உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து தேசிய அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்பாட்டு திட்டத்தை வெளியிட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து தேசிய அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்பாட்டு திட்டத்தை வெளியிட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

Off By

– அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC), இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் (WFP) தொழில்நுட்ப வழிகாட்டல் தலைமைத்துவம், அமெரிக்க அரசாங்கத்தின் தாராளத் தன்மையுடனான நிதியுதவியுடன், இலங்கையின் 2026-2030ஆம் ஆண்டுகளுக்கான ‘அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்பாட்டு நடவடிக்கை’ (Anticipatory Action – AA) திட்டத்தை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டது. அரசாங்க நிறுவனங்கள், ஐ.நா. மற்றும் மனிதாபிமான பங்காளர்கள் பலரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்வின் மூலம், முக்கிய துறைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான உரிய முறையில் அமைந்த ஒரு அணுகுமுறை வகுக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னெச்சரிக்கை செயற்பாட்டு திட்டமானது, அனர்த்தங்கள் மூலமான பாதிப்புகளை முன்கூட்டியே கணித்தல், முன்னெச்சரிக்கை கட்டமைப்புகள், முற்கூட்டியே ஒதுக்கப்பட்ட அனர்த்த நிவாரண நிதியுதவி ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் அனர்த்தத் தயார்நிலையை வலுப்படுத்துகிறது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC), உலக உணவுத் திட்டம் (WFP), ஏனைய ஐநா முகவர் நிலையங்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (INGO/NGO), சிவில் சமூகம் மற்றும் தனியார் துறை பங்காளர்களை உள்ளடக்கிய ‘தேசிய முன்னெச்சரிக்கை செயற்பாட்டு நடவடிக்கை பணிக்குழுவின்’ (National Anticipatory Action Working Group) ஊடாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இது அனர்த்த அபாயங்களைக் குறைப்பதற்கும், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை சிறந்த முறையில் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகளை, சரியான நேரத்தில் முன்கூட்டியே எடுப்பதற்கு ஆதரவளிக்கும்.

#                 #                   #

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) ஆனது, அவசர காலங்களில் உயிர்களைக் காப்பதற்கும், உணவு உதவியைப் பயன்படுத்தி மோதல்கள், அனர்த்தங்கள் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களில் இருந்து மீண்டு வரும் மக்களுக்கு அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பை நோக்கிய பாதையை உருவாக்குகின்ற, உலகின் மிகப்பெரிய மனிதாபிமான அமைப்பாகும்.

@WFPSriLanka ஊடாக Facebook, Instagram, X (முன்னர் Twitter) மூலம் சமூக வலைத்தளங்களில் எம்மை பின்தொடரவும்.

மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்: (email: [email protected]):
Carol Taylor, WFP, Tel. +94 766 578432