David Pieris Automobiles அறிமுகப்படுத்திய புத்தம் புதிய BAIC X3e – புதிய அனுபவத்தின் தொடக்கம்!

David Pieris Automobiles அறிமுகப்படுத்திய புத்தம் புதிய BAIC X3e – புதிய அனுபவத்தின் தொடக்கம்!

Off By

David Pieris Group of Companies இன் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான David Pieris Automobiles (Private) Limited, புத்தம் புதிய BAIC X3e வாகனத்தை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் crossover/SUV வகையைச் சேர்ந்த வாகனத்தின் அறிமுகம் கொழும்பு BMICH இல் நடைபெற்ற Auto Vision Motor Show 2026 கண்காட்சியில் இடம்பெற்றது. இலங்கையின் மோட்டார் வாகன ஆர்வலர்களுக்கு மின்சார வாகனத் தெரிவில் மற்றுமொரு முக்கிய படிமுறையை இதனூடாக ஏற்படுத்தியுள்ளது.

“வாழ்க்கையை இலகுவாக்கும் EV” (“The EV That Makes Life Easy”) என்ற தொனிப்பொருளின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள BAIC X3e, நவீன தொழில்நுட்பம், அன்றாடப் பயன்பாட்டிற்கான ஏதுவான தன்மை மற்றும் சிறந்த மதிப்பு ஆகியவற்றின் சேர்க்கையின் ஊடாக மின்சார வாகனப் பயன்பாட்டிற்கான மாற்றத்தை எளிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய வாகன செலுத்துநர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள BAIC X3e, குறைந்த பராமரிப்புச் செலவு, திறமையான பயன்பாட்டுத் தூரம், அதிவேகமாக சார்ஜ் செய்யும் வசதி, குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற விசாலமான உட்புற அமைப்பு, புத்தாக்கம்மிக்க பாதுகாப்பு மற்றும் வாகனம் செலுத்துனர் உதவித் தொழினுட்பங்கள் (intelligent safety and driver assistance) மற்றும் David Pieris Automobiles நிறுவனத்தின் நம்பிக்கையான விற்பனைக்குப் பிந்தைய சேவை ஆகியவற்றை வழங்குகிறது. இவை அனைத்தும் இணைந்து, இலங்கை குடும்பங்களுக்கு மின்சார வாகனக் கட்டமைப்பை (electric mobility) மேலும் எளிதானதாகவும், வசதியானதாகவும், கட்டுப்படியாகும் விலையிலும் கிடைக்கச் செய்கின்றன.

இந்த வாகனம் கம்பீரமான மற்றும் நவீன crossover வடிவமைப்பு, விசாலமான மற்றும் அதிகளவு இடவசதியைக் கொண்ட உட்புறக் கெபின், மேம்பட்ட இணைப்பு வசதிகளுடன் கூடிய smart digital cockpit, level 2 வாகனம் செலுத்துனர் உதவித் தொழினுட்பங்கள், திறமையான மின்சார ஆற்றல் திறன், முழுமையான பாதுகாப்பு அம்சங்கள், அதிவேகமாக சார்ஜ் செய்யும் வசதி மற்றும் மதிநுட்பமான சுய தரிப்பு (intelligent auto parking) தொகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த அறிமுகம் தொடர்பில், David Pieris Automobiles (Private) Limited பணிப்பாளர் திரு.மஹேஷ் குணதிலக கருத்துத் தெரிவிக்கையில், “BAIC X3e, செயல்முறைப் பயன்பாடு (practicality), வசதி மற்றும் குறைந்த விலை ஆகியவற்றில் எவ்வித சமரசமும் இன்றி மின்சார வாகனப் பயன்பாட்டை பின்பற்ற விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அனைவருக்கும் வாகனங்கள் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என David Pieris Automobiles நிறுவனத்தைச் சேர்ந்த நாம் நம்புகிறோம். BAIC X3e, அதனை துல்லியமாக பூர்த்தி செய்கிறது. எமது நாடளாவிய விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பின் ஆதரவுடன், நம்பகமான சேவை மற்றும் நீண்டகால உதவிச் சேவையின் உத்தரவாதத்துடன் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் மின்சார வாகனப் பயன்பாட்டிற்கு மாற முடியும்.” என்றார்.

BAIC X3e இரு தெரிவுகளில் கிடைக்கின்றன (BAIC X3e Pro & BAIC X3e Max).

David Pieris Automobiles இடமிருந்து, BAIC வாடிக்கையாளர்களுக்கு அசல் உதிரிப்பாகங்கள், திட்டமிடப்பட்ட பராமரிப்பு சேவைகள், பழுதுபார்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் உள்ளடங்கலாக, விரிவான விற்பனைக்குப் பிந்தைய சேவை போன்றவற்றுக்கான வலையமைப்பை ஏற்கனவே நிறுவியுள்ளது. கொழும்பு, ஹைட் பார்க் கோனரில் முழுமையான BAIC பிரத்தியேக சேவை நிலையம் இயங்குவதுடன், நாடளாவிய முகவர்கள் மற்றும் சேவை வலையமைப்பின் ஆதரவும் இதற்கு வழங்கப்படுகின்றது.

BAIC இன் பிரதான காட்சியறை பத்தரமுல்லை, பன்னிப்பிட்டிய வீதியில் அமைந்துள்ளதுடன், குருணாகல், மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய இடங்களில் இதன் கிளைகளும் அமைந்துள்ளன. நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்வதை இது உறுதிசெய்கின்றது.

வாடிக்கையாளர்கள் 0114 700 678 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டும், www.baicsrilanka.com எனும் இணையத்தளத்தை பார்வையிட்டு அல்லது BAIC Sri Lanka Facebook/Instagram இல் Follow செய்வதனூடாக மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.