புதிய கார்களை அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து வாங்குவதன் முக்கியத்துவம்

புதிய கார்களை அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து வாங்குவதன் முக்கியத்துவம்

Off By Mic

புத்தம் புதிய காரை செலுத்துவதில் ஒரு தனித்துவமான தன்னம்பிக்கை உள்ளது. இது, நேர்த்தியான வடிவமைப்பையோ அல்லது சீரான செயல்திறனையோ பற்றியது மாத்திரமன்றி, திறப்பைத் திருகும் கணத்திலிருந்து, ஒவ்வொரு கிலோமீற்றரும் பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் மற்றும் முழுமையாக உங்களுக்கே சொந்தமானது என்பதையும் அறிந்துகொள்வதில் கிடைக்கும் மன அமைதியில் தங்கியுள்ளது. இதில் மறைக்கப்படும் குறைபாடுகளோ, கடந்த கால பயண தூரம் தொடர்பான கவலைகளோ இருப்பதில்லை. இந்த உறுதிப்பாடு அனைத்தும் நுகர்வோர் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் இருந்து ஒரு வாகனத்தை வாங்கும் தருணத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட முகவர் ஒருவரிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் ஒவ்வொரு புத்தம் புதிய வாகனமும் விரிவான உற்பத்தியாளர் உத்தரவாதத்தை (manufacturer warranty) கொண்டுள்ளது. இது எதிர்பாராத பழுதுகள் அல்லது உற்பத்தி குறைபாடுகளுக்கு எதிரான பாதுகாப்பை உறுதி செய்கிறது. இது உத்தரவாதத்தையும் கடந்த ஒன்றாகும். சிறப்பாகச் செயற்படும் வகையில் கார் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும், நம்பகமான நிபுணர்களின் வலையமைப்பால் உரிமையாளர் முழுமையாக ஆதரிக்கப்படுகிறார் என்பதையும் இது உறுதியளிக்கிறது.

ஒரு அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் புத்தம் புதிய வாகனமானது, உண்மையான பயண தூரத்தையும் (genuine mileage) தேய்மானம் இல்லாத வாகனத்தையும் உறுதி செய்கிறது. எஞ்சின் முதல் ஆசனத்தின் கவர்கள் வரை ஒவ்வொரு பாகமும் தொழிற்சாலையில் இருந்து புதிதாக வந்தவை என்பதையும் வாகனத்தின் கதையானது, அதன் உரிமையாளரிடம் இருந்து ஆரம்பிக்கிறது என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இலங்கைக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த கார்கள், உள்நாட்டிற்கு ஏற்ற வாயுச் சீராக்கிகள், அதற்கேற்ற மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன், காலநிலைக்கு ஏற்ற பாகங்கள் (tropicalised components), ஈரப்பதன் மற்றும் கரடுமுரடான வீதிகளைத் தாங்கும் வகையில் நிரிமாணிக்கப்பட்ட நீடித்த உட்புற கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இந்த உள்நாட்டுக்கு ஏற்ற தன்மையானது நம்பகத்தன்மை, வாகனத்தை செலுத்தும் சிறந்த அனுபவம், குறைந்த நீண்ட காலப் பராமரிப்புச் செலவுகள் மற்றும் மீள விற்பனை செய்யும் போதான அதிக மதிப்பு ஆகியவற்றை உறுதி செய்கின்றது.

இதன் மற்றொரு நன்மை யாதெனில், அங்கீகரிக்கப்பட்ட முகவரின் இறக்குமதிகள் யாவும் உற்பத்தியாளருடன் நேரடியாகப் பதிவு செய்யப்படுகின்றன. இது வாகனத்தின் ஆயுட்காலம் முழுவதும் பாதுகாப்பு தொடர்பான மீளப்பெறல் (safety recalls) அல்லது தயாரிப்பு மேம்படுத்தல்கள் தொடர்பில் உரிமையாளர்களுக்கு சரியான நேரத்தில் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்கிறது. ஏனைய வழிகள் மூலம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இத்தகைய சேவைகள் கிடைக்காது. அதாவது பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வாகனத்தின் செயல்திறனைப் பெரிதும் பாதிக்கக்கூடிய முக்கியமான மீளப்பெறல்கள் குறித்து உரிமையாளர்களுக்கு ஒருபோதும் அறிவிக்கப்படாது.

அங்கீகரிக்கப்பட்ட வழிகள் மூலம் கொள்வனவு செய்வதானது, அனைத்து வரிகளும் அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டு, ஆவணங்கள் சரியான முறையில் இருப்பதை உறுதி செய்து, விதிமுறைகளுக்கு இணங்குவதையும் உறுதி செய்கிறது. சட்டச் சிக்கல்கள் அல்லது விநியோகத்தின் நிச்சயமற்ற தன்மைகள் இல்லாமல் வாகன உரிமையானது எளிமையாக அமைந்திருக்கும். அண்மையில், சுமார் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,000 வாகனங்கள், இலங்கைச் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டன. இது ஒழுக்கமற்ற இறக்குமதி நடைமுறைகள் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். இது, தங்கள் கனவு வாகனங்களை முன்கூட்டியே பதிவு செய்த நுகர்வோர், ஏழு மாதங்களுக்கும் மேலாக விநியோகத்திற்காகக் காத்திருக்கச் செய்தது. அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் கொள்வனவு செய்யும் போது, வாகனங்கள் சட்டபூர்வமாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் சரியான சந்தை மதிப்புடனும் கொண்டு வரப்படுகின்றன.

ஒரு புத்தம் புதிய, அங்கீகரிக்கப்பட்ட வாகனமானது, அதனை கொள்வனவு செய்வதற்கு அப்பாற்பட்டதாகும். அது வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை, நீண்ட காலத் திருப்தி ஆகியவற்றை கொண்டதாகும். அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் இருந்து புத்தம் புதிய வாகனத்தை கொள்வனவு செய்வதானது, விரிவான உத்தரவாதங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான புதுப்பிப்புகள் முதல் உள்ளூர் மயமாக்கப்பட்ட பொறியியல் மற்றும் தொந்தரவு அற்ற வாகன உரிமைத்துவம் வரை, ஒவ்வொரு பயணமும் உண்மையான ‘மன அமைதியுடன்’ மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்கிறது.