இலங்கைச் சிறுவர்களுக்கு ஒரு புதிய உயிர்நாடி: நாட்டின் முதலாவது தனியார் துறை சிறுவர் ஈரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்த வத்தளை ஹேமாஸ் மருத்துவமனை

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சாதனை, மிகவும் சிக்கலான மாற்று அறுவை சிகிச்சை பராமரிப்பை வீட்டிற்கு அருகிலேயே கொண்டு வருவதுடன், மேம்பட்ட சிறுவர் சுகாதா பராமரிப்பை வழங்கும் இலங்கையின் திறனை விரிவுபடுத்துகிறது
மேம்பட்ட சிறுவர் சுகாதாரப் பராமரிப்பில் இலங்கை ஒரு முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது. வத்தளை ஹேமாஸ் மருத்துவமனை (Hemas Hospital Wattala), நாட்டின் முதலாவது சிறுவர்களுக்கான ஈரல் மாற்று அறுவை சிகிச்சையை தனியார் சுகாதாரத் துறைக்குள் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியுள்ளது.
இந்த மைல்கல்லானது, கடுமையான ஈரல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உள்நாட்டில் கிடைக்கும் சிகிச்சை தெரிவுகளை விரிவுபடுத்துவதுடன், இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்புக்கு புதியதொரு முக்கியமான திறனையும் இணைக்கிறது.
சிறுவர்களுக்கான ஈரல் மாற்று அறுவை சிகிச்சையானது நவீன மருத்துவத்தில் மிகவும் சிக்கலான நடைமுறைகளில் ஒன்றாகும். இதுவரை, அத்தகைய மிகவும் சிறப்பு வாய்ந்த பராமரிப்பு தேவைப்படும் குடும்பங்கள் அரச துறையில் உள்ள எல்லைக்குட்பட்ட உள்நாட்டு வசதிகளை எதிர்கொண்டு வந்ததோடு, நாட்டிற்குள் அதனை அணுக முடியாதவர்களுக்கு வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக செல்லும் நிலையும் ஏற்பட்டது.
உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் ஒரு குழந்தைக்கு, நேரம் மிகவும் முக்கியமானதாகும். நாட்டின் உள்ளேயே சிக்கலான சிகிச்சையைப் பெறும் திறன், சிறுவர்களின் வாழ்க்கையின் மிகவும் கடினமான காலகட்டங்களில் குடும்பங்கள் மீது சுமத்தப்படும் மருத்துவ, நிதி மற்றும் உணர்ச்சி ரீதியான சுமையைக் குறைக்க உதவும்.
எனவே, வத்தளை ஹேமாஸ் மருத்துவமனையில் வெற்றிகரமாக நடைபெற்ற இந்த மாற்று அறுவை சிகிச்சையானது தனியார் சுகாதாரத் துறைக்கான முதலாவது சாதனை என்பதைத் தாண்டிய பலத்தைக் கொண்டுள்ளது. இது இலங்கையின் மருத்துவத் திறன்களின் தொடர்ச்சியான முன்னேற்றத்தையும், சிக்கலான நடைமுறைகளை உள்நாட்டில் நிர்வகிக்கும் நாட்டின் தனியார் சுகாதார கட்டமைப்பின் அதிகரித்து வரும் திறனையும் பிரதிபலிக்கிறது.
இது குறித்து ஹேமாஸ் மருத்துவமனை குழுமம் மற்றும் ஆய்வுகூட வலையமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி லக்கித் பீரிஸ் தெரிவிக்கையில்,
“இது ஹேமாஸ் மருத்துவமனைக்கு மாத்திரமல்லாது, இலங்கையின் சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். சிறுவர்களுக்கான ஈரல் மாற்று அறுவை சிகிச்சை போன்ற மிகவும் சிக்கலான நடைமுறைகளுக்கு மருத்துவ நிபுணத்துவம், உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட பராமரிப்பு ஆகியவற்றில் முக்கிய முதலீடுகள் தேவைப்படுவதோடு, அந்தத் திறனை உள்நாட்டில் வளர்த்துக் கொண்டதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.
