வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவக் கருத்தரங்கத்தில் இலங்கையில் மார்பக பராமரிப்பிற்கான தரநிலையை மேம்படுத்தும் ஹேமாஸ் மருத்துவமனை வத்தளை

ஆரம்பகட்ட நோய் கண்டறிதல் மற்றும் விரிவான மார்பகப் பராமரிப்பை ஊக்குவிப்பதற்காக முன்னணி நிபுணர்கள், புற்றுநோயை வென்றவர்களின் குரல்கள் மற்றும் மேம்பட்ட 3D மம்மோகிராபி தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒன்றிணைத்த மார்பக ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய்ப் பராமரிப்பு தொடர்பான ‘Breastober’ கருத்தரங்கம்
கொழும்பு, 28 ஒக்டோபர் 2026: ‘Empowering Care, Awareness & Hope’ (ஊக்கமளிக்கும் பராமரிப்பு, விழிப்புணர்வு, நம்பிக்கை) எனும் கருப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மார்பக ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் பராமரிப்பு தொடர்பான மருத்துவக் கருத்தரங்கின் மூலம், இலங்கையில் மார்பக ஆரோக்கியத்திற்கான முன்னணி மையமாகத் தனது நிலையை, ஹேமாஸ் மருத்துவமனை வத்தளை (Hemas Hospital Wattala) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
வைத்திய நிபுணர் நிஸ்ஸங்க ஜயவர்தனவின் எண்ணக்கருவில் உருவாகி, அவரது தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கமானது, ஆரம்பகட்ட நோய் கண்டறிதல், மார்பகப் புற்றுநோய் சிகிச்சை, அதிலிருந்தான மீட்சி மற்றும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாட முன்னணி மருத்துவ நிபுணர்கள், நோயாளிகள், புற்றுநோயை வென்றவர்கள், ஊடகங்கள் மற்றும் சுகாதாரத் துறை உள்ளிட்ட பங்குதாரர்களை ஒன்றிணைத்தது.
ஹேமாஸ் மருத்துவமனை வத்தளையின் வருடாந்த ‘Breastober’ திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெற்ற இந்நிகழ்வானது, மேம்பட்ட பரிசோதனை, நிபுணர்களின் அனுபவம், சிகிச்சை பாதைகள் மற்றும் நோயாளிக்கான ஆதரவு ஆகியவற்றை ஒன்றிணைக்கும் இம்மருத்துவமனையின் விரிவான மார்பகப் பராமரிப்பு சூழலை விரிவாக எடுத்துக் காண்பித்தது.
மார்பக ஆரோக்கியத்தை விழிப்புணர்வில் இருந்து நடவடிக்கைக்கு முன்னேற்றுதல்
இங்கு, வைத்தியர் காஞ்சன விஜேசிங்க, வைத்தியர் கெலும் பண்டிதரத்ன, வைத்தியர் நிஸ்ஸங்க ஜயவர்தன, வைத்தியர் அஜித் டி சில்வா, வைத்தியர் லங்கா திஸாநாயக்க உள்ளிட்ட முன்னணி விசேட வைத்திய நிபுணர்கள் பரிசோதனை, சிகிச்சை மற்றும் சமூக ஆதரவு குறித்த தங்களது பார்வைகளை பகிர்ந்து கொண்டனர்.
இங்கு இடம்பெற்ற நோயாளிகள் மற்றும் புற்றுநோயை வென்றவர்களுக்கான பிரத்தியேக அமர்வானது, ஒரு முக்கியமான பரிமாணத்தை ஏற்படுத்தியது. நோயறிதல், சிகிச்சை, மீட்சி ஆகியவற்றின் உண்மையான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இது வாய்ப்பளித்ததுடன், ஆரம்பகட்ட நடவடிக்கையும் பொருத்தமான பராமரிப்பும், நம்பிக்கையை கொண்டுவரும் எனும் செய்தியை அது வலுப்படுத்தியது.
