‘Elite Circle’ 2026 விநியோகஸ்தர் மாநாட்டில் சிறந்த விற்பனையாளர்களை கௌரவித்த Sathosa Motors PLC
இலங்கையில் Isuzu வாகனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Sathosa Motors PLC, தனது புகழ்பெற்ற விநியோகஸ்தர் மாநாடான ‘The Elite Circle’ 2026 நிகழ்வை அண்மையில் மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடத்தியது. அங்கீகாரம் மற்றும் பாராட்டுகளை வழங்கும் ஒரு மாலைப் பொழுதாக அமைந்த இந்த நிகழ்வில், நிறுவனத்தின் நாடளாவிய ரீதியில் உள்ள உதிரிப்பாக விற்பனையாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இலங்கை முழுவதும் Isuzu அசல் உதிரிப்பாக வலையமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த விநியோகஸ்தர்களின் சிறந்த சாதனைகள் மற்றும் வெற்றிகளை கொண்டாடும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. ஒரு பிரம்மாண்டமான மற்றும் மறக்கமுடியாத தருணமாக அமைந்த இந்த மாநாடு, நிறுவனத்தின் நீண்டகால விநியோகஸ்தர் கூட்டாண்மை மீதான ஆழமான மரியாதை மற்றும் வர்த்தகநாமத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் தொடர்ந்து வழங்கி வரும் பங்களிப்பை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
1962 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் Isuzu வாகனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக விளங்கும் Sathosa Motors PLC நிறுவனம், உள்ளூர் வாகனத் துறையில் ஒரு நம்பகமான பெயராக உருவெடுத்துள்ளது. விநியோகஸ்தர்களின் அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனைப் பாராட்டும் வகையிலும், நம்பகத்தன்மை, சிறந்த சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றிற்கான நிறுவனத்தின் கடப்பாட்டிற்கு அவர்கள் வழங்கி வரும் ஆதரவிற்காகவும் இந்த 2026 விநியோகஸ்தர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் Isuzu Motors Asia நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நொபுஹிசா மியாஷிட்டா (Nobuhisa Miyashita) கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன் Access Group of Companies நிறுவனத்தின் தலைவர் சுமால் பெரேரா, Access Group பிரதி தலைவர் கிறிஸ்டோபர் ஜோசுவா, Sathosa Motors PLC முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீமால் பெனாண்டோ, நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் டேர்க் ஜோசுவா மற்றும் உதிரிப்பாகப் பிரிவு பொது முகாமையாளர் ரவிலால் ஆலோகபண்டார உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
Isuzu Motors Limited, Isuzu Motors International Operations, ITOCHU Corporation ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த கொண்டாட்ட நிகழ்வுகளில் இணைந்து கொண்டனர். இது இலங்கையில் Isuzu வர்த்தகநாமத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வலுவான சர்வதேச கூட்டாண்மைகளுக்கான கௌரவமாக அமைந்தது.
உதிரிப்பாகப் பிரிவு பொது முகாமையாளர் ரவிலால் ஆலோகபண்டார கருத்துத் தெரிவிக்கையில், “’Elite Circle’ என்பது விசேடத்துவத்தை கொண்டாடும் ஒரு நிகழ்வாக மட்டுமல்லாமல், Sathosa Motors PLC மற்றும் அதன் விநியோகஸ்தர் வலையமைப்பின் வெற்றியை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லும் வலுவான உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் தளமாகவும் அமைந்தது.” என்றார். நிறுவனத்தின் உதிரிப்பாக வலையமைப்பை மேலும் வலுப்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்கவும் தனது கூட்டாளர்களுடன் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை இந்த நிகழ்வு உறுதிப்படுத்தியது.
வலையமைப்பில் மிகச்சிறந்த முறையில் செயற்பட்ட விநியோகஸ்தர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டமை இந்த நிகழ்வின் சிறப்பம்சமாகும். கடந்த ஒரு வருடத்தில் விநியோகஸ்தர்களின் சாதனைகளைப் பிரதிபலிக்கும் விரிவான செயல்திறன்களின் அளவுகோல்களின் அடிப்படையில் அவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். அதிக சாதனைகளை புரிந்தவர்கள் பிளாட்டினம் (Platinum), தங்கம் (Gold) மற்றும் வெள்ளி (Silver) ஆகிய மட்டங்களின் கீழ் அங்கீகாரம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் 150 இற்கும் மேற்பட்ட உதிரிப்பாக விநியோகஸ்தர்களைக் கொண்ட வலையமைப்பைக் கொண்டுள்ள Sathosa Motors PLC, அவர்களில் பலருடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து செயற்பட்டு வருகிறது. நம்பிக்கை, விசுவாசம், பரஸ்பர முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட உறவுகளை நிறுவனம் தொடர்ந்து பேணி வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் உதிரிப்பாக துறையில் நிறுவனம் கண்டுள்ள முக்கிய வளர்ச்சிக்கு, அதன் விநியோகஸ்தர் சமூகத்தின் அர்ப்பணிப்பே முக்கிய காரணமாகும் என நிறுவனம் சுட்டிக்காட்டுகின்றது.