2025 பாதுகாப்பு மைல்கல் அடைவை வெளியிடும் Bybit: புதிய AI வழி அபாய பாதுகாப்பு கட்டமைப்பின் மூலம் 300 மில்லியன் டொலர் மோசடிகள் முறியடிப்பு
வர்த்தக அளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனமான Bybit, தனது 2025 பாதுகாப்பு முயற்சியின் (Security Initiative) விரிவான முடிவுகளை வெளியிட்டுள்ளது. Bybit நிறுவனம் அறிமுகப்படுத்திய தொழில்துறையில் முன்னணியிலுள்ள பல அடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பானது, ஆயிரக்கணக்கான பயனர்களை பாதுகாத்துள்ளதுடன் டிஜிட்டல் சொத்துகளின் சந்தையில் செயலூக்கமான பாதுகாப்புக்கான புதிய தரநிலையை உருவாக்கியுள்ளது. ‘Chainalysis’ அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் மட்டும் மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளினால் உலகளாவிய ரீதியில் 17 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கிரிப்டோகரன்சிகள் இழக்கப்பட்டுள்ளன.
தொழிற்துறை தரநிலைகளை மீள்வரையறை செய்தல்: மூன்று அடுக்கு மோசடி தடுப்புக் கட்டமைப்பு
மோசடிகள் இடம்பெற்ற பின்னர் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, நிதி இழக்கப்படுவதற்கு முன்னரே தலையிடக்கூடிய ‘Dynamic Risk-Based’ பாதுகாப்பு தொகுதியை, Bybit நிறுவனம் ஒரு முன்னோடியாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கட்டமைப்பானது சாத்தியமான மோசடிச் சூழல்களை 3 அபாய நிலைகளாக பிரிக்கிறது. சாதாரண வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமல், பயனர்களின் பணத்தைப் பெறும் செயன்முறையை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு நிலையும் வெவ்வேறு பதிலளிப்பு முறைகளை கொண்டுள்ளன.
Tier 1: Early Warning (Low Risk) முன்கூட்டிய எச்சரிக்கை : ஒரு புதிய முகவரிக்கு பெருமளவிலான நிதியை மீளப்பெறுவது போன்ற அசாதாரண முறைகளை கண்டறிய பெரிய தரவு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதன் மூலம், Bybit ஆனது தன்னியக்க ஆய்வுகளை மேற்கொள்கிறது. இந்த நுண்ணறிவுகள் அபாயகரமான இடங்களை முன்கூட்டியே கறுப்பு பட்டியலில் சேர்க்க உதவுகின்றன.
Tier 2: Real-time Alert (Medium Risk) நிகழ்நேர எச்சரிக்கை: கசிந்த தரவுத்தளங்கள் (வெளிப்புற இணையத்திலிருந்து கசிந்த தரவை குறுக்கு-குறிப்பு செய்தல்) அல்லது சந்தேகத்திற்கிடமான முகவரிகள் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட கணக்குகளுக்கு, பணத்தை மீளப்பெறும் போது Bybit நிகழ்நேர எச்சரிக்கைகளை வழங்குகிறது. இது அவசர நிலை அல்லது உணர்ச்சி ரீதியான அழுத்தத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகளில் இருந்து பயனர்களை பாதுகாக்கிறது.
Tier 3: Immediate Blocking and Cooling-off (High Risk) :”Pig butchering” போன்ற முதலீட்டு மோசடிகளுடன் தொடர்புடைய முகவரிகளுக்கு, Bybit நிகழ்நேர தடுப்பு முறையை அமுல்படுத்துகிறது. அத்துடன் ஒரு மணிநேர கட்டாய காத்திருப்பு காலம் (One-Hour Cooling-Off Period) வழங்கப்படுகின்றது. இது பயனர்கள் நிதானமாக சிந்தித்து பரிவர்த்தனையை சரிபார்க்க உதவுகிறது.
புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 2025 தாக்கம் மற்றும் முக்கிய அளவீடுகள்:
2025ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைகள் பயனர்களின் பாதுகாப்பில் முன்னெப்போதும் இல்லாத முடிவுகளை தந்துள்ளன:
- நான்காம் காலாண்டில் மோசடி மீட்பு மற்றும் தடுப்பு: அடையாளம் காணப்பட்ட 500 மில்லியன் டொலர் பண பரிமாற்றங்களில், Bybit வெற்றிகரமாக 300 மில்லியன் டொலரை இடைமறித்து மீட்டுள்ளதுடன், 4,000 இற்கும் மேற்பட்ட பயனர்களின் வாழ்நாள் சேமிப்பை பாதுகாத்துள்ளது.
- நான்காம் காலாண்டில் AI வழி கண்டறிதல்: Bybit நிறுவனத்தின் பிரத்தியேக AI வழிமுறைகள் ஆனது, 350 உயர் அபாய முதலீட்டு மோசடி முகவரிகளை கண்டறிந்து, 8,000 பயனர்களை பாதிப்பிலிருந்து காப்பாற்றியுள்ளன.
- 2025 இல் உட்கட்டமைப்பு உறுதித்தன்மை: ஹெக்கர்களால் மேற்கொள்ளப்பட்ட 3 மில்லியனுக்கும் அதிகமான கணக்கு ஊடுருவல் (Account takeover) முயற்சிகளை இந்தத் தளம் முறியடித்துள்ளது.
- நான்காம் காலாண்டில் On-Chain விழிப்புணர்வு கட்டமைப்பு: இந்த கட்டமைப்பு 350 முகவரிகளை தானாகவும், 600 முகவரிகளை தன்னியக்கமற்ற வகையிலும் அடையாளப்படுத்தியதன் மூலம், 1 மில்லியன் டொலர் பெறுமதியான உடனடி மோசடி இழப்புகளை தடுத்துள்ளது.
ஒரு கூட்டுப் பாதுகாப்பு அரண்: கைத்தொழில்துறை மற்றும் அரசாங்க ஒருங்கிணைப்பு
பாதுகாப்பு என்பது ஒரு போட்டித்தன்மை வாய்ந்த நன்மை மட்டுமல்ல, அது ஒரு கூட்டுப் பொறுப்பு என்று Bybit நம்புகிறது. எமது 2025 மூலோபாயமானது வெளிப்புற நுண்ணறிவு ஒருங்கிணைப்பில் (External Intelligence Integration) அதிக கவனம் செலுத்தியது:
Bybit நிறுவனத்தின் குழும அபாயக் கட்டுப்பாட்டுத் தலைவர் David Zong கருத்துத் தெரிவிக்கையில், “2025 ஆம் ஆண்டில் எமது நோக்கம், அபாயக் கட்டுப்பாட்டை ஒரு ‘silent shield’ (அமைதியான கவசத்தில்) இருந்து ஒரு சுறுசுறுப்பான, புத்திசாலித்தனமான பாதுகாவலனாக மாற்றுவதாகும். TRM, Elliptic, Chainalysis போன்ற சர்வதேச தொழில்துறை பங்காளர்களின் நிகழ்நேரத் தகவல்களுடன் AI கண்காணிப்பை ஒருங்கிணைப்பதன் மூலம், நாம் Bybit பயனர்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல், மோசடி வலைப்பின்னல்களை கண்டறியவும் உதவுகிறோம். முழு சூழல் தொகுதிக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்காக இத்தகைய கண்காணிப்புத் தரவுகளை நாம் பகிர்ந்துகொள்கிறோம்.” என்றார்.