தனது 8ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொழும்பில் தமது உறுப்பினர்களின் சந்திப்புடன் கொண்டாடிய  Binance

Off By Mic

உலகளாவிய கிரிப்டோகரன்சி (Cryptocurrency) பரிவர்த்தனை தளமாக விளங்கும் Binance (பைனான்ஸ்), தனது 8ஆவது ஆண்டு நிறைவையொட்டி கடந்த 2025 ஜூலை 14 ஆம் திகதி கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் அதில் அங்கம் வகிக்கும் சமூகத்தினரின் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. வளர்ச்சியடையும் பைனான்ஸ் சமூகத்தின் 300 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டு, இத்தளத்தையும் தமது சமூகத்துடனான நெருக்கமான ஈடுபாட்டையும் கொண்டாடினர்.

2017 ஜூலை 14ஆம் திகதி நிறுவப்பட்ட பைனான்ஸ் இன்று Web3 மற்றும் Blockchain துறைகளில் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற நிறுவனமாக மாறியுள்ளது. இன்று அதன் அர்ப்பணிப்பானது, பரிவர்த்தனை அளவுகளைக் கடந்து உருவெடுத்துள்ளது. மக்கள், பயனாளர்கள், நம்பிக்கை கொள்பவர்கள் மற்றும் பைனான்ஸ் சமூகத்தை உருவாக்குபவர்கள் ஆகியோர் அதன் 8ஆவது ஆண்டு நிறைவு விழாவின் மையக் கருவாக விளங்குகின்றனர்.

இன்று பைனான்ஸ் 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் 280 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களால் நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படுகிறது. 125 ட்ரில்லியன் டொலர் பரிவர்த்தனை கொள்ளளவு, Binance Earn ஊடாக 50 பில்லியன் டொலர் வருமானம் மற்றும் சேமிப்பு, Binance Pay மூலம் 230 பில்லியன் டொலர் பரிவர்த்தனைகள் எனும் பதிவுகளை நிறுவனம் கொண்டுள்ளது. இவை வெறும் எண்கள் மட்டுமல்ல, உலகளாவிய சுறுசுறுப்பான குழுவினரின் நம்பிக்கையையும் பங்கேற்பையும் இவை பிரதிபலிக்கின்றன.

இந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்களுக்கு இடையில் நட்பு மற்றும் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில், பங்கேற்புடனான பல்வேறு விளையாட்டுகள், செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதோடு, பரிசுகளும் வழங்கப்பட்டன. ‘Binance Angels’ என அழைக்கப்படும் தன்னார்வலர்களின் ஆதரவுடன் இந்நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது. இவர்கள் பைனான்ஸ் உடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டு, அடித்தளத்திலிருந்து மக்களிடம் இது தொடர்பான ஈடுபாட்டையும் இதன் பயன்பாட்டையும் ஊக்குவிக்கின்றனர்.

இது குறித்து, பைனான்ஸ் தெற்காசிய பிராந்திய வளர்ச்சி மற்றும் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாளரான குஷால் மனுபதி கருத்து வெளியிடுகையில் “வளர்ச்சி என்பது வெறும் எண்களில் மாத்திரம் அளவிடப்படுவதல்ல. சூழவுள்ள சமூகத்தின் உறுதி மற்றும் ஆவல் ஆகியவற்றால் அது அளவிடப்படுகிறது. அதனால்தான் மக்கள் ஒன்றிணைந்து பழகவும், கற்றுக்கொள்ளவும், ஊக்கம் அடையவும் வாய்ப்புகளை உருவாக்குவதில் நாம் தொடர்ச்சியாக முதலீடு செய்கிறோம். இந்த பயணத்தில் ஓர் அங்கமாக இருப்பதில் நாம் பெருமைப்படுகிறோம்.” என்றார்.

இவ்வாறான நிகழ்வுகள், பைனான்ஸின் வளர்ச்சி தொடர்பான இலக்கங்களை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, ஒரே மதிப்பையும், உண்மையான உறவுகளையும், நீடித்த ஒத்துழைப்பையும் கொண்ட ஒரே சூழல் தொகுதியொன்றை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை மீள வலியுறுத்துகின்றன. இவ்வகையான சந்திப்புகள், சந்தைகளுக்கும் அட்டவணைகளுக்கும் அப்பால், நிதி மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க மக்கள் ஒன்றிணையும் ஒரு பயணமாகும் என்பதை நினைவூட்டுகின்றன.