‘AHK Sri Lanka Oktoberfest by Fairway’ நிகழ்வை நடத்துவதற்காக Fairway Holdings நிறுவனத்துடன் கைகோர்க்கும் AHK Sri Lanka

‘AHK Sri Lanka Oktoberfest by Fairway’ நிகழ்வை நடத்துவதற்காக Fairway Holdings நிறுவனத்துடன் கைகோர்க்கும் AHK Sri Lanka

Off By

இலங்கை மற்றும் ஜேர்மனிக்கு இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக, Fairway Holdings நிறுவனத்தின் துணை நிறுவனமான F Entertainment, இலங்கையில் உண்மையான ஜேர்மனி ‘Oktoberfest’ (ஒக்டோபர்ஃபெஸ்ட்) கொண்டாட்டத்தை நடத்துவதற்காக இலங்கையிலுள்ள ஜேர்மனி தொழில் மற்றும் வர்த்தகக் குழுவுடன் (AHK Sri Lanka) மூலோபாயக் கூட்டாண்மையில் இணைந்துள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஜேர்மனி தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியூமன் (H.E. Dr. Felix Neumann) முன்னிலையில் கொழும்பிலுள்ள AHK Sri Lanka அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வு ஒக்டோபர் 14 முதல் 17 வரை கொழும்பில் நடைபெறவுள்ளதுடன், இலங்கையில் இதுவரை கண்டிராத ஒரு உண்மையான Bavarian (பவேரியன்) அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AHK Sri Lanka Oktoberfest by Fairway என்பது ஜேர்மன் நாட்டு நிறுவனமொன்றின் நேரடிப் பங்களிப்புடன் இலங்கையில் ஏற்பாடு செய்யப்படும் முதலாவது Oktoberfest நிகழ்வாகும். இந்த விழாவில் ஜேர்மனியைச் சேர்ந்த உண்மையான ‘Oompah Band’ இசைக்குழுவினர் நேரடி இசை நிகழ்ச்சிகளை வழங்குவர். இவர்கள் தமது உலகளாவிய சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக பெங்கொக், ஹோ சி மின் சிட்டி, டா நாங், ஹனோய் ஆகிய நகரங்களை தொடர்ந்து கொழும்பிற்கும் வருகை தருகின்றனர்.

மியூனிக் நகரின் புகழ்பெற்ற பியர் கூடாரங்களை நினைவூட்டும் உற்சாகமான சூழல், பாரம்பரிய பவேரியன் உணவு வகைகளான பிரெட்செல்ஸ் (pretzels), மொறுமொறுப்பான ஸ்னிட்செல்ஸ் (schnitzels) மற்றும் சுவையான சோசேஜஸ்கள் (sausages) என அனைத்தையும் உயர்தர பானங்களுடன் விருந்தினர்கள் இங்கு அனுபவிக்க முடியும். விறுவிறுப்பான இசை, கண்கவர் அலங்காரங்கள், தோழமையை ஏற்படுத்தக் கூடிய இந்த விழாவானது, விருந்தினர்களை கொழும்பின் இதயப்பகுதியிலிருந்து ஜேர்மனிக்கு அழைத்துச் செல்லும்.

இது குறித்து Fairway Holdings நிறுவனத்தின் தலைவர் விராத் டி அல்விஸ் தெரிவிக்கையில், “இலங்கையிலுள்ள ஜேர்மன் தொழில் மற்றும் வர்த்தகக் குழுவுடன் இணைந்து ஒரு உண்மையான ஜேர்மன் Oktoberfest கொண்டாட்டத்தை இங்கு நடத்துவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். கொழும்பு நகரை தனித்துவமான அனுபவங்களை வழங்கும் ஒரு கலாசார பரிமாற்றத் தளமாக மாற்றும் எமது தொலைநோக்குப் பார்வையை இது வலுப்படுத்துகிறது. கொழும்பிற்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டினருக்கு மறக்க முடியாத தருணங்களை வழங்க Fairway நிறுவனம் எப்போதும் உறுதி பூண்டுள்ளது. இந்த நான்கு நாள் கொண்டாட்டமானது ஜேர்மன் கலாசாரத்தை இலங்கையர்களுக்கு அறிமுகப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த கலாசாரப் பாலங்களை அமைக்கும்.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்: “Fairway நிறுவனம் கடந்த காலங்களில் Oktoberfest நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவு மிகவும் உண்மையான ஜேர்மன் அனுபவத்துடன் மீண்டும் அதனை கொண்டு வருவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இதனை நான் மிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்.” என்றார்.

இது பற்றி AHK Sri Lanka இன் முதன்மைப் பிரதிநிதியான மார்ட்டின் க்ளோஸ் (Martin Klose) தெரிவிக்கையில்: “இந்தக் கூட்டாண்மையானது கலாசாரப் பரிமாற்றம் எவ்வாறு நாடுகளுக்கு இடையிலான உறவை ஆழமாக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். Oktoberfest என்பது ஜேர்மனியின் போற்றத்தக்க பாரம்பரியமாகும், அதனை இலங்கை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

AHK Sri Lanka Oktoberfest by Fairway நிகழ்வானது உள்ளூர் ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், தெற்காசியாவில் கலாசார சுற்றுலாவிற்கான ஒரு சிறந்த இடமாக, கொழும்பு நகரை மேலும் நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Image Caption –இடமிருந்து வலமாக, அஷேன் கர்தெலிஸ் (குழுமத் பிரதம நிறைவேற்று அதிகாரி – Fairway Holdings), விராத் டி அல்விஸ் (தலைவர் – Fairway Holdings), சசிக கமகே (குழும சந்தைப்படுத்தல் தலைவர் – Fairway Holdings), மார்ட்டின் க்ளோஸ் (முதன்மைப் பிரதிநிதி – AHK Sri Lanka), கலாநிதி பீலிக்ஸ் நியூமன் (இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஜேர்மன் தூதுவர்), ஷஷி ஜயகொடி (நிர்வாக அதிகாரி – AHK Sri Lanka), ஹர்ஷ பத்திரண (நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் இடர் முகாமைத்துவ தலைவர் – AHK Sri Lanka), மலிந்த கஜநாயக்க (பெருநிறுவன விவகார தலைவர் – AHK Sri Lanka).