விசேட தேவை கொண்ட மாணவர்களுக்காக ‘Young Creatives Program’ எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் AOD
விசேட கற்றல் தேவைகள் உள்ள, 13 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மாணவர்களுக்கான இரண்டு வருடப் படைப்பாற்றல் கல்வித் திட்டம். AOD இது பட்டப்படிப்பை நோக்கி கொண்டு செல்கிறது அல்லது படைப்பை உருவாக்கும் நம்பிக்கையை அளித்து, ஒவ்வொரு ஒவ்வொரு இளைம் நபருக்கும் ஒரு உண்மையான இடத்தை அளிக்கிறது. அவர்களின் ஆற்றல் அவர்களை எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் முன்னேற அவர்களுக்கு உதவுகிறது.
மாற்றுக் கற்றல் திறன் கொண்ட இளைஞர்களுக்கு படைப்பாற்றல் மிக்க கற்பித்தல், தமது ஸ்டுடியோக்கள் மற்றும் பரந்த சமூகத்திற்கான பாதையைத் திறக்கும் இரண்டு வருட ஆதரவுக் கல்வித் திட்டமான ‘Young Creatives Program for Children with Special Needs’ எனும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக AOD அறிவித்துள்ளது.
கலை, உருவாக்கும் அல்லது வடிவமைக்கும் திறன் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுகின்ற மேலதிக கற்றல் மற்றும் ஆதரவுத் தேவைகளைக் கொண்ட மாணவர்களை இத்திட்டம் வரவேற்கிறது. மாணவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் AOD வளாகத்திற்கு வருகை தந்து, தமது அர்ப்பணிப்பு மிக்க குழுவினரின் ஆதரவோடு, ஒவ்வொரு தனிநபருக்கும் ஏற்ற வேகத்தில் கற்பிக்கப்படும் நடைமுறை ரீதியான கலை, கைவினை மற்றும் வடிவமைப்பு மூலம் கற்பிக்கப்படுவார்கள். படைப்பாற்றல் மிக்க பாடத்திட்டத்துடன் இணைந்து, மாணவர்கள் லண்டன் சாதாரண தர பரீட்சைகளை நோக்கிப் பயணிக்கும் வகையில் ஆங்கிலம் மற்றும் கணிதக் கல்வியையும் தொடரலாம்.
வெற்றியை ஒரே வழியில் வரையறுக்காதிருப்பதே இத்திட்டத்தின் தனித்துவமாகும். ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் மருத்துவப் பரிசோதனை அறிக்கையைக் கொண்டு மதிப்பிடப்படாமல், ஒரு தனிநபராக மதிப்பிடப்படுகிறார்கள். மேலும் ஒவ்வொருவரும் அவர்களின் சொந்த பலங்கள், ஆர்வங்கள் மற்றும் தேவைகளைச் சுற்றி கட்டியெழுப்பப்பட்ட ஒரு தனிப்பட்ட கற்றல் திட்டத்தைப் பின்பற்றுகிறார்கள். சில மாணவர்கள் இந்த இரண்டு ஆண்டுகளையும் AOD இன் ‘Foundation’ (ஆரம்ப நிலை) திட்டத்திலிருந்து, காலப்போக்கில் ‘BA (Hons)’ பட்டப்படிப்பு வரையிலும் செல்வதற்கான ஒரு படியாக இதனை பயன்படுத்துவார்கள். ஏனையோர் நடைமுறை ரீதியான படைப்பாற்றல் திறன்கள், தமது சொந்த படைப்புகளின் தயாரிப்புகள் மற்றும் முன்னோக்கிச் செல்வதற்கான நம்பிக்கை மற்றும் சுதந்திரத்துடன் செயற்படுகின்ற நிலையை அடைவார்கள். இந்த இரண்டு பயணங்களும் ஒரே அளவில் பயனுள்ளவையாக அமைகின்றன.
இது குறித்து, AOD இன் நிறுவுனரும் அதன் தலைவருமான லிண்டா ஸ்பெல்டேவிண்டே (Linda Speldewinde) தெரிவிக்கையில், “ஒவ்வொரு இளைஞரும் உருவாக்க, கற்றுக்கொள்ள, சாதனைகளை அடைய வாய்ப்பைப் பெறத் தகுதியானவர்களாவர். இந்தத் திட்டமானது ஒவ்வொரு குழந்தையும் அவர்கள் இருக்கும் நிலையிலேயே இணைக்கப்பட்டு, எமது படைப்பாற்றல் சமூகத்திற்குள் அவர்களுக்கான ஒரு உண்மையான இடத்தை பெறுவதை நோக்கமாக கொண்டதாகும். சிலருக்கு இது பட்டப்படிப்புக்கு வழிவகுப்பதோடு, ஏனையோருக்கு இது நம்பிக்கை, சுதந்திரமான செயற்படுதல் மற்றும் சொந்தமாக ஒன்றை உருவாக்குவதன் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த இரண்டு விடயங்களும் எமக்கு ஒரேயளவான முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகிறது.” என்றார்.
