ஜனசக்தி லைஃப் மத்திய – ஆண்டு விருதுகள் 2025 இல் சிறந்த சாதனையாளர்களை கௌரவித்தது

Off By Mic
ரவி லியனகே, பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, ஜனசக்தி லைஃப், நிகழ்வில் உரையாற்றுகிறார்.

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமான ஜனசக்தி லைஃப், தனது மத்திய-ஆண்டு விருதுகள் 2025 இல் கிரமமான விற்பனை வகை வியாபாரப் பிரிவில் சிறப்பாக செயலாற்றியிருந்த ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தது. இந்த நிகழ்வு 2025 செப்டெம்பர் 8 ஆம் திகதி நீர்கொழும்பு, ”Jetwing Blue” ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் JXG (ஜனசக்தி குழுமம்) இன் தலைவரும் மற்றும் ஸ்தாபகருமான ஓய்வுப்பெற்ற திரு.சந்திரா ஷாஃப்டர் மற்றும் நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த 120க்கும் அதிகமான ஊழியர்கள், அவர்களின் பங்களிப்புகளுக்காக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த கொண்டாட்டத்துக்கு மேலதிகமாக, 60 ற்கும் மேற்பட்ட விருது வென்றவர்களுக்கு பிரத்தியேக நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டலில் தங்குமிட வாய்ப்பையும் வழங்கி, தமது ஊழியர்களின் சிறந்த செயற்பாடுகளை கொண்டாடுவது மற்றும் அவர்களுக்கு வலுவூட்டுவதற்கான தனது அர்ப்பணிப்பையும் ஜனசக்தி லைஃப் வெளிப்படுத்தியிருந்தது.

JXG (ஜனசக்தி குழுமம்) இன் தலைவரும் மற்றும் ஸ்தாபகருமான ஓய்வுப்பெற்ற திரு.சந்திரா ஷாஃப்டர், திருமதி. ஷாஃப்டர் ஆகியோர் மத்திய-ஆண்டு விருதுகள் 2025 நிகழ்வில் பங்கேற்றுள்ளதைக் காணலாம்.

திறமையை கௌரவித்தல், வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் திரண்ட வெற்றிகரமான செயற்பாடுகளை முன்னெடுத்தல் போன்றவற்றில் நிறுவனம் காண்பிக்கும் அக்கறையான செயற்பாடுகள், இந்த மைல்கல் நிகழ்வினூடாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது.