இலங்கையில்கிரிப்டோகட்டணத்தீர்வைஅறிமுகப்படுத்தும் Bybit Pay
வர்த்தக அளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப் பெரும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான Bybit (பைபிட்), இலங்கையில் Bybit Pay இன் அறிமுகத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இது Bybit Pay இன் உலகளாவிய கால்தட பதிப்பில் மற்றுமொரு புதிய இடத்தை அடைந்துள்ளது. ஆரம்ப கட்டமாக 50 நேரடி விற்பனை நிலையங்கள் (physical point-of-sale) மற்றும் 50 டிஜிட்டல் வணிக நிலையங்கள் என மொத்தமாக 100 செயற்பாட்டு வணிக தளங்களை நிறுவனம் செயற்படத்தவுள்ளது. இது இலங்கையின் வளர்ந்து வரும் டிஜிட்டல் கட்டண வலையமைப்பில் சில்லறை விற்பனை, சேவை மற்றும் இணைய வர்த்தகம் ஆகியவற்றில் ஒரு விரிவான தளத்தை உருவாக்குகிறது.
அந்த வகையில், ஆழமான உள்ளூர்மயப்படுத்தல் மற்றும் உலகளாவிய தொடர்பு மூலம், எல்லைகள் அற்ற ஒரு கிரிப்டோ அடிப்படையிலான கட்டணத் தீர்வாக (crypto-native payment solution) அதன் இருப்பை Bybit Pay பலப்படுத்தியுள்ளது. 130% இற்கும் அதிகமான கையடக்க தொலைபேசிகளின் பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் பயன்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ள இலங்கை, புத்தாக்கத்திற்கான முக்கிய வாய்ப்புகளுடன், மிக சுறுசுறுப்பான மற்றும் கட்டுப்படியான டிஜிட்டல் தீர்வுகளுக்கான தேவைகளையும் கொண்ட ஒரு சுறுசுறுப்பான கட்டணச் சூழல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. Bybit Pay இன் அறிமுகமானது, உள்நாட்டு வணிகர்கள் மற்றும் வெளிநாட்டு உல்லாச பயணிகளுக்கு மிகவும் திறமையாகச் சேவை செய்யும் கிரிப்டோ தயார்நிலை கட்டண முறைகளை வலுப்படுத்தும்.
டிஜிட்டல் சொத்துகள்: வணிகங்களுக்கான ஒரு நம்பகமான உடனடி தீர்வு
டிஜிட்டல் சொத்து முறையை (digital asset class) மக்கள்மயப்படுத்துவது குறித்து Bybit Pay ஒரு புத்துணர்ச்சியூட்டும் தூரநோக்கை கொண்டுள்ளது. வணிகத்தின் அளவு எத்தகையதாக இருந்தாலும், அல்லது கிரிப்டோ கட்டணங்களைச் செயற்படுத்தும் முன் அனுபவம் இல்லாவிட்டாலும், சில்லறை விற்பனை நிலையங்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் ஒன்லைன் வணிகர்கள் இந்தத் திட்டத்தில் இணையும்போது தங்களுக்கென ஒரு விற்பனை நிலையத்தை அமைக்க முடியும்.
CeyPay மூலம் இலங்கையில் இந்த முயற்சியை ஆரம்பிக்க Bybit Pay ஆனது, Ceylon Cash உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. இது உள்ளூர் வணிகங்கள் கிரிப்டோ கட்டணத் தீர்வுகளைத் தடையின்றி தழுவுவதற்கும், டிஜிட்டல் சொத்துகளை அனுமதிக்கும் வணிகத்தை நோக்கிய உலகளாவிய இயக்கத்தில் பங்கேற்பதற்கும் உதவுகிறது.
இந்த புதிய முயற்சி மூலம் Bybit Pay ஆனது பாரம்பரிய சில்லறை விற்பனை மற்றும் சேவை வணிக நிலையங்கள் முழுவதும் 50 Android POS கருவிகளை நிறுவும் அதே சமயம், ஒரு தெரிவுச் செயன்முறை மூலம் ஒரே நேரத்தில் 50 டிஜிட்டல் வணிகர்களையும் இணைத்துக் கொள்ளவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
முக்கிய நன்மைகள்
இலங்கையில் உள்ள வணிகர்கள் Bybit Pay இனை ஆதரிப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், உள்ளூர் வணிகங்கள் மற்றும் நுகர்வோர் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை தீர்க்கக்கூடிய சில காரணிகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அவை:
- மின்னல் வேகம்: Bybit Pay வலையமைப்பில் உள்ள வணிகர்களும் வாடிக்கையாளர்களும் API மூலமாக உடனடி கட்டணச் சான்று (instant proof-of-payment) மற்றும் அதிவேகத் தீர்வு மூலம் நிகழ் நேரக் கட்டணங்களை உறுதிப்படுத்த முடியும். இது பொதுவாக பாரம்பரிய முறைகளில் உள்ள பல நாள் தாமதங்களை நீக்குகிறது.
