ஜனசக்தி லைஃப் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் ரூ. 5 பில்லியனிற்கு அதிகமான தொகையை இலாபமாக பதிவு செய்துள்ளது
இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஜனசக்தி லைஃப், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் ரூ. 5.7 பில்லியனை வரிக்கு முந்திய இலாபமாக பதிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் வரிக்கு முந்திய இலாபத்தில் ரூ. 5 பில்லியன் பெறுமதியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “2024 ஆம் ஆண்டில் நாம் கொண்டிருந்த…
FentonsIT உடன் இணைந்து ஐரோப்பிய புத்தாக்க கண்டுபிடிப்புகளை வழங்கி, இலங்கைக்குள் விரிவடையும் IceWarp
வணிகத் தொடர்பாடல் தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான IceWarp, இலங்கையில் தனது அதிநவீன தளத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் வளர்ந்து வரும் வணிகத் துறையை ஆதரிக்கும் வகையிலான மின்னஞ்சல் மற்றும் ஒத்துழைப்பு தீர்வுகளில் ஐரோப்பிய நிபுணத்துவத்தைக் கொண்டுவருகிறது. இந்த விரிவாக்கம் Hayleys Fentons நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவான Fentons Information Technology (FIT) உடனான ஒரு மூலோபாய கூட்டாண்மை மூலம் முன்னெடுக்கப்படுகிறது. 2025 ஏப்ரல் 04ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்ற பிரமாண்டமான…
வட மத்திய மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட Diva கரத்திற்கு வலிமை தொழில்முனைவுத் திறன்கள் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றியாளர்களை தீவா கௌரவித்துள்ளது
Women in Management (WIM) ஒத்துழைப்புடன் Hemas Consumer Brands ன் முன்னணி மற்றும் நம்பிக்கையை வென்றெடுத்துள்ள சலவை வர்த்தகநாமமான தீவா (Diva) தனது ‘Diva கரத்திற்கு வலிமை’ தொழில்முனைவுத் திறன்கள் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின்’ மூலமாக இலங்கை எங்கிலும் பெண் தொழில் முனைவோருக்கு தொடர்ந்தும் வலுவூட்டி, அவர்களை மேம்படுத்தி வருகின்றது. வட மத்திய மாகாணத்தின் அனுராதபுரம் நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றியாளர்களுக்கு அண்மையில் அனுராதபுரம் மத்திய நுவரகம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விமரிசையான விருது வழங்கல் வைபவத்தில் பாராட்டிக் கௌரவிப்பு…
யூனிலீவர் ஸ்ரீலங்கா, IDB மற்றும் WCIC ஆகியவற்றின் கூட்டாண்மையுடன் பெண் தலைமைத்துவ சிறு தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்கின்றது
யூனிலீவர் ஸ்ரீலங்கா மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கைத்தொழில் அபிவிருத்திச் சபை (IDB) ஆகியன ஒன்றிணைந்து, இரண்டாவது கட்டமாக பத்து சிறு தொழில்முயற்சியாளர்களுக்கு நிதியுதவியளித்துள்ளன. 2024ம் ஆண்டில் யூனிலீவர் மற்றும் IDB ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திட்டப்பட்ட 3 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இது உள்ளதுடன், பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு நிதி மற்றும் ஆற்றல் மேம்பாட்டு உதவிகள் இதன் கீழ் அளிக்கப்பட்டு வருகின்றன. 2025ம் ஆண்டின் முடிவில் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 60 தொழில்முயற்சியாளர்களுக்கு இவ்வாறான…
14th Gen Intel Desktop ஐ இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ள Lenovo, அனைத்து வர்த்தக தயாரிப்புக்களுக்கும் அவை உபயோகிக்கப்படுகின்ற இடங்களிலேயே உத்தரவாதத்தை வழங்கி, பயன்பாட்டாளர் அனுபவத்தை மேம்படுத்துகின்றது
புத்தாக்கம் கொண்ட தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் முன்னிலை பெற்று விளங்குகின்ற ஒரு நாமமான Lenovo ஆனது IT Gallery Computers Pvt Ltd ன் ஒத்துழைப்புடன் பிரத்தியேகமான நிகழ்வொன்றை இன்று இலங்கையில் ஏற்பாடு செய்திருந்ததுடன், கணினி அனுபவத்தில் அதிநவீன மேம்பாடுகளை நேரடியாக அனுபவிப்பதற்காக வழங்கல் பங்காளர்கள் மற்றும் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களை ஒன்றுதிரட்டி அதனை நடாத்தியுள்ளது. மிகவும் கவர்ச்சியான சாதனங்கள், ஆழமான அறிவை வெளிப்படுத்தும் முக்கியமான உரைகள், தயாரிப்பு குறித்த ஆழமான அனுபவத்தைப் பெற்றுத்தரும் அமர்வுகள் என இந்நிகழ்வு…