“இலங்கையில் கிடைக்கும் மேம்பட்ட சுகாதார பராமரிப்பின் கொள்ளளவை, தொடர்ச்சியாக வலுப்படுத்துவதும், பரந்த சுகாதார கட்டமைப்பின் திறன்களைப் பூர்த்தி செய்யவும், உலகத் தரத்திலான சிகிச்சையை அதிகளவான நோயாளர்களுக்கு வீட்டிற்கு அருகிலேயே அணுகுவதற்கு உதவுவதும் எமது நோக்கமாகும். இது, சுகாதாரத் தரங்களை உயர்த்துவதற்கும் ஆரோக்கியமான நாட்டை உருவாக்குவதற்கும் நாம் கொண்டுள்ள பரந்த அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாகும்.” என்றார்.
மிகவும் சிக்கலான சுகாதாரப் பராமரிப்பிற்கான திறனைக் கட்டியெழுப்புதல்
சிறுவர்களுக்கான ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு விசேட நிபுணத்துவம், மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட குழுப்பணி மற்றும் குழந்தைக்கான சிக்கலான அறுவை சிகிச்சை மற்றும் குணமடைதலின் போது ஆதரவளிக்கத் தேவையான வசதிகள் தேவைப்படுகின்றன.
வத்தளை ஹேமாஸ் மருத்துவமனையில், ஈரல் நோய்கள், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, மயக்க மருந்தியல் துறை நிபுணர்கள், உயர் திறமை கொண்ட தீவிர சிகிச்சை நிபுணர்கள், விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட தாதியர்கள் உள்ளிட்டோர் பல்வேறு சுகாதார வல்லுநர்களுடன் இணைந்து பணியாற்றி, ஒவ்வொரு கட்டத்திலுமான ஒருங்கிணைந்த பராமரிப்பை வழங்குகிறார்கள்.
மருத்துவமனையின் பிரத்தியேக உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதிகள் உள்ளிட்ட விசேட அறுவை சிகிச்சை உபகரணங்கள், மயக்க மருந்து கட்டமைப்புகள் மற்றும் முக்கிய செயற்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் ஆதரிக்கவுமான தொழில்நுட்பத்தை ஒன்றிணைக்கின்றன. அறுவை சிகிச்சையின் போது குழந்தையை பாதுகாப்பாக வைத்திருப்பது முதல் அதன் பின்னரான குணமடைதல் செயற்பாட்டை ஆதரிப்பது வரையான உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவைகளை நிர்வகிக்க இந்தத் திறன்கள் குழுக்களுக்கு உதவுகின்றன.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர், பிரத்தியேகமான, மிகவும் விசேடத்துவம் வாய்ந்த ஈரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான தீவிர சிகிச்சைப் பிரிவில் முழுநேர மருத்துவ மற்றும் தாதியர் பராமரிப்பை சிறுவர்கள் பெறுகின்றனர். உன்னிப்பான கண்காணிப்பு ஆகியன, குழந்தையின் நிலையில் ஏற்படும் மாற்றங்களை உடனடியாக அடையாளம் காணப்பட்டு பதிலளிக்க குழுவினருக்கு உதவும் அதே நேரத்தில், தொற்றுத் தடுப்பு தொடர்பான இறுக்கமான நடவடிக்கைகள், பாதிக்கப்படக்கூடிய காலகட்டத்தில் சிறுவர்களைப் பாதுகாக்க உதவுகின்றன.
போசணைப் பராமரிப்பு மற்றும் மனநல ஆதரவும் இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகும். மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஈரல் உடலுறுப்பும் குழந்தையின் நீண்ட கால ஆரோக்கியத்தை ஆதரிக்கும் வாழ்நாள் முழுவதுமான விசேட பின்தொடர்தல் நடவடிக்கைகள் மற்றும் மருந்துகள் மூலம், வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பின்னரும் தொடர் பராமரிப்புக்கு உதவுகிறது.
