Asia Property Guru Awards 2025 நிகழ்வில் காணி முதலீடுகளுக்கான விசேட அங்கீகாரத்தை பெற்ற Groundworth
இலங்கை முழுவதும் அதிக திறன் கொண்ட காணி முதலீடுகளில் முன்னணியில் திகழ்கிறது
Asia Property Guru Awards 2025 விருது விழாவில் காணி முதலீடுகளுக்கான விசேட அங்கீகாரத்தை, முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான Groundworth (PVT) Ltd பெற்றுள்ளது. இதன் மூலம் இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் நம்பகமான முன்னணி நிறுவனம் எனும் தனது நிலையை அது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விருதானது, ஒப்பிட முடியாத வளர்ச்சிக்கான ஆற்றலுடன் மூலோபாய ரீதியான முக்கிய அமைவிடத்தில் அமைந்துள்ள காணிகளை வழங்குவதற்கும், நீண்ட கால பெறுமதியை முதலீட்டாளர்களுக்கு உறுதி செய்வதற்கும் Groundworth கொண்டுள்ள அர்ப்பணிப்பை காண்பிக்கிறது.
இது குறித்து Groundworth நிறுவனத்தின் இணை நிறுவுனர் கசுன் அந்திராஹேன்னத்தி குறிப்பிடுகையில், “இந்த விருதானது, வெறுமனே காணியை கட்டியெழுப்புவதற்கு அப்பாற்பட்ட ஒரு விடயம் எனும் எமது தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சான்றாகும். வளர்ச்சிக்கான ஒரு அடித்தளத்தை உருவாக்குவது பற்றியதே இதுவாகும். நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு திட்டமும் முதலீட்டுக்கான திறனை அதிகமாக்குவதற்காகவே வடிவமைக்கப்படுகின்றன.” என்றார்.
Groundworth நிறுவனத்தின் இணை நிறுவுனர் ஹன்ஸ்-கிறிஸ்டியன் குட் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, எதிர்காலத்திற்கு ஏற்ற முதலீடுகளை வழங்குவதே நாம் வழங்கும் வாக்குறுதியாகும். இந்த விருதை வென்றமையானது, எமது அணுகுமுறையை உறுதிப்படுத்துகிறது. அத்துடன், ரியல் எஸ்டேட் துறையில் புத்தாக்கம் மற்றும் புதிய அளவுகோல்களை தொடர்ச்சியாக ஏற்படுத்துவதற்கு இது எம்மை ஊக்கமளிக்கிறது.” என்றார்.
இந்த அங்கீகாரமானது, “Grounds for Growth” (வளர்ச்சிக்கான நிலங்கள்) எனும் Groundworth நிறுவனத்தின் வர்த்தகநாம கொள்கையை வலுப்படுத்துகிறது. அது நிதியியலில் வெற்றி மற்றும் சமூக நல்வாழ்வை மேம்படுத்தும் துறைகளை வடிவமைப்பதற்கான ஒரு வாக்குறுதியாகும்.
END