2026 ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க Big Match போட்டிகளின் அனுசரணையாளராக களமிறங்கும் Jetour

2026 ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க Big Match போட்டிகளின் அனுசரணையாளராக களமிறங்கும் Jetour

Off By

மார்ச் மாதத்தில் பிக்மேட்ச் ஆர்வம் (Big Match Fever) அதிகரித்து வரும் நிலையில், யூரோ மோட்டார்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (Euro Motors (Pvt) Ltd.) நிறுவனத்தினால் இலங்கையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்ற, வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய SUV வர்த்தகநாமமான Jetour, மதிப்புமிக்க மூன்று பாடசாலை கிரிக்கெட் போட்டித் தொடர்களின் அனுசரணையாளராக, சமூகங்களுடனான உறவை வலுப்படுத்துகிறது. ஆனந்தா மற்றும் நாலந்தா கல்லூரிகளுக்கு இடையிலான 96ஆவது ‘Battle of the Maroons’, றோயல் மற்றும் புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான 147ஆவது ‘Battle of the Blues’, புனித ஜோசப் மற்றும் புனித பீட்டர்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான 92ஆவது ‘Battle of the Saints’ ஆகிய போட்டிகளே அவையாகும். இந்த அனுசரணையானது பாரம்பரிய 3 நாள் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.

இதனுடன் மேலும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டிகளும், பல தலைமுறைகளாக இலங்கையின் பாடசாலை கிரிக்கெட் கலாசாரத்தின் இதயத்துடிப்பாக இருந்து வருகின்றன. இவை உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள், பழைய மாணவர்கள், அவர்களது குடும்பத்தினர், கிரிக்கெட் ஆர்வலர்களை மைதானத்தை நோக்கி ஈர்க்கச் செய்கின்றன. இப்போட்டிகள் பாரம்பரியம், பாடசாலையின் பெருமை, வாழ்நாள் கால நட்பு மற்றும் உற்சாகமான போட்டித் தன்மை ஆகியவற்றின் கொண்டாட்டமாக அமைகின்றன.

Jetour நிறுவனத்தின் இந்த ஈடுபாடானது, நாட்டின் விளையாட்டுப் பாரம்பரியத்தை ஆதரிப்பதில் வர்த்தகநாமம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன், இப்பாரம்பரியங்களைப் பேணி வரும் சமூகங்களுடன் இணைந்து நிறுவனம் செயற்படுவதிலான ஆர்வத்தையும் காட்டுகிறது. இளம் திறமையாளர்களை வளர்ப்பதிலும், குழுப்பணி, விடாமுயற்சி, ஒழுக்கம், தலைமைத்துவம் போன்ற விழுமியங்களை அவர்கள் மத்தியில் விதைப்பதிலும் நீண்ட காலமாக பாடசாலை கிரிக்கெட் முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாட்டின் எதிர்கால விளையாட்டு வீரர்களையும் தலைவர்களையும் உருவாக்குவதற்கு இந்தப் பண்புகள் அவசியமானவையாகும்.

இந்த பாரம்பரிய போட்டிகளுக்கு அனுசரணை வழங்குவதானது தமது வர்த்தகநாமத்திற்கு எவ்வாறான பெருமை வாய்ந்தது என்பது குறித்து யூரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஸமீர் இம்தியாஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் பாடசாலை கிரிக்கெட் என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இப்போட்டிகள் சமூகங்களை ஒன்றிணைப்பதோடு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகளையும் உருவாக்குகின்றன. இந்த வரலாற்றுப் பாரம்பரியங்களை ஆதரிப்பதிலும், அவற்றைப் பிரதிபலிக்கின்ற இளைஞர்களின் உத்வேகம், குழுப்பணி, விடாமுயற்சி ஆகியவற்றைக் கொண்டாடுவதிலும் Jetour பெருமிதம் கொள்கிறது.” என்றார்.

இந்த அனுசரணை மூலம், துடிப்பான உள்ளூர் விளையாட்டுச் சூழலுக்கு Jetour பங்களிப்பதோடு, அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வர்த்தகநாமம் பாடசாலை கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக மாத்திரம் பார்க்காமல், மாணவர்கள், பழைய மாணவர்கள், இரசிகர்களை பாரம்பரியத்தையும் விளையாட்டுத் திறமையையும் கொண்டாடுவதிலும் ஒன்றிணைக்கும் ஒரு பயணமாக கருதுகிறது.

போட்டி நடைபெறும் இடங்களில், Jetour தனது புதிய Jetour T1, Jetour T2 ஆகிய SUV ரக வாகனங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் அதன் வலுவான பிரசன்னத்தை பேணுவதுடன், தமது வர்த்தகநாமத்தை பார்வையாளர்களிடம் நெருக்கமாக கொண்டு செல்கிறது. மைதானத்தில் வர்த்தகநாம அடையாளப்படுத்தல்களுக்கு (Branding) மேலதிகமாக, டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களிலும் இந்த அனுசரணையானது பரந்துபட்டதாக அமைகிறது. இரசிகர்கள் இந்த விளையாட்டு பருவம் முழுவதும் போட்டிகளுடனும் வர்த்தகநாமத்துடனும் இணைந்திருப்பதற்கான வாய்ப்பாக இது அமைகிறது.

வேகமாக பரவலைடைந்து வரும் உலகளாவிய SUV வர்த்தகநாமம் எனும் வகையில், Jetour தமது வாகன வரிசையில் புத்தாக்கம், சௌகரியம், நம்பகத்தன்மையை இணைப்பதில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இலங்கையின் வாகனத் துறையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட யூரோ மோட்டார்ஸ் நிறுவனத்தினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இவ்வர்த்தகநாமம், நாட்டில் தனது இருப்பை சீராக கட்டியெழுப்பி வருகிறது.

இவ்வாறான அனுசரணை முயற்சிகள் மூலம், இலங்கைச் சந்தைக்கு புதிய வாகனங்களை Jetour அறிமுகப்படுத்துவதோடு நின்றுவிடாமல், நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியங்கள், சமூகங்களை தீவிரமாக ஆதரிக்கும் ஒரு வர்த்தகநாமமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகிறது.

இலங்கையின் மிகவும் பிரபலமான ஒரு சில பாடசாலை கிரிக்கெட் போட்டிகளுடன் கைகோர்ப்பதன் மூலம், பல தலைமுறைகளாக இந்த வரலாற்றுப் போட்டிகளை வரையறுத்துள்ள ஆர்வம், நட்பு, போட்டி மனப்பாங்கு போன்றவற்றை தக்கவைப்பதில் ஒரு சிறிய பங்களிப்பை வழங்க Jetour எதிர்பார்க்கிறது.