சர்வதேச மகளிர் தினத்தை DIMO அர்த்தமுள்ள வகையில் கொண்டாடியது
இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக்குழுமமான DIMO, பாலின பாகுபாடற்ற பணிக் கலாசாரத்தை மேலும் உறுதி செய்து, சர்வதேச மகளிர் தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடியது. கல்வி மற்றும் அறிவூட்டல் ஆகியவற்றினூடாக பெண்களுக்கு வலுவூட்டி, பணியகங்களை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் நிபுணர்களின் கலந்துரையாடல் மற்றும் கடந்த 10 வருட காலப்பகுதியினுள் பெண்களுக்கு நட்பான பணியகமாக DIMO எய்தியுள்ள முன்னேற்றம் தொடர்பான அமர்வையும், ‘Powerfully You’ பெண்கள் தலைமைத்துவ பயிற்சியளிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்த DIMO பெண்…
Durdans Hospital மேம்படுத்திய வசதிகளைக் கொண்ட Urology சிகிச்சைப் பிரிவை ஆரம்பித்து தனது விசேடத்துவ பராமரிப்பை விஸ்தரித்துள்ளது
சுமார் 80 வருடங்களுக்கு மேலாக விசேடத்துவமான சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் நம்பிக்கையை வென்ற முன்னோடியாகத் திகழும் Durdans Hospital, நவீன வசதிகள் படைத்த Urology சிகிச்சைப் பிரிவை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக, மேம்படுத்தப்பட்ட நோய் இனங்காணல் வசதிகள், குறைந்தளவு துளையிடலுடனான சத்திரசிகிச்சைகள் மற்றும் பரந்த சத்திரசிகிச்சையின் பின்னரான பராமரிப்புகள் போன்றவற்றை மேற்கொள்ளதவதற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்துள்ளது. புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த நிலையத்தினூடாக, விசேடத்துவமான சிறுநீரகசார் சிகிச்சைகள் வழங்கப்படுவதுடன், நோயாளர்களின் சௌகரியம், வினைத்திறன் மற்றும்…
யூனியன் அஷ்யூரன்ஸ் துறையில் முதலாவது ‘Blog It Symposium 2025’ நிகழ்வை முன்னெடுப்பு
இலங்கையின் முன்னணி தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், ஆயுள் காப்புறுதித் துறையில் முதன் முறையாக ‘Blog It Symposium 2025’ நிகழ்வை பெருமையுடன் ஏற்பாடு செய்திருந்தது. பொது மக்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், இலக்கியத் துறையில் புகழ்பெற்ற பலரும் கலந்து கொண்டனர். அதில், பிரதான பேச்சாளராக அசோக் பெர்ரி, புகழ்பெற்றவர்களான லால் மெதவத்தேகெதர, சிராந்தி ராஜபக்ச, தர்ம ஸ்ரீ காரியவசம், சாவித்ரி ரொட்ரிகோ மற்றும் பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம்…
புதிய தயாரிப்பொன்றை அறிமுகப்படுத்தியுள்ள சுதேஷி கொஹொம்ப”சுதேஷி கொஹொம்ப லெமன்கிராஸ் சவர்க்காரம்”
இலங்கையின் முதலிடத்தில் உள்ள மூலிகை சவர்க்கார வர்த்தகநாமமான சுதேஷி கொஹொம்ப, அதன் தயாரிப்பு வரிசையில் புதிய உற்பத்தியான “சுதேஷி கொஹொம்ப லெமன்கிராஸ் சவர்க்காரத்தை” அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சுதேஷி கொஹொம்ப லெமன்கிராஸ் சவர்க்காரமானது, இயற்கையான எலுமிச்சை புல் (Lemongrass) சாறுடன் வேம்பின் இயற்கைச் சாறையும் ஒருங்கிணைத்து, சருமத்தை புத்துணர்ச்சியாகவும், பொலிவுடனும், துர்வாடைகள் இல்லாமலும் வைத்திருக்க உதவுகிறது. லெமன்கிராஸ் ஆனது, சருமத்தை ஆழமாக சுத்தம் செய்து, சருமத்தின் இயற்கையான துளைகளின் அடைப்புகளை நீக்கி, நச்சுத்தன்மைகள் நீங்க உதவுகிறது. அதே நேரத்தில்…
இலங்கை சுங்கத் திணைக்களத்திடமிருந்து பிரசித்தி பெற்ற வாணிப இணக்கப்பாட்டு சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ள Hemas Manufacturing
தொழிற்பாட்டு மேன்மை மற்றும் சர்வதேச வாணிப இணக்கப்பாடு ஆகியவற்றில் சாதனை இலக்கினை நிலைநாட்டும் வகையில், Hemas Manufacturing (Pvt) Ltd நிறுவனமானது இலங்கை சுங்கத் திணைக்களத்திடமிருந்து ‘Authorized Economic Operator (AEO) Tier 1 Certification’ என்ற சான்று அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளதுடன், இணக்கப்பாடு, தொழிற்பாட்டு வினைத்திறன் மற்றும் சர்வதேச வாணிப எளிதாக்கம் ஆகியவற்றில் முன்னோடி என்ற தனது ஸ்தானத்தையும் மீள உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படுகின்ற இந்த சான்று அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ள இலங்கையிலுள்ள 48 நிறுவனங்கள் கொண்ட…