மாணவர்கள் வரைதல், ஓவியம், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, சிற்பம், ஆடைக்கலை, டிஜிட்டல் படைப்பாற்றல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ஆராய்ந்து அறிவதுடன், ஆடை வடிவமைப்பு மற்றும் கிரபிக் வடிவமைப்பு முதல் புகைப்படம் எடுத்தல் மற்றும் இடஞ்சார்ந்த வடிவமைப்பு வரை AOD இன் புகழ் பெற்று விளங்கும் வடிவமைப்புத் துறைகளுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டு இணைக்கப்படுவார்கள். இவற்றுடன், அவர்கள் தமக்கான ஒரு பாதையை உருவாக்கி, தமது படைப்புகளைப் பற்றி பேசவும் காட்சிப்படுத்தவும் கற்றுக்கொள்கிறார்கள்.
இத்திட்டத்தின் மற்றுமொரு முக்கிய அம்சம் யாதெனில், தற்போதுள்ள AOD BA (Hons) மாணவர்களின் பங்கேற்பாகும். இவர்கள் இளம் படைப்பாளர்களின் வழிகாட்டிகளாக செயற்படுவார்கள். ஆசிரியர்கள், கற்றல் உதவி ஊழியர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் இணைந்து பணியாற்றும் இந்த வழிகாட்டிகள், பங்கேற்பாளர்களுக்குப் பொருத்தமான படைப்பாற்றல் முன்மாதிரிகளை வழங்குவதுடன், அனைவரையும் உள்ளீர்ப்பதானது தனியான ஒரு செயற்பாடாகப் பார்க்காமல், அகடமியின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அம்சமாக கருதி முன்னெடுத்துச் செல்வார்கள்.
இது குறித்து, Young Creatives திட்டத்தின் படைப்பாற்றல் தலைவர் மரியா தெரிவிக்கையில், “எமது ஆரம்பப் புள்ளி எப்போதும் மாணவர்கள் தான்; அவர்களை அடையாளப்படுத்துகின்ற விதம் அல்ல. ஒரு இளைஞனால் என்ன செய்ய முடியும்; செய்ய விரும்புகிறான் என்பதைச் சுற்றிய கற்றலை உருவாக்கும் போது, குறிப்பிடத்தக்க விடயங்கள் இங்கு இடம்பெறுகின்றன. இந்தச் மாணவர்கள் அதைத் தாங்களாகவே கண்டறிய இத்திட்டம் இடமளிக்கிறது.” என்றார்.
மாணவர்கள் தமது படைப்புகளை AOD இல் நடைபெறும் ‘Young Creatives Exhibitions’ கண்காட்சிகள் மூலம் காட்சிப்படுத்துவார்கள். அத்துடன், இரண்டு வருடங்களை நிறைவு செய்பவர்கள் ஒரு பிரத்தியேக பட்டமளிப்பு விழாவில் பட்டம் வழங்கி கெளரவிக்கப்படுவார்கள்.
படைப்பாற்றல் என்பது அனைவருக்குமானதாகும். அத்துடன். வடிவமைப்பு கல்வியானது வளர்ச்சி, நம்பிக்கை, சாத்தியப்பாடுகளுக்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கும் எனும், AOD முன்னிலைப்படுத்தி வரும் நீண்டகால நம்பிக்கையை இத்திட்டம் பிரதிபலிக்கிறது.
இது குறித்து, AOD நிறுவகத்தின் நரம்பியல் பன்முகத்தன்மை மற்றும் உள்ளீர்க்கப்பட்ட கல்வி தொடர்பான ஆலோசகரான சாரா யூசுபலி தெரிவிக்கையில், “நரம்பியல் மாற்றம் கொண்ட மாணவர்கள், பெரும்பாலும் தமக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படாத கற்றல் சூழல்களில் இணைப்பதற்காக கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இது அவர்களின் செயல்திறனைப் பாதிக்கிறது, இடைவிலகல் விகிதங்களை அதிகரிப்பதோடு, அவர்களின் சுயமரியாதையைக் குறைக்கிறது. ஒவ்வொரு தனிப்பட்ட மாணவரின் தேவைகளுக்கும் ஆதரவளித்து, அவர்களின் பலங்களை வளர்க்கும் ஒரு கற்றல் சூழலை உருவாக்குவதன் மூலம், அது தொடர்பான தடையை இந்தத் திட்டம் அடிமட்டத்திலிருந்தே தடுக்கிறது. எமது மாணவர்கள் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டறிய அவர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு, ஒரு நிறுவனமாக நாம் யார் என்பதையும் வெளிப்படுத்துகிறது.” என்றார்.
இதில் இணைய விரும்பும் பாடசாலைகள், பெற்றோர்கள், பாதுகாவலர்கள், தொழில்முறை வல்லுநர்கள் 077 308 7782 ஊடாக AOD ஐத் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறலாம்.
Photo caption: AOD வளாகத்தில் ‘Young Creatives Program’ திட்டத்தின் பின்னணியில் உள்ள குழுவினருடன், AOD நிறுவுனரும் அதன் தலைவியுமான லிண்டா ஸ்பெல்டேவிண்டே, அவருடன் நரம்பியல் ஆலோசகர் (neurodivergence adviser) சாரா யூசுபலி, திட்ட தலைவர் அஷந்தி ஹந்துன்கே, படைப்பாற்றல் தலைவர் மரியா பெரெஸ் ஆகியோரை படத்தில் காணலாம்.