- கட்டுப்படியான அணுகல்: இலங்கை வணிக நிறுவனங்கள் உலகளாவிய மட்டத்தில் செற்படுவதற்கு ஒரு சிக்கனமான வழி இதுவாகும். உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கட்டணங்கள் ஆகிய இரண்டுமே போட்டி மிக்க கட்டணங்களில் வழங்கப்படுகின்றன. இந்தச் செலவின் நன்மை சிறிய வணிகங்களுக்கான இலாப வரம்புகளை மேம்படுத்துவதுடன் உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கும் பயனளிக்கிறது.
- வாடிக்கையாளர் தள விரிவுபடுத்துதல்: புவியியல் ரீதியில் காணப்படும் தடைகளுக்கு அப்பால், அதிகரித்து வரும் ஒரு தலைமுறைப் பிரிவினரை வணிகர்கள் எதிர்கொள்கின்றனர். Bybit Pay மூலம், பாரம்பரியக் கட்டண நுழைவாயில்களால் தடுக்கப்படக்கூடிய டிஜிட்டலுக்கு முன்னுரிமை மற்றும் கிரிப்டோவிற்கு முன்னுரிமை நுகர்வோரிடமிருந்து வணிக நிறுவனங்கள் கட்டணங்களைச் செயற்படுத்த முடியும்.
- நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு: மோசடிகளிலிருந்து பாதுகாப்பு மற்றும் இணக்கத்தன்மை ஆகியன கட்டமைக்கப்பட்டுள்ளதால், Bybit Pay இன் வலுவான வலையமைப்பு மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்பானது, கட்டண அனுமதிக்கான விகிதங்களை அதிகரிக்கிறது. இது வணிக நிறுவனங்களுக்கான கட்டண பிரச்சினைகளின் அபாயம் மற்றும் சாத்தியமான செலவுகளைக் குறைக்கிறது.
- தெரிவு செய்வதற்கான சுதந்திரம்: கட்டணம் செலுத்துவோர், வணிகர்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப கிரிப்டோ அல்லது fiat மூலம் பணம் செலுத்துவதற்கான நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுள்ளனர்.
இது குறித்து Bybit இன் பிராந்திய முகாமையாளர் Nazar Tymoshchuk (நசார் டைமோஷ்சுக்) தெரிவிக்கையில், “தொழில்நுட்பத்துடன் பயணிக்கும் நுகர்வோர், முக்கிய சர்வதேச சுற்றுலாத் துறை, பல்வேறு வகைப்பட்ட வணிகத் துறை ஆகிய கலவையினால் அமைந்த இலங்கையானது, கிரிப்டோ கட்டணத்தை தழுவுவதற்கான சிறந்த நிலைமைகளை கொண்டுள்ளது. இந்த அறிமுகமானது, மக்கள் உலகைச் சுற்றிப் பயணிக்கும்போது அல்லது தங்கள் சொந்த வணிகங்களை உருவாக்கும்போது, முடிந்தவரை பெருமளவானோருக்கு கட்டணங்களை கஷ்டமின்றியும், திறனாகவும், எல்லைகள் அற்றதாகவும் மேற்கொள்ள உதவுவதற்கான, Bybit Pay இன் உறுதிப்பாட்டின் ஒரு அங்கமாகும்.” என்றார்.
Bybit Pay அதன் தெரிவு செய்யப்பட்ட 100 வணிகர்களையும் மிக விரைவில் பகிரங்கமாக பயனர்களுக்கு அறிவிக்கும் என்பதோடு, நாடு முழுவதும் உள்ள வணிக வலையமைப்பை தொடர்ச்சியாக அதிகரிக்கும். சந்தையில் அதன் நுழைவானது, இலங்கையின் பரந்த டிஜிட்டல் மாற்ற முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதுடன், வணிகங்கள் மற்றும் நுகர்வோரின் முக்கிய சவால்களை தீர்க்கிறது. பங்கேற்கும் வணிகங்கள் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் சிறந்த சேவையை வழங்கவும் உதவுகிறது.