தனது உதிரிப் பாகங்கள் காட்சியறையை நவீனமயப்படுத்தி வசதியான சேவையை வழங்கும் Euro Motors

தனது உதிரிப் பாகங்கள் காட்சியறையை நவீனமயப்படுத்தி வசதியான சேவையை வழங்கும் Euro Motors

Off By

Euro Motors நிறுவனம், தமது Jetour, Dongfeng, JAC, Bonluck, Ankai, Joylong ஆகிய வாகனங்கள், ட்ரக்குகள் மற்றும் பஸ்களுக்கான அசல் உதிரிப் பாகங்களை வாடிக்கையாளர்கள் எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வகையில், இலக்கம் 27, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை, கொழும்பு-10 இல் அமைந்துள்ள அதன் பிரத்தியேக உதிரிப்பாகங்கள் காட்சியறையை அண்மையில் மீள்புதுப்பித்து அறிமுகப்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட வாகன உரிமையாளர்கள், பெருநிறுவன வாடிக்கையாளர்கள், வாகன செயற்படுத்துனர்கள் மற்றும் விபத்து பழுதுபார்ப்புகளுக்கு நம்பகமான தீர்வுகளைத் தேடும் காப்புறுதி நிறுவனங்கள் தமக்குத் தேவையான உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்வதை மிகவும் எளிதாகவும் வசதியாகவும் மாற்றும் வகையில், புதிதாக நவீனமயமாக்கப்பட்ட இந்தக் காட்சியறையானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அசல் உதிரிப் பாகங்களின் பரந்த தெரிவை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதன் மூலம், இந்தக் காட்சியறையானது வாடிக்கையாளர்களின் வாகனப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புத் தேவைகளுக்கு அணுகக்கூடிய ஒரேயொரு இடமாகச் செயற்படுகிறது.

இதனுடன் இணைந்தவாறு, எளிதான கொள்வனவு கோரிக்கை மற்றும் விநியோகச் சேவையும் வாடிக்கையாளர்களின் வசதியை மேலும் மேம்படுத்துகிறது. காட்சியறைக்கு நேரடியாக வர முடியாத வாடிக்கையாளர்கள், உதிரிப் பாகக் காட்சியறையை நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்களுக்குத் தேவையான பாகங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் அவற்றிற்கான கொள்வனவுக் கோரிக்கையை மேற்கொள்ளவும் முடியும். திங்கள் முதல் வெள்ளி வரையிலும், சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்கும் இக்காட்சியறையின் மூலம், கையிருப்பின் அடிப்படையில், வேலை நாட்களில் 24 மணி நேரத்திற்குள் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகள் இருப்பிடங்களுக்கே விநியோகிக்கப்படும். 

இந்த மீள்புதிப்பித்தல் நடவடிக்கையுடன் இணைந்ததாக, பல்வேறு கவர்ச்சிகரமான ‘இணைந்த சலுகைகளும்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்யும்போது மேலதிக மதிப்பை வழங்குகிறது. இந்த சலுகைகள் சரியான மாற்றுப் பாகங்களை மிக இலகுவாக அணுகக்கூடியதாக மாற்றுவதுடன், வாடிக்கையாளர்கள் தங்களது வாகன பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வசதியான மற்றும் செலவு குறைந்த வழியையும் வழங்குகின்றன.

உயர் பெறுமதி கொண்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு, அசல் உதிரிப் பாகங்களைத் தெரிவு செய்வது வாகனத்தின் நீண்டகால செயல்திறனையும் நீடித்து உழைக்கும் தன்மையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்தும். அசல் உதிரிப் பாகங்கள் அந்தந்த வாகனத்திற்கு ஏற்ப பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது வாகனத்தின் பொருந்தக்கூடிய தன்மை, நம்பகத்தன்மை மற்றும் நிலையான செயல்திறனை உறுதிப்படுத்த உதவுகிறது. உத்தரவாதக் காலத்தில் உள்ள வாகனங்களுக்கும், அதற்குப் பின்னரும் சரியான உதிரிப்பாகங்களைப் பயன்படுத்துவது வாகனத்தையும் உரிமையாளர் முன்னெடுத்த முதலீட்டையும் பாதுகாக்க உதவும் என்பதால் இது மிகவும் முக்கியமானதாகும்.

ஒரு மாற்றுப் பாகத்திற்கு ஏற்படும் உடனடியான செலவை மாத்திரம் பார்க்காமல், தங்களது வாகனத்தின் நீண்டகால மதிப்பில் வாடிக்கையாளர்கள் கவனம் செலுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம், அசல் உதிரிப்பாகங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்துவதில் Euro Motors கவனம் செலுத்துகின்றது. புதிதாக மீளறிமுகம் செய்யப்பட்ட இக்ககாட்சியறையானது வாடிக்கையாளர்கள் மிக இலகுவாக அணுகவும், தொழில்முறை ஆதரவு மற்றும் வசதியான கொள்முதல் தெரிவுகளை வழங்குவதன் மூலமும் இந்த உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.

உயர் மட்ட காட்சியறை சூழலானது Euro Motors வர்த்தகநாம தயாரிப்புகளுடன் தொடர்புடைய தரம் மற்றும் நம்பகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் தமது வாகனங்களுக்கான பாகங்களை கொள்வனவு செய்யும்போது அதிக நம்பிக்கையை அளிக்கிறது. அசல் உதிரிப்பாகங்கள், இணைந்த சலுகைகள், எளிதான கொள்வனவு நடைமுறை மற்றும் இருப்பிடத்திற்கே விநியோகித்தல் ஆகிய விடயங்களின் ஒன்றிணைவுடன், மீளறிமுகம் செய்யப்பட்ட Euro Motors உதிரிப்பாக காட்சியறையானது வாடிக்கையாளர்கள் சரியான உதிரிப்பாகங்கள் மூலம் தமது வாகனங்களை உரிய முறையில் பராமரிக்கவும், வாகனத்தின் பெறுமதியை சரியாக பாதுகாக்கவும், நீண்ட காலத்திற்கு நம்பகமான செயல்திறனை உறுதிப்படுத்தவுமான தடையற்ற வாய்ப்பை வழங்குகிறது.

மேலதிக விபரங்கள் மற்றும் கொள்வனவுச் செயற்பாடுகளுக்கு, இலக்கம் 27, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை, கொழும்பு 10 இல் அமைந்துள்ள Euro Motors உதிரிப்பாக காட்சியறைக்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக விஜயம் செய்யலாம் அல்லது 011 2 698 900 மற்றும் 0776 797 002 தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இக்காட்சியறையைத் தொடர்பு கொள்ளலாம்.