நோயாளிக்கு அருகிலேயே ஒன்றிணைக்கப்பட்ட நிபுணத்துவம்
ஈரல், பித்தப்பை, சதையி ஆகியவற்றை உள்ளடக்கிய Hepatobiliary அறுவை சிகிச்சை, சிறுவர்களுக்கான ஈரல் நோய் மருத்துவம், இரைப்பை குடலியல் (gastroenterology), மயக்க மருந்தியல் மற்றும் அதிதீவிர சிகிச்சை ஆகியவற்றில் நிபுணத்துவத்தை ஒன்றிணைக்கும் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட குழுவினரே இத்திட்டத்தின் மையத்தில் உள்ளனர்.
இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையானது, நோயறிதல் மற்றும் மதிப்பிடுதல் முதல் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை, குணமடைதல் மற்றும் நீண்ட கால கண்காணிப்பு வரையான முழுப் பயணத்தின் போதும் நோயாளிகளுக்கு ஆதரவளிக்க உதவுகிறது.
உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் பின்னணியில் உள்ள குழு:
சிறுவர்களுக்கான ஈரல் நோய் மருத்துவம் (Paediatric Hepatology)
பேராசிரியர் மெரந்தி பெனாண்டோ — சிறுவர்கள் மருத்துவ ஆலோசக நிபுணர் மற்றும் சிறுவர்களுக்கான ஈரல் நோய் மருத்துவர்
அறுவை சிகிச்சை:
பேராசிரியர் ரொஹான் சிறிவர்தன — இரைப்பை குடலியல் ஆலோசக நிபுணர் மற்றும் ஈரல் நோய் அறுவை சிகிச்சை நிபுணர்
வைத்தியர் சுசிந்த திலகவர்தன — இரைப்பை குடலியல் ஆலோசக நிபுணர் மற்றும் ஈரல் நோய் அறுவை சிகிச்சை நிபுணர்
வைத்தியர் அருண வீரசூரிய — குருதிக்குழாய் ஆலோசக அறுவை சிகிச்சை நிபுணர்
மயக்க மருந்தியல் மற்றும் அதிதீவிர சிகிச்சை
பேராசிரியர் பாக்யா குணதிலக — மயக்க மருந்தியல் ஆலோசக நிபுணர் மற்றும் அதிதீவிர சிகிச்சை நிபுணர்
வைத்தியர் சமில லியனகே — மயக்க மருந்தியல் ஆலோசக நிபுணர் மற்றும் அதிதீவிர சிகிச்சை நிபுணர்
வைத்தியர் ரசினி கிஷாரா விதானகே — மயக்க மருந்தியல் ஆலோசக நிபுணர் மற்றும் அதிதீவிர சிகிச்சை நிபுணர்
இடையீட்டு கதிரியக்கவியல்
வைத்தியர் சிந்தக அப்புஹாமி – இடையீட்டு கதிரியக்கவியல் ஆலோசக நிபுணர்
வயதுவந்தோர் ஈரல் நோய் மருத்துவம்
வைத்தியர் உதித்த தஸநாயக்க – ஈரல் நோய் மருத்துவ ஆலோசக நிபுணர்
ஏனைய விசேட நிபுணர்கள்
வைத்தியர் ஜானகி திஸாநாயக்க – குருதி மாற்று மருத்துவ நிபுணர்
வைத்தியர் கௌரி சமரசேகர – போசணை ஆலோசக நிபுணர்
வைத்தியர் ஹர்ஷனி லியனகே – மனநல ஆலோசக மருத்துவர்
ஹேமாஸ் மருத்துவமனை குழுமம் மற்றும் ஆய்வுகூட வலையமைப்பின் மருத்துவ சேவைகள் மற்றும் தரத்தின் பணிப்பாளர் வைத்தியர் மலித் அத்தப்பத்து தெரிவிக்கையில்,
“வெற்றியானது சுகாதார பராமரிப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் தடையின்றி ஒன்றிணைந்து செயற்படுவதிலேயே தங்கியுள்ளது என்பதால், சிறுவர்களுக்கான ஈரல் மாற்று அறுவை சிகிச்சையானது ஒரு மருத்துவமனை மேற்கொள்ளக்கூடிய மிகவும் அவசியமான நடைமுறைகளில் ஒன்றாகும். இது அறுவை சிகிச்சை மாத்திரமல்லாது, அதற்குப் பின்னர் வரும் தயார்படுத்தல்கள், மயக்க மருந்தியல், அதிதீவிர சிகிச்சை, மேம்பட்ட கண்காணிப்பு, தொற்றுக் கட்டுப்பாடு மற்றும் விசேடத்துமான பின்தொடர்தல் நடவடிக்கைகளில் தங்கியுள்ளது.” என்றார்.
