eMACH.ai ஐ அறிமுகப்படுத்தும் Intellect – கோட்பாடுகளின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட முதலாவது உருவாக்கக்கூடிய நுண்ணறிவு கொண்ட புதிய திறந்த நிதித் தளம் – இலங்கையின் நிதித் துறையில் புரட்சியை ஏற்படுத்துகிறது
eMACH.ai எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்க 329 Microservices, 175 APIs, 535 Events மூலம் வங்கிகளுக்கு உதவும்
நிறுவன மட்டத்திலான நிதித் தொழில்நுட்ப தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Intellect Design Arena Ltd நிறுவனம், இலங்கையில் eMACH.ai ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பிரத்தியேகமாக இலங்கையின் நிதித்துறைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தளமானது, கோட்பாடுகளின் சிந்தனை அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது, 329 நுண் சேவைகள், 535 நிகழ்வுகள், 1757 இற்கும் மேற்பட்ட API களை வழங்கும் முதலாவது கோட்பாடுகளின் சிந்தனையை அடிப்படையாகக் கொணட தளம் என்பதோடு, நிதி நிறுவனங்களுக்கு எதிர்காலத்திற்கு அவசியமான தீர்வுகளை உருவாக்கி, அவர்கள் உலகளாவிய போட்டித்தன்மை வாய்ந்தவர்களாக மாற உதவுகிறது. eMACH.ai ஆனது, வங்கி வாடிக்கையாளர்களை மையப்படுத்திய Retail, HNI, SME அல்லது Corporate மற்றும் அவர்களது நிதிப் பயணத்தில் காணப்படும் நிகழ்வுகள், வங்கிச் செயற்பாடுள் மற்றும் ஒழுங்குபடுத்தல் மற்றும் இணக்கப்பட்டு அதிகாரசபைகளால் உருவாக்கப்பட்ட விடயங்களை பராமரிக்கின்றது. வங்கியின் வாடிக்கையாளர்கள், தனிநபர்கள் மற்றும் வணிகங்களாக இருந்தாலும், அவர்கள் மீது கவனம் செலுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பால், வங்கிகள் போட்டித்தன்மையை மேம்படுத்தும் அதிநவீன தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்க உதவுகிறது. செயற்பாடுகள், விதிமுறைகள் அல்லது இணக்கத் தேவைகளால் உருவாக்கப்பட்ட நிகழ்வுகளை நிர்வகிக்கவும் இது வங்கிகளுக்கு உதவுகிறது.
இலங்கை தனது டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது. நிதித் தொழில்நுட்பங்கள் உலகளாவிய ரீதியில் நிதிச் சேவை துறையை மிக வேகமாக மீள் வடிவமைத்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் இலங்கையில் eMACH.ai இன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் கொடுப்பனவுகள், AI- அடிப்படையிலான வங்கியியல் மற்றும் திறந்த வங்கியியல் கட்டமைப்புகள், கிளவுட் அடிப்படையிலான கட்டமைப்புகள் போன்ற நிதித் தொழில்நுட்பங்கள் உலகளாவிய ரீதியில் மிகவும் பொதுவானதாகி வரும் நிலையில், தற்போது இலங்கையும் ஒரு பாரிய டிஜிட்டல் மாற்றத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் eMACH.ai இன் அறிமுகமானது இலங்கையில் உள்ள வங்கிகளுக்கு நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்தவும், செயற்பாடுகளை உரிய வகையில் நெறிப்படுத்தவும், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவைகளை உருவாக்கவும் உதவுகின்றது. இந்த அதிநவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து, அத்தொழில்நுட்பங்களை உள்வாங்கி, டிஜிட்டல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமும், உரிய ஒழுங்குமுறை கட்டமைப்பை பேணுவதன் மூலமும், இலங்கையின் நிதி நிறுவனங்களால் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து மேலும் திறனானதாக மேம்படமுடியும்.
eMACH.ai ஆனது வங்கிகளுக்கான தொழில்நுட்பத்தை எளிதாக்கி, அவை மேம்படுத்தப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் தீர்வுகளை உருவாக்க உதவுகின்றன. ஒரு விடயத்தை உருவாக்கக்கூடிய இதிலுள்ள கட்டமைப்பானது, விரைவான தொழில்நுட்ப மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் போது, வாடிக்கையாளர்களின் மாறுபட்ட தேவைகளை வங்கிகளால் பூர்த்தி செய்ய உதவுகிறது. தனியே தொழில்நுட்பத்தை மாத்திரம் மேம்படுத்துவதை விட, வாடிக்கையாளர்களின் மீது கவனம் செலுத்தவும், முக்கிய வணிக தாக்கங்களை ஏற்படுத்தவும் இந்த தளம் வங்கிகளுக்கு உதவுகிறது.
Intellect ஆனது HDFC, Regional Development Bank (RDB), Cargills Bank, Commercial Development Bank (CDB), Central Finance, Seylan Bank, Union Bank of Colombo உள்ளிட்ட இலங்கையின் உயர்மட்ட நிதி நிறுவனங்களுடன் ஏற்கனவே இணைந்து செயற்பட்டு வருகின்றது. இந்த நிறுவனங்கள் தங்கள் செயற்பாட்டுத் திறன் மற்றும் வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் மாற்ற மூலோபாயங்களை பின்பற்றுவதில் முன்னணியில் செயற்படுகின்றன. அந்த வகையில் eMACH.ai இன் அறிமுகத்துடன், இலங்கையில் தனது கூட்டாண்மைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும், மேலும் பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான நிதிச் சேவைகளை வழங்குவதற்கு உதவுவதனையும் Intellect நோக்கமாகக் கொண்டுள்ளது.
