வர்த்தக ரீதியான EV சார்ஜிங் வலையமைப்பை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செயலி மூலம் பயனர்கள் தமக்கு அருகிலுள்ள சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிய முடியும். “No Wallet Needed” எனும் வசதி மூலம், முன்கூட்டிய கொடுப்பனவுகள் குறித்து கவலைப்படாமல், வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பணம் செலுத்தலாம். அத்துடன் சார்ஜிங் அமர்வுகளை ஆரம்பித்தல்/நிறைவு செய்தல், அதன் திறனைச் சோதித்தல், சார்ஜிங் நிறைவடைந்ததும் அது பற்றிய அறிவிப்புகளை பெறவும் பயனர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் முதலாவது நடமாடும் DC சார்ஜிங் வசதியையும் அறிமுகப்படுத்த EVO by DIMO திட்டமிட்டுள்ளது. அவசர காலங்களில் வாகனங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து சார்ஜ் செய்யும் வகையில், பிரத்தியேக வாகனமொன்றின் மூலம் 30kW DC சார்ஜிங் வசதியை வழங்க இது உத்தேசித்துள்ளது. Siemens EV சார்ஜர்கள் NFC தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், ஹோட்டல்கள் மற்றும் அலுவலகங்கள் தமது பணியாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக அணுகக்கூடிய கட்டுப்பாட்டு வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
EVO by DIMO தனது சொந்த வலையமைப்பை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், ஏனைய EV சார்ஜிங் வலையமைப்பு வழங்குநர்களுக்கு ஒரு நம்பகமான உபகரண மற்றும் சேவை வழங்குநராகவும் செயற்படத் திட்டமிட்டுள்ளது. தனது தொழில்நுட்பம், பொறியியல் நிபுணத்துவம் மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைத் திறன் மூலம் இலங்கையின் சார்ஜிங் கட்டமைப்பின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஆதரவளிக்க DIMO எதிர்பார்க்கிறது.
இந்த அறிமுகம் குறித்து DIMO நிறுவனத்தின் வலுசக்தி பிரிவின் பொது முகாமையாளர் ஷெஹான் அமரதுங்க கருத்துத் தெரிவிக்கையில், EVO by DIMO ஊடாக Siemens commercial EV chargers அறிமுகப்படுத்துவதானது, இலங்கைக்கு வலுவான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற சார்ஜிங் வலையமைப்பை உருவாக்குவதற்கான ஒரு தீர்மானம் மிக்க நடவடிக்கையாகும் என குறிப்பிட்டார்.
உயர் தரமான Siemens தொழில்நுட்பம், வலுவான விற்பனைக்குப் பின்னரான ஆதரவு மற்றும் கார் மற்றும் வலுசக்தி பொறியியல் துறையில் DIMO கொண்டுள்ள 85 ஆண்டுகால நிபுணத்துவம் ஆகியவற்றுடன், இலங்கையை சூழல் நட்பு மற்றும் வினைத்திறன் மிக்க மின்சார போக்குவரத்தை நோக்கி மாறும் பயணத்தில், EVO by DIMO ஒரு முக்கிய பங்கை வகிக்கத் தயாராக உள்ளது.