“புத்திசாலித்தனமான எதிர்காலத்தை உருவாக்குதல்” எனும் கருப்பொருளின் கீழ் “ZTE Day 2026” நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்த ZTE Lanka நிறுவனம்

“புத்திசாலித்தனமான எதிர்காலத்தை உருவாக்குதல்” எனும் கருப்பொருளின் கீழ் “ZTE Day 2026” நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்த ZTE Lanka நிறுவனம்

Off By

இலங்கை, கொழும்பு – இணைப்புத்திறன் (Connectivity) மற்றும் டிஜிட்டல் மேம்பாட்டின் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு எழுச்சியூட்டும் நிகழ்விற்காக, விசேட விருந்தினர்கள், தொழில்துறை பங்குதாரர்கள், வணிக கூட்டாளர்கள், தொழில்நுட்பத் தலைவர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் ஆகியோரை ஒன்றிணைத்து. ‘ZTE Day 2026’ நிகழ்வை 2026 மே 29ஆம் திகதி Galle Face ஹோட்டலின் Grand Ballroom மண்டபத்தில் ZTE Lanka நிறுவனம் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது.

“புத்திசாலித்தனமான எதிர்காலத்தை உருவாக்குதல்” (Creating an Intelligent Future) எனும் கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட இந்நிகழ்வானது, Connectivity, Computing, Capability, Intelligence ஆகிய தமது முக்கிய தூண்களின் மூலம் புத்தாக்கங்களுக்கு உந்துசக்தி அளிப்பதற்கான ZTE இன் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தது. மேம்பட்ட தொழில்நுட்பத் தீர்வுகள் எவ்வாறு கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, இலங்கை முழுவதிலும் உள்ள வணிகங்கள், சமூகங்கள் மற்றும் நுகர்வோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதை காண்பிப்பதற்கான ஒரு விறுவிறுப்பான தளமாக ZTE Day 2026 அமைந்தது.

தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னணியாளராக விளங்கும் ZTE நிறுவனம், மேம்பட்ட வலையமைப்பு உட்கட்டமைப்பு, ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் மூலம் டிஜிட்டல் சூழல் கட்டமைப்பை வடிவமைப்பதில் தொடர்ச்சியாக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிகழ்வானது ZTE இன் மூலோபாய தொலைநோக்கு பார்வை, தொழில்நுட்ப திறன்கள் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பரிணாம வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான நீண்டகால அர்ப்பணிப்பு பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கியது.

இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong (கீ சென்ஹொங்), பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தி அளிப்பதிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வகிக்கும் வளர்ந்து வரும் பங்கினை எடுத்துரைத்தார். தொலைத்தொடர்பாடல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு (AI), ஸ்மார்ட் சிட்டி மேம்பாடு போன்ற துறைகளில் சீனாவும் இலங்கையும் பரந்த அளவிலான ஒத்துழைப்பு வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ZTE உள்ளிட்ட நிறுவனங்கள் இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் உயர்தர ‘பட்டுப்பாதை’ (Belt and Road) ஒத்துழைப்பிற்கு தொடர்ச்சியாக பங்களிப்பு செய்யும் என நம்பிக்கை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ZTE Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜாவோ லியாங் (Zhao Liang), “ZTE Day 2026 ஆனது, இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்திற்கு ஆதரவளிப்பதற்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. புத்தாக்கம், இணைப்புத்திறன் மற்றும் வலுவான கூட்டாண்மைகள் மூலம், நாட்டிற்கு மிகவும் புத்திசாலித்தனமான, இணைக்கப்பட்ட மற்றும் நிலைபேறான எதிர்காலத்தை கட்டியெழுப்ப உதவும் தீர்வுகளை வழங்குவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்றார்.

மதிப்புமிக்க கூட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், தொழில்துறை பங்குதாரர்களுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு ZTE Lanka நிறுவனத்திற்கு இந்நிகழ்வு ஒரு முக்கிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நிலப்பரப்பிற்கு ஆதரவளிக்கும் நம்பகமான, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகளை வழங்குவதில் நிறுவனத்தின் தொடர்ச்சியான கவனத்தை இது பிரதிபலித்தது.

ZTE Day 2026 நிகழ்வானது சிந்தனைத் தலைமைத்துவ அமர்வுகள், தொழில்நுட்ப கண்காட்சிகள், மூலோபாய விவாதங்கள், கூட்டாளர் ஈடுபாட்டு திட்டங்களைக் கொண்டிருந்ததுடன், இது ZTE Lanka நிறுவனத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. பங்கேற்பாளர்களின் வலுவான பங்களிப்பும் சாதகமான பின்னூட்டங்களும், இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மேம்பட்ட டிஜிட்டல் தீர்வுகளின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை மேலும் நிரூபித்துள்ளன.

ZTE Day 2026 இன் வெற்றிகரமான நிறைவுடன், மேம்பட்ட இணைப்புத்திறன், புத்திசாலித்தனமான தீர்வுகள் மற்றும் நிலைபேறான புத்தாக்கங்கள் மூலம் இலங்கையை வலுவூட்டுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நம்பகமான தொழில்நுட்பக் கூட்டாளி எனும் தனது நிலையை ZTE Lanka மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.