eMACH.ai மூலம், இலங்கையில் உள்ள வங்கிகள் தற்போது உலகளாவிய ரீதியில் காணப்படும் முன்னேற்ற அம்சங்களைப் பெற முடியும். அந்த வகையில் இத்ததளமானது,
- 329 நுண் சேவைகள், 1757 APIகள், 535 நிகழ்வுள் மூலம் வங்கிகள் எதிர்காலத்திற்கு ஏற்ற தீர்வுகளை வடிவமைக்க உதவுகிறது
- நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட நுண்ணறிவுக்கான ஊக்கியாக செயற்பட்டு, Intellect இன் தலைமைத்துவ வழிகாட்டல் மூலம் வங்கிகள் முன்னேற்றமடைய உதவுகிறது
- நிதி தொடர்பான புத்தாக்க கண்டுபிடிப்புகளை வரவேற்று, இலங்கையின் நிதி எதிர்காலத்தை மீள்வடிவமைத்து உலகளாவிய ரீதியில் போட்டியிட உதவுகிறது
- iTurmeric, MACH ஆகியவற்றின் மூலமான உருவாக்கக்கூடிய தளம் மற்றும் Purple Fabric மூலம் முடிவெடுக்கும்-தர நுண்ணறிவு தளம் ஆகியவற்றின் மூலம் செயற்பாடுகளை மாற்றியமைப்பதன் மூலமும் வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்துவதன் மூலமும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க உதவுகிறது
eMACH.ai இன் அறிமுகம் தொடர்பில் கருத்து வெளியிட்ட Intellect Design Arena Ltd நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) எஸ்.வி. ரமணன், “eMACH.ai இன் அறிமுகத்தின் மூலம் நாம் ஒரு தளமொன்றின் அறிமுகத்தை மாத்திரம் முன்னெடுக்கவில்லை என்பதோடு, இலங்கையில் வங்கித்துறையின் எதிர்காலத்திற்கான ஒரு கதவை நாம் திறந்து வைத்துள்ளோம். நுண்ணறிவு, சுறுசுறுப்புத் தன்மை, புத்தாக்கம் ஆகியவற்றின் மூலம் நிதி நிறுவனங்களை வழிநடத்துவதே எமது குறிக்கோளாகும். முதன் முறையாக கோட்பாடுகளின் சிந்தனையை அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள eMACH.ai ஆனது, நிதிச் சூழலை மாற்றியமைக்கவும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், டிஜிட்டலை உள்வாங்குவதை விரைவுபடுத்தவும், நெகிழ்வுத் தன்மையை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளமானது, வங்கிகளுக்கு புரட்சியை ஏற்படுத்துவதற்கான ஒரு மாற்றத்தை வழங்குவதோடு மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியில் இலங்கையை ஒரு நிதியியல் அதிகார மையமாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய படியாகும்.” என்றார்.
Intellect Design Arena Limited பற்றி
Intellect Design Arena Ltd நிறுவனமானது, நிதித் தொழில்நுட்பத்தில் உலகளாவிய ரீதியில் முன்னணியில் திகழ்கின்றது. இது 57 நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களுக்கு உருவாக்கக்கூடிய மற்றும் நுண்ணறிவுமிக்க தீர்வுகளை வழங்குகிறது. இந்நிறுவனத்தின் eMACH.ai தளமானது, புரட்சிகரமான முதலாவது கோட்பாடுகளின் சிந்தனையின் அடிப்படையிலான, நிறுவன இணைப்பு கொண்ட நுண்ணறிவுத் தளமான eMACH.ai ஆனது, உலகின் மிக விரிவான, உருவாக்கக்கூடிய மற்றும் நுண்ணறிவுமிக்க உலகின் மிக மேம்பட்ட திறந்த நிதித் தீர்வாகும். இது 329 நுண் சேவைகள், 535 நிகழ்வுகள் மற்றும் 1757 APIகள் மூலம், எதிர்காலத்திற்கு ஏற்ற போட்டித் தன்மை வாய்ந்த தீர்வுகளை உருவாக்க வங்கிகளுக்கு உதவுகிறது.
Intellect ஆனது, 30 வருடங்களுக்கும் மேலான அனுபவத்துடன், Global Consumer Banking (iGCB), Global Transaction Banking (iGTB), IntellectAI, Digital Technology for Commerce (iDTC) ஆகிய 4 முக்கிய வணிகப் பிரிவுகள் மூலம், முழுமையான வங்கி மற்றும் காப்புறுதித் தீர்வுகளை வழங்குகிறது. வடிவமைப்பு ரீதியான சிந்தனையில் முன்னோடியாக Intellect விளங்குகின்றது. அதன் 8012 நிதித் தொழில்நுட்ப வடிவமைப்பு மையமானது, இந்த அணுகுமுறைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதலாவது வடிவமைப்பு மையமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய ரீதியில் 325 இற்கும் அதிக நிறுவனங்களுக்கு Intellect சேவையாற்றி வருவதோடு, அவை முக்கிய நிதி மையங்களில் உள்ள பல்வேறு நிபுணர்கள் குழுவின் ஆதரவைப் பெற்று இயங்கி வருகின்றன. இது தொடர்பான மேலதிக தகவலுக்கு, https://www.intellectdesign.com/ இற்கு நுழையவும்.
ஊடக தகவல்களுக்கு: Kaushalya Kavindi PR Wire Mob: 074 442 0025 Email: [email protected] | முதலீட்டாளர் விடயங்களுக்கு: Praveen Malik Intellect Design Arena Limited Mob: +91 89397 82837 Email: [email protected] |