இலங்கையின் விசேடத்துவத்தை கட்டியெழுப்பும் 25 ஆண்டு கால பயணத்தை கொண்டாடும் SMS Holdings

இலங்கையின் விசேடத்துவத்தை கட்டியெழுப்பும் 25 ஆண்டு கால பயணத்தை கொண்டாடும் SMS Holdings

Off By

வீடொன்றை நிர்மாணிக்கும் திட்டத்தின் போது 25 ஆண்டுகளுக்கு முன்னர் தற்செயலான ஒரு அவதானிப்பு மூலம் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமே, இன்று இலங்கையின் முன்னணி பன்முக வணிக குழுமங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தனது 25ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் SMS Holdings, தரை பாவுகை கற்கள் (Paving Stone) உற்பத்தி எனும் ஒரேயொரு வணிகத்திலிருந்து கட்டுமானம், பொறியியல், தோற்றவமைப்புத் திட்டங்கள் (landscaping), பெருந்தோட்டம், விருந்தோம்பல், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி என பரந்துபட்ட ஒரு நிறுவனமாக மாறிய தனது அபாரமான தொழில்முனைவோர் பயணத்தை எடுத்துக் காட்டுகிறது. அதே வேளையில் தரம், புத்தாக்கம் மற்றும் நிலைபேறான தேசிய வளர்ச்சிக்குத் தனது அர்ப்பணிப்பில் அசைக்க முடியாத உறுதியுடன் நிறுவனம் இயங்கி வருகிறது.

இக்குழுமம் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில், தரம், ஒருமைப்பாடு, வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகிய தனது நிறுவன பாரம்பரிய மதிப்புகளுக்கு உண்மையாக இருந்து வரும் அதே வேளையில், புத்தாக்கங்களை ஏற்றுக்கொள்ளல், ஊழியர்களில் முதலீடு செய்தல் மற்றும் புதிய துறைகளில் கால் பதித்தல் ஆகியவற்றின் மூலம் தொடர்ச்சியாக பரிணமித்து வந்துள்ளது.

தொழில்முயற்சியாளரான ஷெஹான் செனவிரத்ன என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட SMS Holdings, தரம் மற்றும் நீடித்துழைக்கும் தன்மையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இணையான மாற்று உள்ளூர் தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் எனும் எளிய, அதே சமயம் இலட்சியமிக்க தொலைநோக்குப் பார்வையுடன் கட்டியெழுப்பப்பட்டது. தனது சொந்த வீட்டில் திட்டப் பணியொன்றை மேற்கொண்ட போது சந்தையில் தரமான தரைப் பாவுகை கற்கள் இல்லாததை கண்டறிந்த ஷெஹான் செனவிரத்ன, இலங்கை உற்பத்திகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், சர்வதேச தரங்களைப் பூர்த்தி செய்யும் உலகத்தரம் வாய்ந்த தரை பாவுகை தயாரிப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை உணர்ந்தார்.

கடந்த இரண்டரை தசாப்தங்களில், அந்தத் தொலை நோக்குப் பார்வை அதன் தொடக்கப் புள்ளியையும் தாண்டி சீராக விரிவடைந்துள்ளது. இன்று, SMS Holdings நிறுவனம் இலங்கை முழுவதும் உள்ள ஏராளமான அரச மற்றும் தனியார் துறை அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒரு நம்பிக்கையான பங்காளியாக மாறியுள்ளது. முக்கிய உட்கட்டமைப்பு, பொறியியல் மற்றும் தோற்றவமைப்பு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள அதே வேளையில், பெருந்தோட்டம், விருந்தோம்பல், ஏற்றுமதி, உயர்தர மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி உள்ளிட்ட புதிய துறைகளிலும் தடம் பதித்துள்ளது.

தொடர்ச்சியாக தரமான தயாரிப்புகளை வழங்குதல், நீண்டகால உறவுகளை வளர்த்தல் மற்றும் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் புத்தாக்கங்களை ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றின் மீதே இக்குழுமத்தின் வெற்றி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த அர்ப்பணிப்பானது, SMS Holdings நிறுவனத்திற்கு 38 இற்கும் மேற்பட்ட துறைசார் அங்கீகாரங்களையும், ISO 9001, ISO 14001, ISO 45001, ISO 22000, HACCP, GMP போன்ற சர்வதேச அங்கீகாரங்களையும், அதன் உயர்ரக கறுவாப்பட்டை தயாரிப்புகளுக்கான புவியியல் சார்ந்த குறியீடு (Protected Geographical Indication – PGI) சான்றிதழையும் பெற்றுத் தந்துள்ளது.

