BAIC மற்றும் GWM வாகன விற்பனையை வலுப்படுத்துவதற்காக கைகோர்த்த David Pieris Automobiles மற்றும் People’s Leasing
David Pieris Automobiles (Private) Limited மற்றும் People’s Leasing & Finance PLC ஆகியன அண்மையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டதன் மூலம் ஒரு மூலோபாயக் கூட்டாண்மையை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன. இது இலங்கையின் மிகவும் மதிப்பிற்குரிய மற்றும் நம்பகமான இரு நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
David Pieris குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான David Pieris Automobiles நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்படும் GWM மற்றும் BAIC வாகனங்களின் விற்பனையை மேம்படுத்துவதை இக்கூட்டாண்மை முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மதிப்பு, அணுகலுக்கான வசதி மற்றும் சௌகரியத்தை வழங்குவதற்காகவும், DPA நிறுவனத்தின் வலுவான வாகனப் பிரிவை People’s Leasing நிறுவனத்தின் நிதிச் சேவைகளிலுள்ள விரிவான நிபுணத்துவத்துடன் இது இணைக்கிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமையானது நம்பிக்கை, விசேடத்துவம் மற்றும் நிலைபேறான வளர்ச்சிக்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நீண்டகால மூலோபாய உறவுக்கு அடித்தளத்தை அமைக்கிறது. இரு நிறுவனங்களும் பல்வேறு துறைகளில் இயங்கி வருவதுடன், தத்தமது தொழில்துறைகளில் வலுவான சந்தை முன்னிலையைப் பேணி வருவதால், இக்கூட்டாண்மையானது எதிர்காலத்தில் பரந்த ஒத்துழைப்புகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
David Pieris குழுமமானது வாகனத் துறை, நிதிச் சேவைகள், லொஜிஸ்டிக்ஸ்(logistics), ஓய்வு நேர பொழுதுபோக்கு, தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, கப்பல் மற்றும் கடல்சார் சேவைகள், முதலீட்டு சொத்துகள் மற்றும் ரியல் எஸ்டேட் வரை பரந்து விரிந்த பல்துறை சார்ந்த இலங்கையின் முன்னணி கூட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இக்குழுமம் Bajaj, KTM, GWM, BAIC உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகநாமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், Pearl Bay மற்றும் Sri Lanka Karting Circuit போன்ற புகழ்பெற்ற வணிகங்களையும் நடத்தி வருகிறது. இக்குழுமம் சிங்கப்பூர், மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, தெற்காசியா உள்ளிட்ட சர்வதேச ரீதியிலான பிரசன்னத்தையும் கொண்டுள்ளது.
இதேபோன்று, People’s Leasing & Finance PLC நிறுவனமும் பரந்த வாடிக்கையாளர் ஈர்ப்பு மற்றும் நாடளாவிய கிளை வலையமைப்பைக் கொண்டு, பரந்த அளவிலான லீசிங், கடன் மற்றும் நிதித் தீர்வுகளை வழங்கி, இலங்கையின் நிதிச் சேவைத் துறையில் ஒரு நம்பகமான முன்னணி நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு DPA நிறுவனத்தை 0114 700678 (BAIC) அல்லது 0117 888 666 (GWM) ஊடாகவும், PLC நிறுவனத்தை 0112 631 631 எனும் இலக்கம் ஊடாகவும் தொடர்பு கொள்ளவும்.
Caption
David Pieris குழுமத்தின் தலைவரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரோஹண திசாநாயக்க மற்றும் People’s Leasing நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சஞ்ஜீவ பண்டாரநாயக்க ஆகியோர் ஒப்பந்தத்தைப் பரிமாறிக்கொள்கின்றனர். அவர்களுடன் DPA நிறுவன பணிப்பாளர் மஹேஷ் குணதிலக்க, பணிப்பாளர் தனிக டி சில்வா, DPMC நிறுவன பணிப்பாளர் சமந்த சில்வா, DPA நிறுவன சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பொது முகாமையாளர் யசந்த அபேகோன், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிராந்திய முகாமையாளர் பிரசன்ன யோகரத்ன, PLC நிறுவன பிரதம செயற்பாட்டு அதிகாரி உதேஷ் குணவர்தன, தயாரிப்புகள் மற்றும் மார்ஜின் ட்ரேடிங் உதவிப் பொது முகாமையாளர் நிஷாந்த பெரேரா, வர்த்தகநாம பிரபல்யம் மற்றும் தொடர்பாடல் பிரிவின் தலைவர் சமிந்த தர்மரத்ன, லீசிங் பிரிவின் தலைவர் சிறிகுமார பத்திரகே ஆகியோரும் காணப்படுகின்றனர்.