தனது முதலாவது ஈரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, மேம்பட்ட சுகாதாரத் துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டிய Asiri Central Hospital

தனது முதலாவது ஈரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, மேம்பட்ட சுகாதாரத் துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டிய Asiri Central Hospital

Off By

Asiri Central Hospital தனது முதலாவது ஈரல் மாற்று அறுவைசிகிச்சையை (Liver Transplant) வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இது இலங்கையின் விசேடத்துவம் வாய்ந்த சுகாதாரத்துறையின் மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், ஈரல் நோயால் பாதிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உடலுறுப்பு மாற்று அறுவைசிகிச்சை நிபுணர்கள், ஈரல் நோய் நிபுணர்கள் (hepatologists), மயக்க மருந்து நிபுணர்கள் (anesthetists), தீவிர சிகிச்சை நிபுணர்கள் (intensivists), விசேட பயிற்சி பெற்ற தாதியர் குழுக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார நிபுணர்கள் உள்ளிட்ட பன்முகத் துறை சார்ந்த, மிகவும் அனுபவம் வாய்ந்த, உடலுறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக் குழுவினரால் இந்த சிக்கலான அறுவைசிகிச்சை செயன்முறை மேற்கொள்ளப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த உடலுறுப்பு மாற்று அறுவைசிகிச்சை பராமரிப்பை உள்நாட்டிலேயே வழங்குவதற்கு தேவையான அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம், விசேட உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவத் திறன்களில் மருத்துவமனை தொடர்ந்து மேற்கொண்டு வரும் முதலீடுகளையே இந்த வெற்றிகரமான முடிவு பிரதிபலிக்கிறது.

இந்த சாதனை குறித்து Asiri Central/ Asiri Surgical/ Asiri Medical ஆகியவற்றின் பிரதம செயற்பாட்டு அதிகாரி டாக்டர் சமந்தி டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “எமது முதலாவது ஈரல் மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இது Asiri Central Hospital இன் ஒரு முக்கிய சாதனையாகும் அத்துடன் எமது பன்முகத் துறை சார்ந்த மருத்துவக் குழுக்களின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் கூட்டு உழைப்பை இது வெளிப்படுத்துகிறது. மிக முக்கியமாக, இது ஈரல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஒரு புதிய நம்பிக்கையை வழங்குகிறது. இலங்கையின் சுகாதாரத் தரத்தை மேம்படுத்துவதற்கும், நோயாளிகளின் சுகவாழ்வையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தக்கூடிய விசேட சிகிச்சைகளை பெறுவதற்கான அணுகலை அதிகரிப்பதற்கும் நாம் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.” என்றார்.

நவீன மருத்துவத்தில் மிக அதிநவீன செயன்முறைகளில் ஒன்றாக ஈரல் மாற்று அறுவைசிகிச்சை காணப்படுகிறது, இதற்கு அறுவைசிகிச்சைக்கு முன்னரும், பின்னரும், அறுவைசிகிச்சையின் போதும் பல்வேறு மருத்துவத் துறைகளுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பு அவசியமாகும். இந்த சாதனையானது, மேம்பட்ட ஈரல் மாற்று அறுவைசிகிச்சையை நாடும் நோயாளிகள் வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை பெறுவதற்கான தேவையைக் குறைப்பதுடன், சர்வதேச தரம் வாய்ந்த பூரண பராமரிப்பை தங்களது நாட்டிலேயே பெறுவதற்கான வாய்ப்பையும் அவர்களுக்கு வழங்குகிறது.

பாதிக்கப்பட்ட நோயாளி மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பொறுத்தவரை, இந்த வெற்றியானது அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைகிறது. அத்துடன் கடுமையான ஈரல் நோய் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட சிகிச்சை தெரிவுகளைக் கொண்ட நபர்களுக்கு, இத்தகைய மேம்பட்ட உடலுறுப்பு மாற்றீட்டு அறுவைசிகிச்சை சேவைகள் மூலம் எவ்வாறானதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது.

மருத்துவ விசேடத்துவம், புத்தாக்கம் மற்றும் நோயாளியை மையமாகக் கொண்ட பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் மிகவும் விசேடமான, உலகத்தரம் வாய்ந்த மருத்துவ நடைமுறைகளை உள்நாட்டிலேயே வழங்க முடியும் என்பதை நிரூபித்துள்ளதன் ஊடாக, Asiri Central Hospital ஆனது, மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்கும் இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

END