ANTON ARMOR கூரைத் தகடுகள் மற்றும் பீலிகளின் நேர்த்தியான மற்றும் வலிமையான இணக்கப்பாட்டை அறியுங்கள்
PVC துறையில் இலங்கையில் முன்னணியில் திகழும் St. Anthony’s Industries Group, அதன் ஒப்பற்ற தயாரிப்பு வெளியீடான, இலங்கையின் Green Label சான்றளிக்கப்பட்ட, சூழல் நட்புடன் கூடிய, 100% இயற்கையுடன் இணக்கமான Armour Roofing Sheets (கூரைத் தகடு) தயாரிப்புகளை பெருமையுடன் சந்தைக்கு வெளியிடுகிறது. இது நிலைபேறானத்தன்மை மற்றும் புத்தாக்கம் தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் முன்னேற்றத்தை சுட்டிக்காட்டுகிறது.
தனது திறமையுடன், தமது புகழ்பெற்ற ANTON ARMOR கூரைத் தகடுகளுடன் சிறப்பாக பொருந்தக் கூடிய, ANTON ARMOR பீலி தயாரிப்புகளை St. Anthony’s Industries Group அறிமுகப்படுத்துகிறது. இந்த அதிநவீன பீலிக் கட்டமைப்பானது, இலங்கையில் புதிய தொழில்துறை தரங்களை நிறுவிய, காலத்தால் அழியாத அழகியலையும், நீடித்து உழைக்கும் தரத்தையும், ஒப்பற்ற செயற்பாட்டையும் வழங்குகின்றது.
ANTON ARMOR பீலித் தொகுதி தயாரிப்புகளின் மேம்படுத்தல்கள் மூலம் அடைந்த மைல்கல் தொடர்பில் பெருமிதம் கொள்வதாக, St. Anthony’s Industries Group பிரதம செயற்பாட்டு அதிகாரியான திரு. லஹிரு ஜயசிங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த மாற்றமானது, புத்தாக்கம் மற்றும் விசேடத்துவம் தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. அது மட்டுமல்லாது மேம்படுத்தப்பட்ட இந்த தயாரிப்புகள் ANTON ARMOR கூரைத் தகடுகளுடன், கைவினைத்திறன் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட uPVC உடன் சிறப்பாக இணைவதன் மூலம், மழைநீர் வடிந்து செல்வதற்கான, செயற்றிறன் மற்றும் அழகியலுக்கான புதிய தரங்களை அமைக்கிறது.” என்றார்.
மழைநீர் வடிந்தோடக்கூடிய சிறந்த தொழில்நுட்பத்தை உள்ளடக்கியவாறு தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ANTON ARMOR பீலி கட்டமைப்புகள், நவீன கூரைகளுடன் சிறப்பாக பொருந்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை, ANTON ARMOR கூரைத் தகடுகளுடன் இணைக்கப்படும் போது, கூரையின் ஒட்டுமொத்த அழகும் மேம்படுத்தப்படுவதோடு, நேர்த்தியான மற்றும் திறனான முழுக் கட்டமைப்பும் உருவாகின்றது.