உடலுறுப்பு பெறும் இளம் நபரின் குடும்பத்தைப் பொறுத்தவரை, அந்தத் திறனை உள்நாட்டில் பெற்றிருப்பது அந்த நடைமுறையைத் தாண்டிய ஒரு முக்கிய படியைக் குறிக்கின்றது.
“ஒரு உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையே எமது குழந்தையின் வாழ்க்கைக்கான ஒரே வழி என மருத்துவர்கள் எம்மிடம் கூறியபோது, எங்களை பயம் முழுமையாக முடக்கியது. இந்த அறுவை சிகிச்சையை இறுதியாக இலங்கையிலேயே செய்ய முடியும் என்பதை அறிந்தமை ஒரு ஆறுதலாக அமைந்தது. மாதக் கணக்கில் காத்திருக்காமல் அல்லது நாடு தாண்டி போகாமல், குடும்பத்தினரால் சூழப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் எமது குழந்தையின் கையைப் பிடித்து, கண்களை பார்த்து, அவர்கள் வாழ்க்கை மீள கிடைத்ததை பார்த்தமையானது எமது வாழ்க்கையை எம்மிடம் மீள வழங்கியது”
— திரு. மற்றும் திருமதி ஆர்.எம். ரத்நாயக்க, சிகிச்பை பெற்ற குழந்தையின் பெற்றோர்
மேம்பட்ட சுகாதாரப் பராமரிப்புக்கான இலங்கையின் திறனை விரிவுபடுத்துதல்
மிகவும் விசேடத்துவம் வாய்ந்த மற்றும் வளங்களைக் கொண்ட, உயர் திறன் கொண்ட சுகாதாரத் தேவைகளை நிர்வகிக்கும் திறனை இலங்கை தொடர்ச்சியாக வலுப்படுத்தி வரும் வேளையில், தனியார் துறைக்குள் சிறுவர்களுக்கான ஈரல் மாற்று அறுவை சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.
இந்தத் திறன்களை உள்நாட்டில் உருவாக்கியமையானது, நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரச் சூழலை வலுப்படுத்துவதுடன், வெளிநாடுகளுக்குச் செல்வதுடன் தொடர்புடைய பாரிய சுமையை இல்லாமல் செய்து, இலங்கையிலுள்ள அதிக நோயாளர்களுக்கு மேம்பட்ட சிகிச்சையை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
ஹேமாஸ் மருத்துவமனை குழுமத்தைப் பொறுத்தவரை, இந்த சாதனையானது இலங்கைக்குள் வழங்கக்கூடிய பராமரிப்பின் அளவை வலுப்படுத்துவதற்கான ஒரு பரந்த அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாகும்.
