நாட்டில்புத்தாக்கம: இலங்கையில்உண்மையானஉள்ளடக்கஉருவாக்கத்தைமேம்படுத்த Tether உடன்கோர்க்கும் Bybit

நாட்டில்புத்தாக்கம: இலங்கையில்உண்மையானஉள்ளடக்கஉருவாக்கத்தைமேம்படுத்த Tether உடன்கோர்க்கும் Bybit

Off By Mic

வர்த்தக பரிமாற்ற அளவில் உலகில் இரண்டாவது மிகப் பெரும் கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளமாக உள்ள Bybit, இலங்கையில் Ceylon Cash உடன் இணைந்து உள்நாட்டில் மற்றுமொரு முயற்சியை முன்னெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. டிஜிட்டல் சொத்து துறையில் மிகப்பெரிய நிறுவனமாகிய Tether உடன் இணைந்து, Voices of the Island நிகழ்வு மூலம் இலங்கை படைப்பாளர்கள் மற்றும் கிரிப்டோ ஆர்வலர்களுக்கு சமூக ஊடகத் தளங்களில் தங்களது கதைகளை வலுப்படுத்தும் வலிமையை அது வழங்குகிறது.

இந்நிகழ்வில் இலங்கையுடன் தொடர்புடைய முன்னணி சமூக தலைவர்களும், செல்வாக்கு மிக்கவர்களும் பங்கேற்க உள்ளனர். ஆனால் இது அனைத்து உள்ளடக்க உருவாக்குனர்களுக்கும் திறந்த ஒன்றாக வடிவவைக்கப்பட்டுள்ளது. ரூ. 15 இலட்சத்திற்கும் அதிக பரிசுகள் உள்ளடக்கிய இந்நிகழ்வின் பிரதான பரிசாக Sony PlayStation 5 வழங்கப்படவுள்ளது. கனவுகளை நனவாக்க துடிக்கும் இலங்கையில் உள்ள முயற்சியாளர்களும் உலகளாவிய தளத்தை வழங்கும் இந்த Voices of the Island முயற்சியானது, மாற்றத்தின் யுகத்தில் உண்மைத் தன்மையையும், தனிப்பட்ட அனுபவங்களையும் மையப்படுத்திய ஒரு சோதனை ஆகும். Tether இன் USDT போன்ற அன்றாட டிஜிட்டல் சொத்துகள், கிரிப்டோவினை அணுகுவதன் எளிதாக்கம், அது அன்றாட வாழ்க்கையை மாற்றும் விதம் மற்றும் Bybit Card போன்ற கிரிப்டோ சார்ந்த கட்டணத் தீர்வுகள் குறித்த தமது சொந்த படைப்புகளை பகிர்வதன் மூலம் இதில் கலந்து கொண்டு எவரும் படைப்பாளராக மாற முடியும்.

இந்த முயற்சியானது, நிதி உள்ளீர்ப்பை அதிகரிக்கவும், கல்வி, படைப்பாற்றல் மற்றும் டிஜிட்டல் சொத்துகளுக்கான அணுகல் ஊடாக சமூகங்களை வலுப்படுத்தவுமான Tether இன் விரிவான பணி நோக்குடன் ஒத்ததாக அமைகிறது. இலங்கையின் உள்ளூர் படைப்பாளர்களை ஆதரிப்பதன் மூலம், அன்றாட வாழ்க்கையில் நடைமுறைக்கு உகந்த கருவியாக USDT எவ்வாறு பயன்பட முடியும் என்பதை Tether வலியுறுத்துகிறது. இதன் மூலம் தனிநபர்கள் தங்களது கதைகளை பகிரவும், டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கேற்கவும், புதிய வளர்ச்சி வாய்ப்புகளை ஆராயவும் முடியும்.

இது எவ்வாறு பங்கேற்பது
இந்த நிகழ்வானது வலைப்பதிவுகள், blogs, reels, memes, threads மற்றும் பொதுவான பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளடக்க உருவாக்கங்களை ஏற்றுக் கொள்கிறது. X, TikTok, Instagram Reels, YouTube Shorts, Facebook, Medium, LinkedIn போன்ற தளங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

இதற்கு தேவையானது சமூக ஊடக தளங்களுக்கான அணுகலும், ஒரு படைப்பாற்றல் மிக்க மனமும் மாத்திரமே. பங்கேற்கும் படைப்பாளர்கள் இதற்காக:

  • Bybit account கணக்கை உருவாக்கி, நிகழ்விற்கு பதிவு செய்து, பிரத்தியேகமான படைப்பாளர் இணைப்பை உருவாக்குதல்.
  • இலங்கையில் Bybit, Tether மற்றும் அன்றாட வாழ்க்கை, கிரிப்டோ பரிமாற்றம் பற்றிய கருத்துகள், Bybit Card அனுபவங்கள், கிரிப்டோ கல்வி போன்ற தலைப்புகளை மையமாகக் கொண்டு சிங்களம் அல்லது ஆங்கிலத்தில் உங்களது சொந்த படைப்புகளை உருவாக்குதல்.
  • சமூக ஊடகத் தளங்களில் #CryptoArk, #TetherLKA, #usdt, #Tether போன்ற hashtags உடன் தங்களது உள்ளடக்கங்களை பகிர்ந்து, @BybitSriLanka இனை Tag செய்தல்.
  • சரியான இணைப்பும் hashtag களும் இணைக்கப்படும் பதிவுகளுக்கான பங்கேற்பாளர்கள், Telegram புள்ளிப்பட்டியலில் தங்களது முன்னேற்றத்தை கண்காணிக்க முடியும்.