இந்தக் கருத்தரங்கானது மார்பக ஆரோக்கியத்தை மிகவும் வெளிப்படையானதாகவும் தகவலறிந்த உரையாடலாகவும் மாற்ற முயன்றதுடன், பயத்தை தாண்டி பரிசோதனைகளில் மிகவும் மும்முரமாக முனைப்புடன் பெண்கள் செயற்பட வேண்டுமென்பதை ஊக்குவித்தது.
மம்மோகிராபியை மிகவும் உறுதியளிக்கும் அனுபவமாக மாற்றுதல்
பல பெண்களுக்கு, மம்மோகிராபி என்பது, அறிமுகமற்ற அல்லது அசௌகரியமான விடயமாக உணரப்படலாம். அது பற்றிய தெளிவு, அதன் பெறுபேறுகளைத் தாண்டி, பரிசோதனை வரை சரியான விழிப்புணர்வு இல்லாத அம்சத்தை இது காட்டுகின்றது.
ஹேமாஸ் மருத்துவமனை வத்தளை ஆனது, Hologic Selenia Dimensions மற்றும் Hologic 3 Dimensions அமைப்புகள் மூலம் மேம்பட்ட 2D டிஜிட்டல் மம்மோகிராபி மற்றும் 3D டிஜிட்டல் மார்பக உருவகவியல் (3D Digital Breast Tomosynthesis) ஆகியவற்றை வழங்குகிறது. நாட்டிலுள்ள மிகவும் மேம்பட்ட மார்பக புகைப்படவியல் திறன்களை பெறுவதற்கான வாய்ப்பு இங்கு கிடைக்கின்றது.
இந்த கட்டமைப்புகள் விரிவான புகைப்படவியலை, நோயாளிக்கு மிகவும் சௌகரியமான அனுபவத்துடன் வழங்குகின்றன. நோயாளியை மையமாகக் கொண்ட அதன் அழுத்துதல் சோதனை முறையானது, சௌகரியத்தைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், திறனான கதிர்வீச்சு அளவைக் கொண்ட புகைப்படவியல் நோயாளியின் பாதுகாப்பிற்கு ஆதரவளிக்கிறது.
மேம்பட்ட 3D புகைப்படவியல் முறையானது, மருத்துவர்கள் மார்பக இழையங்களை மிகவும் விரிவாக ஆராயவும், வழக்கமான புகைப்படவியல் மூலம் கண்டறிவதற்கு கடினமாக இருக்கக்கூடிய அசாதாரண நிலைகளை அடையாளம் காணவும் அனுமதிக்கிறது.
மேம்பட்ட புகைப்படவியல் மற்றும் பரிசோதனையின் தரத்தில் அதிக நம்பிக்கையுடன், மிகவும் சௌகரியமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு மம்மோகிராம் என்பது, பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பெண்களுக்கு, ஒரு எளிமையான நன்மையாக மாறுகிறது.
இந்தத் தொழில்நுட்பமானது, பரிசோதனை மற்றும் நோய் கண்டறிதலை விசேடத்துவ ஆலோசனைகள், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் திறன் மற்றும் நோயிலிருந்து மீள்வதற்கான ஆதரவு ஆகியவற்றை ஒன்றுடனொன்று இணைக்கும் ஒரு பரந்த மருத்துவ சூழலால் ஆதரிக்கப்படுகிறது.
Breastober: விழிப்புணர்வை செயற்பாடாக மாற்றுதல்
ஒக்டோபர் 28 நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக, பொதுமக்களுக்கு ஹேமாஸ் மருத்துவமனை வத்தளையில் இலவச மார்பக உடற்பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இது விழிப்புணர்வை, தடுப்பு நடவடிக்கைக்கான உடனடி வாய்ப்பாக மாற்றியது.
‘Breastober’ மூலம், ஹேமாஸ் மருத்துவமனை வத்தளை பெண்களை தமது மார்பக ஆரோக்கியத்தைப் புரிந்து கொள்ளவும், பொருத்தமான பரிசோதனைகளை மேற்கொள்ளவும், மருத்துவ ஆலோசனைகளை முன்கூட்டியே அணுகவும் தொடர்ந்தும் ஊக்குவிக்கிறது.