விசேட சேவைகள் மற்றும் அவற்றை ஆதரிக்கத் தேவையான உட்கட்டமைப்புகளில் முதலீடு செய்வதன் மூலம், வத்தளை ஹேமாஸ் மருத்துவமனையானது, ஏற்கனவே அதில் காணப்படும் தேசிய சுகாதாரத் திறன்களைப் பூர்த்தி செய்வதற்கும், இலங்கைக் குடும்பங்களுக்கு மேம்பட்ட மருத்துவ பராமரிப்புக்கான அதிக அணுகலை உருவாக்குவதற்குமான நோக்கக்தைக் கொண்டுள்ளது.
வத்தளை ஹேமாஸ் மருத்துவமனை, பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான விரிவான ஈரல் பராமரிப்புடன் கூடிய பிரத்தியேக ஈரல் மையத்தையும் கொண்டுள்ளது. இதில் சருமத்தை சேதப்படுத்தாத நோயறிதல் வசதிகள் மற்றும் ஆரம்ப கட்ட நோய் கண்டறிதல் முதல் விசேட சிகிச்சை, நீண்ட கால நோய் முகாமைத்துவம் மற்றும் ஈரல் மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட மேம்பட்ட சுகாதார பராமரிப்புகள் உள்ளிட்டவை அடங்குகின்றன.
இது குறித்து, வத்தளை ஹேமாஸ் மருத்துவமனையின் பணிப்பாளரும், அதன் பொது முகாமையாளருமான பிரபான் குணவர்தன தெரிவிக்கையில்:
“இந்த சாதனையானது, வத்தளை ஹேமாஸ் மருத்துவமனை எவ்வகையான நிறுவகமாக மாறி வருகிறது என்பதை நிரூபிக்கிறது. வழக்கமான தனியார் சுகாதாரப் பராமரிப்புக்கு அப்பாற்பட்ட திறன்களை நாம் உருவாக்கி வருகிறோம். மருத்துவத்தின் சிக்கலான மற்றும் மேம்பட்ட துறைகளை எதிர்கொள்ள நாம் எம்மை நிலைநிறுத்தியுள்ளோம். அந்த அறுவை சிகிச்சைத் திறனின் ஆழமே ஹேமாஸ் மருத்துவமனையை தனித்துவமாக காண்பிப்பதுடன், இலங்கையில் தனியார் சுகாதாரத் தரத்தை நாம் தொடர்ச்சியாக உயர்த்தி வருகின்றமையானது, இந்நிறுவகத்தை நாம் கொண்டு செல்லும் திசை சரி என்பதை எடுத்துக் காட்டுகிறது.” என்றார்.
வீட்டிற்கு அருகிலேயே மேம்பட்ட சுகாதாரப் பராமரிப்பு
வத்தளை ஹேமாஸ் மருத்துவமனையில் வெற்றிகரமாக இடம்பெற்ற சிறுவர்களுக்கான ஈரல் மாற்று அறுவை சிகிச்சையானது, மருத்துவப் பராமரிப்பில் ஒரு முக்கிய முன்னேற்றத்தையும், மிகவும் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய தமது நோயாளர்களில் சிலருக்கு சிகிச்சையளிக்கும் இலங்கையின் திறனின் விரிவாக்கத்தையும் குறிக்கிறது.
விசேட மருத்துவ நிபுணத்துவம், மேம்பட்ட தொழில்நுட்பம், பிரத்தியேக உட்கட்டமைப்பு, பன்முகப்படுத்தப்பட்ட பராமரிப்பு ஆகியன ஒரே நோக்கத்தைச் சுற்றி ஒன்றிணைக்கப்படும் போது, எது சாத்தியமாகும் என்பதை இந்நிகழ்வு நிரூபிக்கிறது. நோயாளர்களுக்குத் தேவையான பராமரிப்பை, அவர்களுக்குத் தேவைப்படும் போது அணுகுவதை வழங்குவதே அதுவாகும்.
மிகக் கடுமையான, சிறுவர் ஈரல் நோயை எதிர்கொள்ளும் இலங்கைக் குடும்பங்களுக்கு, வீட்டிற்கு அருகிலேயே ஒரு புதிய உயிர்நாடி என்பதை இது உத்தரவாதமளிக்கிறது: