ஜனசக்தி லைஃப் நல்லூர் திருவிழா 2025 இல் சமூகங்கள் மத்தியில் வலுவூட்டல்

ஜனசக்தி லைஃப் நல்லூர் திருவிழா 2025 இல் சமூகங்கள் மத்தியில் வலுவூட்டல்

Off By Mic

இலங்கையின் மிக நீண்ட இந்து பண்டிகையான நல்லூர் கந்தசுவாமி கோயிலில் 25 நாட்கள் தொடர்ந்து நடைப்பெற்ற திருவிழாவின் போது, அப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 5000ற்கும் அதிகமான குடும்பத்தினருடன் JXG  (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமான ஜனசக்தி லைஃப் தீவிரமான ஈடுப்பாட்டுடன் பங்குப்பற்றியிருந்தது.

மேலும் இவ் அணியினர் சமூகத்தாரிடையே சென்று காப்புறுதி பற்றிய விழிப்புணர்வை வழங்கியிருந்ததுடன், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர். மேலும் மாலைப் பொழுதுகளில் முன்னெடுத்திருந்த விளையாட்டு அம்சங்களில் பங்கேற்றவர்களுக்கு அன்பளிப்புகளை பகிர்ந்தளித்திருந்ததனூடாக பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தனர். அதனூடாக, பிராந்தியத்தில் அர்த்தமுள்ள வகையில் சமூக ஈடுப்பாட்டை ஜனசக்தி லைஃப் நிறுவனம் முன்னெடுத்திருந்ததுடன், அப்பிரதேச மக்களின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்புடனான உறுதிப்பாட்டை மேலும் வெளிப்படுத்தியிருந்தது.

###.