Ceylon Motor Show 2025 கண்காட்சியில் மைய இடத்தைப் பிடித்த Suzuki Grand Vitara மற்றும் Yamaha FZ-S FI

Off By Mic

Al-Futtaim குழுமத்தின் பெருமைமிக்க உறுப்பினரான Associated Motorways (Private) Limited (AMW) மிகவும் மதிப்புமிக்க 2025 சிலோன் மோட்டார் ஷோ (Ceylon Motor Show 2025) வாகன கண்காட்சியில் முற்றிலும் புதிய Suzuki Grand Vitara வாகனம் மற்றும் புதிய Yamaha FZ-S FI  மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியதன் மூலம் இலங்கையின் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சந்தையில் தனது தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது. BMICH இல் இடம்பெற்ற இக்கண்காட்சியில், AMW காட்சிக் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜப்பான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற சர்வதேச விருந்தினர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த மைல்கல் நிகழ்வானது உலகளாவிய முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

இந்த வாகனங்களின் அறிமுக விழாவிற்கு அனைவரையும் வரவேற்ற AMW இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜவஹர் கணேஷ், புத்தாக்கம், வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட செயற்பாடு மற்றும் வலுவான சர்வதேசப் பங்காளித்துவங்கள் ஆகியவற்றில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுத்தினார்.

ஜப்பானியத் தூதரகத்தின் பிரதி பிரதானியான Kamoshida Naoaki (கமோஷிடா நவோகி), முதல் செயலாளர் சாச்சி தனகா (Sachie Tanaka) உடன் இணைந்து இந்த அறிமுக விழாவில் கலந்து கொண்டார். இது ஜப்பானின் பெறுமதிவாய்ந்த ஆதரவை அடையாளப்படுத்துவதுடன், வாகனத் துறையில் ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையேயான பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

Al-Futtaim குழுமத்தின் முக்கிய சர்வதேச விருந்தினர்களான, நிறுவனத்தின் வாகனப் பிரிவின் தலைவர் Paul Willis, வாகனப் பிரிவின் பிரதம நிதி அதிகாரி Dmitrii Bogatyrev, வளர்ந்து வரும் சந்தைகளின் முகாமைத்துவப் பணிப்பாளர் Robert McAllister, வாகனப் பிரிவின் மனித வளப் பணிப்பாளர் Amr Diab, நிதிக் குழும பொது முகாமையாளர் Paul Wagstaff, மனித வளக் குழும பொது முகாமையாளர் Jetson Daniel ஆகியோரும் இந்த முக்கிய நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய AMW நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜவஹர் கணேஷ், “இந்த அறிமுகமானது, இலங்கைக்கும் உலகளாவிய வாகனத் தொழில்துறைக்கும் இடையிலான இணைப்பில் AMW இன் வகிபாகத்தைக் குறிக்கிறது. இது இரண்டு ஒப்பிட முடியாத வாகனங்களின் அறிமுகத்தைத் தாண்டிய நிகழ்வாகும். Al-Futtaim குழுமத்தின் கீழுள்ள Nissan, Suzuki, Renault, Yamaha ஆகியவற்றுடனான எமது நீண்டகாலப் பங்காளித்துவங்கள் மூலம் புத்தாக்கம், தரம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை இலங்கை நுகர்வோருக்கு தொடர்ச்சியாக வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கை வாடிக்கையாளர்களுக்கு பெரும் மதிப்பை வழங்க, உலகளாவிய தலைவர்களுடன் நீடித்த பங்காளித்துவங்களை உருவாக்குவதை AMW தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. இந்நிகழ்வானது விசேடத்துவம், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர்களுடனான ஈடுபாட்டிற்கான எமது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.” என்றார்.

இந்நிகழ்ச்சியின் போது, சமகால நுகர்வோருக்குப் பொருத்தமான அதிநவீன தொழில்நுட்பம், நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ள Suzuki Grand Vitara SUV மற்றும் Yamaha FZ-S FI ஆகியன உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன. அது மாத்திரமன்றி, Suzuki Jimny, Suzuki Fronx, Suzuki Celerio, Nissan Magnite, Yamaha மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பரந்துபட்ட வாகனங்களையும் AMW காட்சிப்படுத்தியது. இது நிறுவனத்தின் விரிவான தயாரிப்பு வரிசையைப் பற்றி பார்வையாளர்களுக்கு விரிவான புரிதலை ஏற்படுத்தியது.

Suzuki Grand Vitara
Suzuki Grand Vitara SUV ஆனது, அதிநவீன தொழில்நுட்பம், உறுதியான வடிவமைப்பு மற்றும் உயர்ந்த இயக்கவியல் ஆகியவற்றை தடையின்றி ஒன்றிணைக்கும் ஒரு புதிய தலைமுறை SUV ஆகும். அதன் எதிர்காலத்திற்கு ஏற்ற வடிவமைப்பு மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள Grand Vitara, பிரீமியம் கைவினைப்பொருளான chrome grille, துல்லிமான 3-point LED DRLs, பிரத்தியேகமாக tail lamps மற்றும் R17 துல்லியமான வெட்டு கொண்ட alloy wheels ஆகியவற்றைக் கொண்டுள்ளதன் மூலம் கவனத்தை ஈர்க்கிறது. இது ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வலுவையும், நேர்த்தியையும் பிரதிபலிக்கிறது.

ஹைப்ரிட் மற்றும் பெற்றோல் ஆகிய இரு வகைகளிலும் கிடைக்கும் Grand Vitara, பல்வேறு செலுத்தும் தெரிவுகளைக் கொண்டுள்ளது.

Grand Vitara Alpha+ (O) e-CVT மேம்பட்ட ஹைப்ரிட் செயல்திறனை வழங்குகிறது. இது பெற்றோல் மற்றும் மின்சார சக்தியை ஒப்பிட முடியாத எரிபொருள் சிக்கனம், மிருதுவான பயணம், சூழல் நட்பான வாகன செலுத்துகை மற்றும் அதிநவீன மின்சார – ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை ஒன்றிணைக்கிறது.

Grand Vitara Alpha (O) 4WD AT ஆனது, Suzuki இன் நுண்ணறிவார்ந்த AllGrip 4WD system இன் உண்மையான சாகசத்தை உள்ளடக்கியுள்ளது. இது பெற்றோல் வகைக்கு மட்டுமே பிரத்தியேகமாகக் கிடைக்கிறது. இது Auto, Sport, Snow, Lock என நான்கு தெரிவு வாகன செலுத்தல் முறைகளுடன், எந்தவொரு நிலப்பரப்பிலும் உயர்வான இழுவையையும், கட்டுப்பாட்டையும், நம்பிக்கையையும் வழங்குகிறது.

இதன் உள்ளே, ஒரு பரந்த sunroof, காற்றோட்டமான ஆசனங்கள், digital instrument cluster, cruise control, paddle shifters, PM 2.5 cabin காற்று வடிகட்டி ஆகியவற்றுடன், வசதி மற்றும் சௌகரியத்திற்கான அம்சங்களை Grand Vitara வழங்குகிறது. இது எல்லா நேரங்களிலும் தூய்மையான, புத்துணர்ச்சியூட்டும் காற்றை வழங்குகிறது.

Head-Up Display, 360° View Camera, Wireless Charging Dock, ஒவ்வொரு பயணத்திலும் தடையற்ற இணைப்பையும், உள்ளுணர்வுக்கு ஏற்ற SmartPlay Pro+ infotainment system உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களுடன் மேலும் மேம்பட்ட அனுபவத்தை வழங்குகிறது.

உயர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 6 Airbag, Tyre Pressure Monitoring System (TPMS), Hill Descent Control, Hill Hold Assist, Suzuki இனால் உருவாக்கப்பட்ட TECT இயங்குதளம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பயணிகளுக்கும் விரிவான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

ஸ்டைல், புத்தாக்கம், திறன் ஆகியவற்றின் சரியான கலவையுடன், Suzuki Grand Vitara ஒவ்வொரு வீதியிலும், உங்களுக்கு விருப்பமான வகையில் செல்ல அதிகாரம் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

Yamaha FZ-S FI
Yamaha FZ-S FI ஆனது செயற்பாட்டுத் திறன், செயல்திறன் மற்றும் அன்றாடப் பயன்பாடு ஆகியவற்றிற்கு இடையேயான சரியான சமநிலையை உருவாக்குகின்ற ஒரு அடுத்த தலைமுறை மோட்டார் சைக்கிள் ஆகும். Yamaha நிறுவனத்தின் மேம்பட்ட Blue Core Engine தொழில்நுட்பம் இணைக்கப்பட்ட இது, மிருதுவான வேக அதிகரிப்பு, சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைந்த காபனிரொட்சைட்டு வெளியீடு ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இது மீளமைக்கப்பட்ட மற்றும் சூழல் நட்பு கொண்ட பயணத்தை உறுதி செய்கிறது.

