David Pieris Renewable Energy நிறுவனம் PROJOY மின் தீர்வுகள் மற்றும் Hoymiles சூரிய சக்தி அமைப்புகளை அறிமுகப்படுத்துகிறது
டேவிட் பீரிஸ் குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பிரிவான David Pieris Renewable Energy (Private) Limited (DPRE) நிறுவனமானது, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெற்ற ‘கெதல்ல’ (Kedella) கண்காட்சியில் ‘PROJOY’ மற்றும் ‘Hoymiles’ ஆகிய இரண்டு நவீன உலகளாவிய வர்த்தக நாமங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தனது நிலையை அந்நிறுவனம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வில் DPRE நிறுவனத்தின் பணிப்பாளர்கள் அஜந்த பிரேமசிறி மற்றும் சரித் சமரதுங்க ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர். இலங்கைக்கு உலகத்தரம் வாய்ந்த சூரிய சக்தி பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கலப்பு வலுசக்தி (Hybrid energy) தீர்வுகளை அறிமுகப்படுத்தும் DPRE இன் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
சூரிய சக்தி கட்டமைப்பு தொகுதிகளுக்கான பாதுகாப்பு மற்றும் மின்சார உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் உலகளாவிய நிறுவனமான ‘PROJOY’ ஆனது, உயர்தர DC isolators, அவசர மின் துண்டிப்பு சாதனங்கள் (Rapid shutdown devices), பிரேக்கர்கள் மற்றும் மின்னலில் இருந்தான பாதுகாப்பு சாதனங்கள் (Surge protection devices) போன்றவற்றை வழங்குகிறது. ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்தத் தயாரிப்புகள், சூரிய சக்தி மற்றும் மின்சக்தி சேமிப்பு தொகுதிகளின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கின்றன.
இதேவேளை, Hoymiles ஆனது சூரிய சக்தி உற்பத்தி, மின்கல சேமிப்பு மற்றும் ஸ்மார்ட்டான வலு சக்தி முகாமைத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நவீன கலப்பு இன்வெர்ட்டர் (Hybrid inverter) தீர்வுகளை அறிமுகப்படுத்துகிறது. Hoymiles நிறுவனத்தின் Microinverters, உலகளாவிய தரம் வாய்ந்தவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Hoymiles தொகுதிகள், பாதுகாப்பு, ஸ்மார்ட் கண்காணிப்பு வசதி ஆகியவற்றை வழங்குகின்றது. அத்தோடு, வாடிக்கையாளர்களின் மின்சார செலவைக் குறைக்க உதவுவதோடு அதிக வினைத்திறனையும் வழங்குகின்றது.
இந்த அறிமுகம் குறித்து DPRE நிறுவனத்தின் உதவிப் பொது முகாமையாளர் பிரசன்ன திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்; “எமது நிறுவனமானது எப்போதும் சர்வதேச தரத்திற்கு ஏற்ப, உள்ளூர் வலுசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எதிர்காலத் தீர்வுகளை வழங்குவதிலேயே கவனம் செலுத்துகிறது. PROJOY மற்றும் Hoymiles தயாரிப்புகளின் அறிமுகம் எமது சேவைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நீண்டகால மதிப்புமிக்க சூரிய சக்தி தீர்வுகளை வழங்க உதவுகிறது.” என்றார்.

நம்பகமான தொழில்நுட்பங்கள், சிறந்த பொறியியல் நிபுணத்துவம் மற்றும் வலுவான விற்பனைக்குப் பின்னரான சேவை ஆகியவற்றின் மூலம் தூய வலுசக்திக்கு மாறுவதற்கான இலங்கையின் முயற்சிக்கு ஆதரவளிக்க DPRE அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
டேவிட் பீரிஸ் குழுமத்தின் ஒரு அங்கமான DPRE நிறுவனம், வீடுகள் முதல் பாரிய அளவிலான தொழிற்சாலைகள் வரை அனைவருக்கும் சூரிய சக்தி தீர்வுகளை வழங்கி வரும் ஒரு முக்கிய நிறுவனமாகும். பல தசாப்த கால நற்பெயரைக் கொண்டுள்ள இந்நிறுவனம், இலங்கை முழுவதும் நிலைபேறான வலுசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதில் தொடர்ச்சியாக முன்னின்று செயற்பட்டு வருகிறது.

மேலதிக விபரங்களுக்கு 0114700440 அல்லது www.dpre.lk ஊடாக David Pieris Renewable Energy நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்