ANTON ARMOR மழைநீர் பீலித் தொகுதியின் புத்தாக்கம் மற்றும் உயர் செயற்றிறனின் இணையற்ற நன்மைகளை அனுபவியுங்கள். அதிக திறனையும் சிறந்த வடிவமைப்பையும் கொண்டுள்ள இது, துருப்பிடிப்பதற்கு எதிராக செயற்படுவதோடு, திறனான நீர் வடிந்தோடலை உறுதி செய்கிறது. விரைவாக நிறம் இழக்கப்படுவதை தடுத்து, தீ எதிர்ப்பு தன்மையுடன், எளிதாக நிறுவக் கூடிய இத்தொகுதியானது, குறைந்த பராமரிப்புத் தேவையையே கொண்டுள்ளது. இளம் கபில நிறம் (Amber Brown) அல்லது வெள்ளை நிறத்தில் கிடைக்கும் இந்த பீலித் தொகுதிகள், வீட்டின் வெளித் தோற்றத்திற்கு கவர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
மீள்சுழற்சி செய்யக்கூடிய uPVC மூலம் வடிவமைக்கப்பட்ட இது, நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்துகின்றது. ANTON ARMOR பீலித் தொகுதிகள், அவற்றின் தனித்துவமான வடிவமைப்புடன், பொதுவான பிரச்சினைகளைத் தடுத்து, நீரை தக்கவைப்பதில் புதிய தரத்தை அமைத்து, மழை நீரின் சீரான ஓட்டத்திற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
கிடையான பீலி வகை
பீலி வகை | நீர் வடிதல் பீலி முடிவில் | நீர் வடிதல் பீலி நடுப்பகுதியில் | ||
ANTON ARMOR பீலி | உயர்ந்தபட்ச கூரை பரப்பு | வடியும் கொள்ளளவு | உயர்ந்தபட்ச கூரை பரப்பு | வடியும் கொள்ளளவு |
197 m2 | 245 Ltr/min | 414 m2 | 518 Ltr/min |
1 : 600 பீலி வகை
பீலி வகை | நீர் வடிதல் பீலி முடிவில் | நீர் வடிதல் பீலி நடுப்பகுதியில் | ||
ANTON ARMOR பீலி | உயர்ந்தபட்ச கூரை பரப்பு | வடியும் கொள்ளளவு | உயர்ந்தபட்ச கூரை பரப்பு | வடியும் கொள்ளளவு |
307 m2 | 384 Ltr/min | 584 m2 | 730 Ltr/min |
பல்வேறு விதமான கூரை அளவுகள் மற்றும் கட்டமைப்புகளுக்கு ஏற்றவாறு இணங்கும், ANTON ARMOR பீலிகள், இடைவிடாத கடுமையான பருவ மழையையும் தாங்கும் வகையில் சிறந்த பொறியியலுடன் தயாரிக்கப்பட்டு, கூரையின் அழகை மேம்படுத்துவதோடு, அழகற்ற விளிம்பின் தோற்றத்தையும் மறைக்கின்றது.
ஒப்பற்ற புற ஊதா கதிர் எதிர்ப்பு சக்தி எனும் தனித்துவமான அம்சத்தைக் கொண்ட இது, உற்பத்திச் செயன்முறையின் மூலம் ஒரு சிறந்த UV தடுப்பு அம்சத்தை பெற்றுக் கொள்வதன் மூலம் வளைதல் மற்றும் உடைதல் ஏற்படாத வகையில் நீடித்த ஆயுளை உறுதி செய்கிறது. தீப்பிடிப்பதைத் தடுக்கும் இந்த வடிவமைப்பானது, கடுமையான பாதுகாப்புத் தரங்களை ஈடு செய்வதுடன், கட்டுமான அம்சத்துடனான பொருத்தத்தை வழங்குவதன் மூலம் அழகியலையும் பேணுகின்றது. ANTON ARMOR பீலிகளின் கீழிறங்கும் நிலைக்குத்து கட்டமைப்பானது, சதுர வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளதோடு, அதன் வெள்ளை நிற கட்டமைப்பானது, எந்தவொரு கட்டடத்திற்கும் ஒட்டுமொத்த அழகியலை மேலும் மெருகூட்டி, அதிநவீனத்தை காட்சிப்படுத்தும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் PVC தொழில்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் St. Anthony’s Industries Group, கைத்தொழில் மற்றும் நுகர்வோர் துறைகளில் நிபுணத்துவம் கொண்ட ஒரு நிறுவனமாகும். அதன் விரிவான தயாரிப்பு வகைகளில், அழுத்தக் குழாய்கள் மற்றும் இணைப்புகள், பசைகள் மற்றும் சீலிடல் உற்பத்திகள், நீர்த் தொட்டிகள், தேர்மோ CPVC குழாய்கள் மற்றும் இணைப்புகள், உள்ளிட்ட மேலும் பல்வேறு பொருட்கள் உள்ளடங்குகின்றன.
தரம், பாதுகாப்பு, சிறந்த ஆதார நடைமுறைகள் மற்றும் தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகளை வலியுறுத்தி, தமது மதிப்புகளை பேணியவாறு வழிநடத்தப்படும் St. Anthony’s Industries Group ஆனது, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் விசேடத்துவத்துடன் விளங்குவதற்காக கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மூலம், தமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்