Alumex நிறுவனத்திற்கு AEO Tier I சான்றிதழ்: வர்த்தக ஒழுங்குமுறை மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி விசேடத்துவத்தில் முன்னேற்றம்
கு மேம்பட்ட நம்பகத்தன்மை, வேகமான விநியோகம்

Hayleys Group நிறுவனத்தின் உறுப்பினரான, நாட்டின் முன்னணி அலுமினிய உற்பத்தியாளராக திகழும் Alumex PLC, இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் வழங்கப்படும் ‘Authorised Economic Operator (AEO) Tier I’ (அங்கீகாரம் பெற்ற பொருளாதார செயற்பாட்டாளர் மட்டம் i) சான்றிதழைப் பெற்றுள்ளது. இது நிறுவனத்தின் செயற்பாட்டு நடவடிக்கையிலான இணக்கம், உலக வர்த்தகத்திற்கான வசதிப்படுத்தல் மற்றும் விநியோகச் சங்கிலி பாதுகாப்பில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இந்த சான்றிதழானது, சுங்க நடைமுறைகள் மற்றும் வர்த்தக ஒருமைப்பாடு தொடர்பான மிக உயர்ந்த தரநிலைகளை பின்பற்றுகின்ற, குறிப்பிட்டளவான தெரிவு செய்யப்பட்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் பட்டியலில் Alumex நிறுவனத்தைச் சேர்த்துள்ளது. Alumex நிறுவனத்தினால் அனைத்து சட்ட ரீதியான, செயற்பாட்டு ரீதியான மற்றும் பாதுகாப்பு ரீதியான தரநிலைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை இலங்கை சுங்கத்தினர் மிகக் கடுமையாக சரிபார்த்ததன் பின்னரே இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
முதன்மையான அலுமினியம் உலோகத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் முன்னணி நிறுவனமான Alumex, இந்த சான்றிதழ் மூலம் உலகளாவிய வர்த்தக பாதுகாப்பு மற்றும் இடர் முகாமைத்துவத்தில் சிறந்த நடைமுறைகளுடன் உரிய வகையில் தன்னை நிலைநாட்டியுள்ளதை உறுதிப்படுத்துகின்றது. கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட முக்கிய சந்தைகளுக்கு Alumex ஏற்றுமதிகளை முன்னெடுத்து வருகிறது.
இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த சான்றிதழ் வழங்கும் விழா, 2025 ஜூலை 29ஆம் திகதி, தொழில்துறை மற்றும் அரச துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த ஜயவீர பங்கேற்றதோடு, AEO திட்டத்தின் தேசிய முக்கியத்துவத்தையும் Alumex நிறுவனம் வர்த்தக முன்னேற்றத்தில் மேற்கொண்ட தலைமைத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அங்கீகாரம் மூலம் “தொழில்துறையில் Alumex நிறுவனம் கொண்டுள்ள நிபுணத்துவம், இணக்கம், ஒத்துழைப்பு மற்றும் சிறந்த சேவைகள்” ஆகியன பிரதிபலிப்பதை இலங்கை சுங்கத் திணைக்களம் உறுதிப்படுத்துகின்றது. இதன் மூலம் தற்போது விரைவான சுங்க நடைமுறைகள் மற்றும் வாடிக்கையாளர்கள், கூட்டாளர்களிடையே உயர்ந்த நம்பகத்தன்மையை Alumex நிறுவனத்தினால் அனுபவிக்க முடியும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது விநியோகச் சங்கிலியின் வேகத்தை அதிகரித்து, நாடுகளுக்கு இடையிலான வர்த்தகச் செலவுகளை குறைக்க வழிவகுக்கிறது.
Alumex PLC நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரமுக் தெடிவாலா இது குறித்து கருத்து வெளியிடுகையில், “AEO Tier I சான்றிதழைப் பெறுவதானது எமது இணக்கம், செயல்திறன் மற்றும் ஒருமைப்பாட்டு உறுதி ஆகியவற்றுக்கு கிடைத்துள்ள வலுவான அங்கீகாரமாகும். இது எமது வாடிக்கையாளர்களுக்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் சேவையளிக்க வாய்ப்பை ஏற்படுத்துவதோடு, உள்நாட்டு மற்றும் உலகளாவிய கூட்டாளர்கள், லொஜிஸ்டிக் சேவை வழங்குநர்கள், ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களுடன் எளிதாக ஒத்துழைப்பை ஏற்படுத்தம் உதவுகிறது.” என்றார்.
AEO அங்கீகாரம் பெற்ற நிறுவனம் எனும் வகையில், வரி மற்றும் சுங்க கட்டணங்களை ஒத்திவைக்கப்பட்ட வகையில் செலுத்தும் வசதிகள், குறைந்த உத்தரவாதத் தேவை மற்றும் நிறுவன வளாகத்திலேயே சுங்க நடைமுறை அனுமதிகளை பெறும் வாய்ப்பு போன்ற பல நன்மைகளை Alumex நிறுவனம் பெறும். இது செயன்முறைகளை எளிமைப்படுத்தி, வெளியீட்டை பெறுவதற்கான காலத்தை (turnaround time) குறைக்கிறது.
இந்த அனைத்து நன்மைகளும், Alumex வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விநியோக நம்பகத்தன்மை மற்றும் உரிய நேரத்திற்கு சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், அதிவேகமாகவும் பாதுகாப்பாகவும் வெளிநாட்டு இறக்குமதிச் செயன்முறையை மாற்றுகின்றன. AEO சான்றிதழானது Alumex நிறுவனத்திற்கும் இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கும் உள்ள ஒத்துழைப்பு உறவினை வலுப்படுத்துவதோடு, உலகளாவிய சுங்க வலையமைப்புகளின் கீழ் எதிர்காலத்தில் மேலும் வசதிகளை ஏற்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்துகின்றது.