இது குறித்து, Hemas Hospitals & Laboratories குழுமத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் சிந்தக திஸாநாயக்க தெரிவிக்கையில்:
“Breastober என்பது, எப்போதும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை ஒரு செய்தி அல்லது பிரசாரத்திற்கு அப்பால் கொண்டு செல்வதாகும். விழிப்புணர்வு என்பது ஒருவருக்கு அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கான நம்பிக்கையைத் தரும் போது மட்டுமே அர்த்தமுள்ளதாக மாறுகிறது. அந்த வகையில். மார்பக ஆரோக்கியத்தைப் பற்றி பேசவோ, ஆலோசனை பெறவோ, பரிசோதனைக்கு உட்படவோ அந்த நம்பிக்கை உதவ வேண்டும்.
“இந்தக் கருத்தரங்கின் மூலம், மருத்துவ நிபுணத்துவம் மற்றும் நோயாளருக்கான சிறந்த அனுபவங்களை ஒன்றிணைத்து, அந்த உரையாடலை மிகவும் திறந்ததாகவும், தொடர்புபடுத்தக்கூடியதாகவும், நம்பிக்கை தருவதாகவும் மாற்ற நாம் விரும்பினோம். ஒரு சுகாதாரப் பராமரிப்பு வர்த்தகநாமம் எனும் வகையில் எமது பங்கானது, ஒருவர் நோயாளியாக மாறிய பின்னர் அவர்களுடன் இணைந்திருப்பது மாத்திரமல்ல; அவர் அந்த நிலையை அடைவதற்கு முன்னரே அவர் தனது ஆரோக்கியத்தைப் பற்றி சிறந்த முடிவுகளை எடுக்க உதவுவதுமாகும்.” என்றார்.
இது பற்றி, ஹேமாஸ் மருத்துவமனை வத்தளையின் பணிப்பாளரும் அதன் பொது முகாமையாளருமான பிரபான் குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில்,
“ஹேமாஸ் மருத்துவமனை வத்தளையில், மேம்பட்ட பரிசோதனைத் தொழில்நுட்பம், அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்புப் பாதை ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் ஒரு விரிவான மார்பகப் பராமரிப்பு சூழலை நாம் உருவாக்கியுள்ளோம்.
“மம்மோகிராபி சில பெண்களுக்கு ஒரு சங்கடமான நிலையை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாம் நன்கு அறிவோம். எனவே மேம்பட்ட 3D மம்மோகிராபியில் எமது முதலீடானது உயர்தர புகைப்படவியலை வழங்குவது மாத்திரமல்லாது, நோயாளிக்கு மிகவும் உறுதியான மற்றும் சௌகரியமான அனுபவத்தை உருவாக்குவதுமாகும்.
“மேம்பட்ட தொழில்நுட்பமானது விசேட நிபுணத்துவம் மற்றும் தொடர்ச்சியான பராமரிப்புடன் இணைக்கப்படும் போது, பரிசோதனை மற்றும் நோயறிதல் முதல் சிகிச்சை மற்றும் நோயிலிருந்து மீட்சி பெறும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களுக்கு அதிக நம்பிக்கையை வழங்க உதவுகின்றது.” என்றார்.
‘Breastober’ ஆனது, மேம்பட்ட மம்மோகிராபி, விசேட மருத்துவ நிபுணத்துவம் மற்றும் விரிவான பராமரிப்பு பாதைகள் மூலம், ஹேமாஸ் மருத்துவமனை வத்தளையானது, இலங்கையில் மார்பக ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் பராமரிப்பிற்கான ஒரு முன்னணி மையமாக தனது நிலையைத் தொடர்ச்சியாக வலுப்படுத்தி வருகிறது.
மார்பக புகைப்படவியல் மற்றும் கதிரியக்கவியலுக்கு: 071 1 941 941
மார்பக உடற்பரிசோதனைகள் பற்றிய தகவல்களுக்கு: 070 400 1191