DIMO Agribusinesses, LOVOL ஹாவெஸ்டர் ‘பஞ்ச மஹா புதையல்’ வெற்றியாளர்கள் Agri Machinery Prestige Awards 2024/25 விழாவில் அறிவிப்பு

DIMO Agribusinesses நிறுவனத்தின் விவசாய இயந்திரப் பிரிவு அறிமுகப்படுத்திய LOVOL ஹாவெஸ்டர் ‘பஞ்ச மஹா புதையல்’ திட்டத்தின் மூலம், DIMO பட்டா லொறியை வெல்லும் வாய்ப்பைப் பெற்ற LOVOL வாடிக்கையாளர்களில் ஐவர் அண்மையில் தெரிவு செய்யப்பட்டனர். அந்த வகையில், நுரைச்சோலை W.N.R. பெனாண்டோ, தெஹியத்தகண்டி D.M. ஹீங்மெனிகா, மடஹாபொல K.W.S. சாந்த, எத்திலிவெவ J.P.L. சஞ்சீவ மற்றும் அத்துன்கஹகொட்டுவ W.S. சுரங்க ஆகியோர் இந்த DIMO பட்டா லொறிகளை வென்றுள்ளனர்.
LOVOL ஹாவெஸ்டர் ‘பஞ்ச மஹா புதையல்’ ஆனது, இதுவரை நாட்டின் விவசாய இயந்திரவியல் துறையில் குலுக்கல் பரிசு வழங்கும் திட்டங்களில் வழங்கப்பட்ட மிகப் பெறுமதி வாய்ந்த பரிசாக கருதப்படுகிறது. கடந்த சிறுபோக பயிர்ச் செய்கை காலத்தில், 2025 மே 01 முதல் ஜூலை 31 வரை LOVOL ஹாவெஸ்டர் கொள்வனவு செய்த வாடிக்கையாளர்களில் இருந்து இந்த ஐந்து வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டனர். இந்தக் காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட ஒவ்வொரு புதிய LOVOL RG108 Plus ஹார்வெஸ்டரும் குலுக்கலுக்கு தகுதி பெற்றது.
அண்மையில் DIMO Agribusinesses நிறுவனத்தின் விவசாய இயந்திரப் பிரிவு முகவர்களை கௌரவிக்கின்ற Agri Machinery Prestige Awards 2024/25 விழாவில் இந்த பரிசுகளுக்கான குலுக்கல் முன்னெடுக்கப்பட்டது. மேல் மாகாண வருமான வரித் திணைக்கள அதிகாரியின் மேற்பார்வையில், சட்ட ரீதியாக, வெளிப்படைப்படைத் தன்மையுடன் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதோடு, இது Facebook சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. பரிசுகள் வெற்றியாளர்களின் சார்பில், அவர்கள் ஹாவெஸ்டர் கொள்வனவு செய்த முகவர்களிடம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டன. இந்த லொறிகளை விரைவில் வெற்றியாளர்களுக்கு வழங்கி வைப்பதற்கான நடவடிக்கையை நிறுவனம் ஏற்கனவே எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
LOVOL ஹாவெஸ்டர் ‘பஞ்ச மஹா புதையல்’ போன்ற திட்டங்கள் மூலம் DIMO Agribusinesses நிறுவனத்தின் விவசாய இயந்திரப் பிரிவு, நாட்டின் விவசாயத் துறையின் இயந்திரமயமாதலை வேகமாக்கும் நோக்கத்துடன் செயற்படுகிறது. இத்தகைய திட்டங்களில் வழங்கப்படும் பெறுமதி வாய்ந்த பரிசுகள் மூலம், விவசாய இயந்திர உரிமையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே DIMO Agribusinesses நிறுவனத்தின் முதன்மையான குறிக்கோளாகும்.
Agri Machinery Prestige Awards 2024/25 விழா Monarch Imperial ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. இதில் DIMO Agribusinesses நிறுவனத்தின் விவசாய இயந்திரப் பிரிவு விநியோகிக்கும் Mahindra, Swaraj tractors, Vikyno two wheel tractors, Bison boat tractors, LOVOL ஹாவெஸ்டர்கள் ஆகியவற்றின் விற்பனை, சேவை மற்றும் உதிரிப் பாகங்கள் பிரிவுகளைச் சேர்ந்த, நாடு முழுவதிலிருந்து முகவர்கள் கலந்து கொண்டனர். அதிக விற்பனையை பதிவு செய்த முகவர்கள் பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். DIMO Agribusinesses நிறுவனத்தின் விவசாய இயந்திரப் பிரிவு, 135 இற்கும் மேற்பட்ட முகவர்கள் கொண்ட வலையமைப்பின் மூலம், நாட்டின் விவசாய இயந்திரமயமாக்கலில் முக்கிய பங்கு வகிக்கிறது. சேவை வழங்கல் பிரிவில் தேசிய ரீதியில் சிறந்த முகவராக வவுனியாவின் MF Tractor Works நிறுவனத்தின் என். புவனேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார். உதிரிப் பாகங்கள் மற்றும் விற்பனை பிரிவுகளில் வெற்றியாளராக அநுராதபுரத்தின் AVP Motors நிறுவனத்தின் என்.பி.எல். குணவர்தன தெரிவு செய்யப்பட்டார். இம்முறை விருது விழாவில் வளர்ந்துவரும் முகவர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன், நீண்ட காலமாக நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வரும் முகவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.