அதன் தைரியமான, உறுதிமிக்க தோற்றம், மாறுபட்ட முன்புற Cowl, LED Headlamp மற்றும் காற்றின் பாதையை குறிக்கும் கோடுகளுடன், FZ-S FI ஆனது வீதிப் பாணிக்கான நவீன மற்றும் ஆக்ரோஷத்தை வழங்கும் தோற்றத்தை கொண்டுள்ளது. Single Channel ABS, ஆதரவுடன் கூடிய டிஸ்க் பிரேக்குகள், டியூப்லெஸ் டயர்கள் மற்றும் நகர்ப்புறப் பயணங்கள் மற்றும் நீண்ட சவாரிகள் இரண்டிற்கும் ஏற்ற வலுவான சஸ்பென்ஷன் அமைப்புடன் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு தரத்துடன் வருகின்றன.

உள்ளமையும் வகையில் வடிவமைக்கப்பட்ட இருக்கை மற்றும் ஒரு முழுமையான டிஜிட்டல் instrument cluster மூலம் வசதி மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், Yamaha நிறுவனத்தின் பொறியியல் விசேடத்துவமானது, குறைந்த பராமரிப்பு மற்றும் நீடித்த நம்பகத்தன்மைக்குமான உத்தரவாதத்தை அளிக்கிறது.

Yamaha FZ-S FI ஆனது, ஸ்டைலான, பல்வகைத் தன்மை கொண்ட மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகும். இது செயல்திறன் மற்றும் நம்பிக்கையை தேடும் மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

சிலோன் மோட்டார் ஷோ 2025 கண்காட்சியின் போது இடம்பெற்ற இந்த அறிமுகமானது, AMW இன் பல தசாப்த கால நம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு ஆகியவற்றின் பாரம்பரியத்தை நினைவுகூருவதுடன், நிறுவனம் சந்தையில் கொண்டுள்ள தற்போதைய தலைமைத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த நிகழ்விற்கான வலுவான உலகளாவிய அணுகல் மற்றும் ஊடகப் பங்கேற்பானது, இலங்கையின் போக்குவரத்துத் துறையில் AMW இன் தலைமைத்துவத்தை மேலும் பலப்படுத்துகிறது. இது இலங்கையின் பொருளாதார வாய்ப்புகள் குறித்து AMW கொண்டுள்ள நம்பிக்கையையும் எடுத்துக் காட்டுகிறது. நாடு தற்போது மீட்சியடைதல் மற்றும் நிலைபேறான வளர்ச்சிப் பாதையில் இருப்பதால், நிலையான கொள்கைகள், ஈடுகொடுக்கும் தன்மை கொண்ட வணிகச் சூழல் மற்றும் திறனான நிபுணர்களின் விரிவாக்கப்பட்ட குழு ஆகியவற்றைக் கொண்ட AMW மற்றும் Al-Futtaim குழுமம் தொடர்ச்சியாக, அதிக முதலீடுகளைச் செய்வதற்கும் இலங்கையின் நீண்ட கால வளர்ச்சிக்கு உதவுவதற்கும் தொடர்ச்சியாக உறுதியாக உள்ளன.


AMW மற்றும் Al-Futtaim குழுமம் பற்றி

1949 இல் நிறுவப்பட்ட Associated Motorways (Private) Limited (AMW) நிறுவனம், உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற வாகன மற்றும் போக்குவரத்து வர்த்தக நாமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் கூட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். Al-Futtaim குழுமத்தின் ஒரு அங்கமான AMW, வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், டயர், லூப்ரிகன்ட் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய தீர்வுகள் மூலம் இலங்கை வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கம், நம்பிக்கை மற்றும் ஒப்பிடமுடியாத சேவையைத் தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.

20 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருப்பைக் கொண்டுள்ளதும், மத்திய கிழக்கில் மிகவும் மதிக்கப்படுகின்றதும், பல்வகைப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றுமான Al-Futtaim குழுமத்தின் உறுப்பினராக இருப்பதில் AMW பெருமிதம் கொள்கிறது. இந்த உலகளாவிய வலையமைப்பானது சர்வதேசத் தரங்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த நடைமுறைகளை இலங்கைக்குக் கொண்டு வர AMW இற்கு வாய்ப்பளிக்கிறது. 76 ஆண்டுகளுக்கும் மேலான உள்நாட்டு பாரம்பரியத்துடன், உலகளாவிய வலிமையை ஆழமான இலங்கை வேர்களுடன் AMW இணைக்கிறது. இது நம்பிக்கை, நிலைபேறான தன்மை மற்றும் விசேடத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.

END