Emerald நிறுவனத்தின் புதிய முதன்மைக் காட்சியறை கொழும்பு 03 இல் திறந்து வைப்பு

Emerald நிறுவனத்தின் புதிய முதன்மைக் காட்சியறை கொழும்பு 03 இல் திறந்து வைப்பு

Off By Mic

இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தகநாமமான Emerald, கொழும்பு 03, R.A. டி மெல் மாவத்தை இல. 345 இல் அதன் முதன்மையான காட்சியறையை பிரமாண்டமாகத் திறந்து வைத்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது. இது இவ்வர்த்தகநாமம் கடந்து வந்த பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த புதிய காட்சியறையானது Emerald இன் விற்பனை வலையமைப்பில், தரம், புத்தாக்கம் மற்றும் காலத்தால் அழியாத நேர்த்தி மீதான அதன் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.

இந்த பிரமாண்டமான திறப்பு விழாவில், Emerald குழுமத்தின் முகாமைத்துவ உறுப்பினர்கள், ஊழியர்கள், மதிப்புமிக்க கூட்டாளர்கள், விசுவாசமான வாடிக்கையாளர்கள் மற்றும் ஃபேஷன் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதிநவீன போர்மல் ஆடைகள் முதல் சமகால கெசுவல் ஆடைகள் வரை பல்வேறு பாணிகளில் அமைந்த நுட்பம் மற்றும் ஆறுதலான உணர்வு ஆகியவற்றின் கலவையை வெளிப்படுத்தும் வகையிலான Emerald இன் நவீன ஆடவர் ஆடை வகைகளை ஆராய்வதற்கான பிரத்தியேக வாய்ப்பு இங்கு விருந்தினர்களுக்கு  கிடைக்கின்றது.

இது தொடர்பில் இந்த நிகழ்வில் தனது உற்சாகத்தை வெளிபபடுத்தி உரையாற்றிய Emerald International நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் A.F.M. இக்ராம், “இலங்கையின் ஃபேஷன் துறையில் எமது இருப்பை விரிவுபடுத்தி வலுப்படுத்தும் இந்த முதன்மைக் காட்சியறையானது, Emerald வர்த்தகநாமத்திற்கு ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. நவீன ஆடவர்களுக்கு நேர்த்தியையும் ஆறுதலையும் உள்ளடக்கிய உயர்தர ஆடவர் ஆடைகளை வழங்குவதே எமது குறிக்கோளாகும்.” என்றார்.

முகாமைத்துவ பணிப்பாளர் M.M.M இஹ்சான் கருத்து வெளியிடுகையில், “எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த ஆடவர் ஆடைத் தெரிவுகளை வழங்குவதே எமது தொலைநோக்குப் பார்வையாகும். அத்துடன் இந்த காட்சியறையானது கைவினைத்திறன், வடிவமைப்பு மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கான எமது அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். Emerald வர்த்தகநாமத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் அனுபவிக்க வரும் வாடிக்கையாளர்களை வரவேற்க நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.

பிரதம வணிக அதிகாரி அஹமட் இக்ராம் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த முதன்மை காட்சியறையானது, ஒரு விற்பனையகத்தையும் தாண்டிய ஒன்றாகும்; இது எமது வர்த்தகநாமத்தின் வளர்ச்சி மற்றும் புத்தாக்கங்களின் அடையாளமாகும். எமது வாடிக்கையாளர்கள் சிறந்த ஆடவர் ஆடை வகைகளை அணுகுவதை உறுதிசெய்து, ஒரு பிரத்தியேக ஷொப்பிங் அனுபவத்தை நாம் மிகக் கவனமாக ஏற்படுத்தியுள்ளோம்.” என்றார்.

நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளர் இஜாஸ் இஹ்சான் தெரிவிக்கையில், “எமது முதன்மைக் காட்சியைறையைத் திறப்பது எமது முழு குழுவினரின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். எமது காட்சியறைக்குள் நுழையும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் மிக உயர்ந்த சேவை மற்றும் தரத்திற்காக அறியப்படும் Emerald ஆடைகளை பெறுவதை உறுதி செய்வதே எமது குறிக்கோளாகும்.” என்றார்.

ஸ்மார்ட் கேசுவல், போர்மல் ஆடைகள் மற்றும் அன்றாட பயன்பாட்டு ஆடைகளை வழங்கும் சிந்தனையுடன், தெரிவு செய்யப்பட்ட ஆடைகளைக் கொண்ட புதிய முதன்மைக் காட்சியறையானது, ஆடவருக்கான ஃபேஷனில் முன்னணியில் திகழும் Emerald இன் நற்பெயரை மேலும் உறுதிப்படுத்துகிறது. Emerald Formals, Majesty, ED’s Array, Leonardo Collection உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடை வகைகளை வாடிக்கையாளர்கள் இங்கு தெரிவு செய்யலாம். அத்துடன் chinos, polos, casual shirts, denim, Utilitech pants, உள்ளாடைகள் மற்றும் பிரத்தியேகமான வாசனைத் திரவிய வகைகளும் நவீனத்துவம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் சமநிலையை பேணும் வகையில் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.