BestWeb.lk 2025 இல் இணைய வணிக பிரிவில் “இலங்கையின் மிகப் பிரபலமான இணையத்தளம்” விருதை வென்ற Cosmetics.lk

BestWeb.lk 2025 இல் இணைய வணிக பிரிவில் “இலங்கையின் மிகப் பிரபலமான இணையத்தளம்” விருதை வென்ற Cosmetics.lk

Off By Mic

இலங்கையின் முன்னணி அழகுப் பொருட்கள், ஆரோக்கியம் மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்களுக்கான தளமான Cosmetics.lk ஆனது, LK Domain Registry ஏற்பாடு செய்த BestWeb.lk 2025 இல் இணைய வர்த்தக (E-Commerce) பிரிவில் “Most Popular Website in Sri Lanka” எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

BestWeb.lk என்பது இலங்கையின் முன்னணி இணையத் தளங்களுக்கிடையிலான போட்டி நிகழ்வாகும். இது இணையத்தில் பிரதிநிதித்துவம், படைப்பாற்றல், தொழில்நுட்பத் தரம், பயனர் அனுபவம், புத்தாக்கம் ஆகியவற்றில் சிறந்த சாதனைகளை அங்கீகரித்து பாராட்டுவதற்கான ஒரு மேடையாகும். அந்த வகையில் பல்வேறு துறைகளில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்களிடையே தனது வலுவான டிஜிட்டல் பிரதிநிதித்துவம் மூலமும், நாடு முழுவதுமுள்ள தனது வாடிக்கையாளர் சமூகத்தினரின் பெரும் ஆதரவின் மூலமும் Cosmetics.lk தனித்துவமான இந்த கௌரவத்தை பிடித்துள்ளது.

இது குறித்து Cosmetics.lk நிறுவனத்தின் நிறுவுனர் லசந்த குணவர்தன தெரிவிக்கையில், “இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் நாம் உண்மையில்  பெருமை அடைகிறோம். இந்த விருதானது, எமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பிரதிபலிக்கிறது. அவர்கள் Cosmetics.lk தளத்தின் உண்மையான, உயர்தரமான அழகு மற்றும் ஆரோக்கியம், தனிநபர் பராமரிப்பு பொருட்களுக்கான முக்கியமான தளமாக தொடர்ச்சியாக தெரிவு செய்துள்ளனர். இலங்கையில் சிறந்த வணிக அனுபவத்தை வழங்கவும் தொடர்ச்சியான புத்தாக்கங்களை மேற்கொள்வதற்கும் இவ்விருது எம்மை ஊக்கப்படுத்துகிறது.” என்றார்.

Cosmetics.lk, இலங்கைச் சந்தையில் உயர்தரமான சர்வதேச வர்த்தகநாமங்களையும், சரும மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட வர்த்தகநாமங்களையும் வழங்குவதன் மூலம் அதன் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்பியுள்ளது. CeraVe, The Ordinary, Cetaphil, Neutrogena, Loreal, Palmers, Aveeno, La Roche-Posay மற்றும் Anua, SKIN1004 Centella, Medicube, COSRX, K-Secret SEOUL போன்ற பிரபல கொரிய சருமப் பராமரிப்பு வர்த்தகநாமங்களும் இதில் உள்ளடங்குகின்றன. சருமப் பராமரிப்பு மற்றும் அழகுசாதன பொருட்களை மாத்திரமன்றி, Centrum, NOW, Vital Proteins, Perfectil, Neocell, Relumins போன்ற உலகளாவிய ரீதியில் நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படும் வர்த்தகநாமங்களிலிருந்து Supplements மற்றும் Vitamins வழங்குகின்றது. இவை யாவும் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நியூசிலாந்து உள்ளிட்ட முன்னணி ஐரோப்பிய நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படுவதால், இலங்கை நுகர்வோருக்கு உண்மையான, உயர்தரமான, சர்வதேசத் தரத்திற்கு ஏற்ற பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது.

Cosmetics.lk இனை தனித்துவப்படுத்துவது அதன் வாடிக்கையாளர் பராமரிப்பு மற்றும் வசதியான அணுகலுக்கான அர்ப்பணிப்பு ஆகியனவாகும். வாடிக்கையாளர்கள் 100% உண்மையான சர்வதேச வர்த்தகநாமங்களை நம்பிக்கையுடன் அறிந்து ஆராயவும், உயர்தர சருமப் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு, அழகுக்கலை பொருட்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளவும், தொழில்முறை ரீதியான அழகுக்கலை நிபுணர்களிடமிருந்து இலவச சரும மற்றும் கூந்தல் தொடர்பான  ஆலோசனைகளையும் (Cosmetologist) பெற முடியும். பருவகால தள்ளுபடிகள், வாடிக்கையாளர் Loyalty Rewards, BNPL முறைகள், பாதுகாப்பான கட்டண தெரிவுகள் உள்ளிட்டவை மூலம் வாடிக்கையாளர்கள் மேலதிக நன்மைகளையும் பெற முடியும். ஒன்லைன் மூலமாகவோ அல்லது நாடு முழுவதும் உள்ள 6 விற்பனை நிலையங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று கொள்வனவு செய்வதன் மூலமாகவோ, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தடையற்ற, தனிப்பட்ட, நம்பகமான அனுபவத்தை வழங்க அது உறுதியளிக்கிறது.

BestWeb.lk 2025 இல் Cosmetics.lk இன் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பொது முகாமையாளர்

எதிர்வரும் சில வருடங்களில் தனது விற்பனைக் காட்சியறைகளை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள Cosmetics.lk, அழகுக் கலை மற்றும் தனிநபர் பராமரிப்பு துறையில் முன்னணி சக்தியாக தனது நிலையை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளது. BestWeb.lk 2022 இல் சிறந்த இணைய வணிகத் தளமாக தங்க விருதை வென்றது தொடக்கம், 2025 இல் மிகப் பிரபலமான இணையத்தளமாகத் தெரிவானது வரை, இலங்கையின் டிஜிட்டல் வணிகத் துறையில் தொடர்ச்சியாக தனது வலிமையை Cosmetics.lk நிரூபித்து வந்துள்ளது. நிறுவனத்திற்கு கிடைக்கும் ஒவ்வொரு அங்கீகாரமும் சாதனைக்கு அப்பாற்பட்டு, வாடிக்கையாளர் திருப்தியை மையமாகக் கொண்டு புத்தாக்கங்களை உருவாக்கவும், விரிவாக்கத்தை மேற்கொள்ளவுமான இவ்வர்த்தகநாமத்தின் தொடர்ச்சியான பயணத்தின் அரப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

மேலதிக விபரங்களுக்கு: www.cosmetics.lk

…………………………………………………………………………………………………………………………………………………..

END

Image Caption :
BestWeb.lk 2025 இல் ‘Most Popular E-Commerce Website’ விருதை வென்ற Cosmetics.lk!