பரிசு பெறுவோர் விபரம் வாராந்தம் பின்வருமாறு அறிவிக்கப்படும்

  • Content Pool (ரூ. 5 இலட்சம்): தரம் மற்றும் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்ட பரிசுகள்.
  • Participation Pool (ரூ. 5 இலட்சம்): அங்கீகரிக்கப்பட்ட சமர்ப்பிப்புகளுக்கு 5-20 USDT airdrops வழங்கப்படும்.
  • Performance Pool (ரூ. 5 இலட்சம்): வைப்புகளை செய்யும் புதிய பயனர்களை அதிகமாக ஈர்க்கும் முன்னணி 10 படைப்பாளர்களுக்கானது.

அவை தவிர, உண்மையாக Bybit Card பயன்படுத்தி மேற்கொள்ளும் உள்ளடக்கங்களுக்கு விசேட அங்கீகாரம் வழங்கப்படும். நிகழ்வின் முடிவில் Sony PlayStation 5 பிரதான பரிசாக வழங்கப்படும்.

Bybit நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் நசார் டைமோஷ்சுக் (Nazar Tymoshchuk) தெரிவிக்கையில், “இந்நிகழ்வு, இலங்கையில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் கிரிப்டோவை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகும். உலகளாவிய ரீதியில் blockchain சார்ந்த பொருளாதாரத்திற்கான அணுகல், அதன் பயன்பாடுகள், உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் முக்கியமான முன்னேற்றங்களை நாம் தற்போது காண்கிறோம். தற்போது தெற்காசியா இதற்கான மிகவும் சுவாரஸ்யமான இடங்களில் ஒன்றாக காணப்படுகிறது.” என்றார்.

Ceylon Cash நிறுவனத்தின் BD ஷெரங்கா மனீஷா (Sheranga Maneesha – ManiyaWeb3) தெரிவிக்கையில், “படைப்பாளர்கள் தங்களது உண்மையான அனுபவங்களைப் பகிரும் போது, குறிப்பாக Bybit Card மூலம் கட்டணங்களைச் செலுத்துவதாகட்டும் அல்லது USDT இனைப் பயன்படுத்தி சேமிப்புகளை அதிகரிப்பதாகட்டும், கிரிப்டோ எவ்வாறு எளிமையானதும் நடைமுறைக்கு ஏற்றதுமாக உள்ளது என்பதை ஏனையோருக்கு காண்பிக்க இது வழி வகுக்கிறது. Memes, reels, blog வலைப்பதிவுகள் ஊடாக, அந்தக் கதைகளின் பின்னால் உள்ள மக்களை நாம் கொண்டாடுகிறோம்.” என்றார்.

Tether மற்றும் Ceylon Cash உடன் இணைந்து இலங்கையின் மிகப்பாரிய சமூக வழிநடத்தல் blockchain கல்வி மற்றும் தழுவலுக்கான திட்டமான Web3Ceylon இணைந்து செயற்படுத்தும் இந்நிகழ்வானது, சொந்த உள்ளடக்கங்களை வெளிப்படுத்துவதோடு, சாதாரண மக்கள், சிறு வணிகங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு கிரிப்டோவின் மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமையைக் காண்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கையில் தகுதியுடைய பங்கேற்பாளர்களுக்கு மாத்திரம் பங்கேற்க அனுமதி உண்டு. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. விரிவான விதிமுறைகள் மற்றும் அவசியமான விடயங்கள் குறித்து அறிய: [Bybit x Tether] Voices of the Island: Share your story and win rewards!

#Bybit / #TheCryptoArk 

Bybit பற்றி
Bybit ஆனது வர்த்தக அளவின் அடிப்படையில், உலகின் இரண்டாவது மிகப் பெரும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தளமாகும். இது 70 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களுக்குச் சேவை செய்கிறது. 2018 இல் நிறுவப்பட்ட Bybit, அனைவருக்கும் எளிமையான, திறந்த மற்றும் சமமான சூழலை உருவாக்குவதன் மூலம் மையப்படுத்தப்படாத, உலகில் திறந்த தன்மையை மீள்பரிமாணப்படுத்தி வருகிறது. Web3 மீது வலுவான கவனம் செலுத்தி, முன்னணி blockchain நெறிமுறைகளுடன் (protocols) மூலோபாய ரீதியாகக் கூட்டிணைந்து வலுவான உட்கட்டமைப்பை வழங்கி, on-chain புத்தாக்கங்களை Bybit முன்னெடுக்கிறது. பாதுகாப்பான காப்பு நடவடிக்கை, பல்துறை சந்தைகள், எளிதில் பயன்படுத்தக்கூடிய பயனர் அனுபவம் மற்றும் மேம்பட்ட blockchain கருவிகள் ஆகியவற்றுக்காகப் புகழ்பெற்ற Bybit ஆனது, TradFi மற்றும் DeFi இடையேயான இடைவெளியை நிரப்பி, Web3 இன் முழுமையான திறனையும் வெளிப்படுத்துவதற்கு படைப்பாளர்கள், ஆக்கத்திறன் கொண்டோர் மற்றும் ஆர்வலர்களை வலுவூட்டுகிறது. மையப்படுத்தப்படாத நிதித் துறையின் எதிர்காலத்தை Bybit.com ஊடாக அறிந்துகொள்ளுங்கள்.
 
Bybit தொடர்பான மேலதிக விபரங்களுக்கு: Bybit Press
ஊடகக் தொடர்புகளுக்கு: [email protected]
புதிய தகவல்களுக்கு பின்தொடருங்கள்: Bybit’s Communities and Social Media