SMS Holdings நிறுவனத்தின் நிறுவுனரும் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷெஹான் செனவிரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “25 ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கை வணிக நிறுவனங்களால் உலகின் மிகச்சிறந்த தயாரிப்புகளுக்கு இணையான பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் எனும் எளிய நம்பிக்கையுடனேயே நாம் இதனை ஆரம்பித்தோம். அன்றிலிருந்து நாம் எட்டிய ஒவ்வொரு மைல்கல்லும் எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பு, வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, எமது பங்காளர்களின் ஆதரவு மற்றும் இந்த நிறுவனத்தில் நம்பிக்கை வைத்த ஒவ்வொரு பங்குதாரரின் ஒத்துழைப்பு ஆகியவற்றால் மாத்திரமே இது சாத்தியமானது. இந்த வருட நிறைவு கொண்டாட்டமானது எமது கடந்த காலத்தைக் கொண்டாடுவதோடு மட்டுமன்றி, இலங்கைக்கு நிலைபேறான மதிப்பை உருவாக்கும் அதே வேளையில், சர்வதேச சந்தைகளில் உண்மையான இலங்கைத் தயாரிப்புகளை வெளிப்படுத்தும் வணிக நிறுவனங்களை தொடர்ச்சியாக கட்டியெழுப்புவதற்கான ஒரு அர்ப்பணிப்புமாகும்.” என்றார்.

பல வருடங்களாக நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் பல ஊழியர்கள் தமது தொழில் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டுள்ளதால், நிறுவனத்தின் வளர்ச்சியின் மையப்புள்ளியாக தொடர்ச்சியாக ஊழியர்களே இருந்து வருகின்றனர். வலுவூட்டப்பட்ட மனிதவளம், உறுதியான கூட்டாண்மை மற்றும் விசேடத்துவத்தை அடைவதற்கான கூட்டு அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலமே நிலைபேறான வெற்றி கட்டியெழுப்பப்படுகிறது என்பதை உணர்ந்து, தனது பணியாளர்கள் தொடர்பான விடயங்களில் SMS Holdings தொடர்ச்சியாக முதலீடு செய்து வருகிறது.

தமது தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாக, பெருந்தோட்டத்துறை, விருந்தோம்பல், உயர்ர ரக மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் இக்குழுமம் தடம் பதித்துள்ள அதே வேளையில், அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் தனது செயற்பாடுகளின் மூலம் உலகளாவிய தடத்தையும் விரிவுபடுத்தியுள்ளது. ‘Cinnalon’ எனும் தமது பிரீமியம் கறுவா வர்த்தகநாமம் மூலம், SMS Holdings அசல் இலங்கை கறுவா (True Ceylon Cinnamon) மற்றும் ஏனைய இலங்கைத் தயாரிப்புகளை உலகளாவிய சந்தைகளில் முன்னிலைப்படுத்தி வருகிறது. இது உயர்தர ஏற்றுமதிப் பொருட்களை உற்பத்தி செய்வதில் இலங்கையின் புகழை வலுப்படுத்துவதுடன், இக்குழுமத்தின் மேம்பட்டு வரும் சர்வதேச இருப்பையும் உறுதிப்படுத்துகிறது.

எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில், வேலைவாய்ப்பு உருவாக்கம், உள்ளூர் உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்ச்சியாக பங்களிக்கும் அதே வேளையில், புத்தாக்கங்ளை முன்னெடுத்தல், சர்வதேச ரீதியில் விரிவடைந்து முன்னேறல், உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இலங்கை வர்த்தகநாமங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் எஸ்எம்எஸ் ஹோல்டிங்ஸ் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. 25 ஆண்டுகால வளர்ச்சியைக் கொண்டாடும் இந்த தருணத்தில், தொழில்முனைவோர் தொலைநோக்குப் பார்வை, தரத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் இலங்கைக்கும் உலகிற்கும் நீண்ட கால நிலையான மதிப்பை உருவாக்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஒரு சான்றாக SMS Holdings நிறுவனம் விளங்குகிறது.