க்ளோகார்ட் சூட்டி: சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்டு, பல் வைத்தியர்களின் அங்கீகாரம் பெற்றது

Off By Mic

இலங்கையின் நம்பிக்கைக்குரிய வாய்ச் சுகாதார வர்த்தகநாமமாக விளங்கும் க்ளோகார்ட் (Clogard), அதன் சிறுவர்களுக்கான வர்த்தகநாமமான க்ளோகார்ட் சூட்டியை மேலும் மெருகூட்டியுள்ளது. சிறுவர்களின் பால் பற்களின் மென்மையான தன்மையை புரிந்து கொண்டு,  உரிய பாதுகாப்பை வழங்கும் வகையில் மிகவும் மென்மையாகவும், பாதுகாப்பாகவும் க்ளோகார்ட் சூட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. இது அவர்களது பற்களின் மிளிரிக்கும், ஈறுகளுக்கும் எவ்வித சேதமும் ஏற்படாமல் பாதுகாப்பாக செயற்படுகிறது.

சிறுவர்கள் அதிகளவில் இனிப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், அதிகளவில் பற்குழிப் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். க்ளோகார்ட் சூட்டியில் உள்ள சரியான அளவிலான புளோரைட் ஆனது, இனிப்புகளால் உருவாகும் அமிலங்களால் ஏற்படும் பற் குழிகளிலிருந்து பாதுகாப்பதுடன், உறுதியான பற்கள் உருவாவதை உறுதிசெய்கிறது. பால் பற்கள் சுமார் 6 வயதில் விழ ஆரம்பிக்கின்ற போதிலும், அவை சிறுவர்களின் ஒட்டுமொத்த வாய்ச் சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, நிரந்தரமான உறுதியான பற்கள் உருவாவதற்கான அடித்தளத்தை அவை அமைக்கின்றன.

தேசிய வாய்ச் சுகாதார ஆய்வுகளின்படி, 2 முதல் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 65% இற்கும் அதிகமானவர்கள் பல் குழிகளால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சிறுவர்கள் க்ளோகார்ட் சூட்டி போன்ற சிறுவர்களுக்கே உகந்ததாக உருவாக்கப்பட்ட பற்பசைகளை பயன்படுத்துவது மிக முக்கியமாகும்.

க்ளோகார்ட் சூட்டி, இலங்கை பல் வைத்தியர்களின் சங்கத்தால் (SLDA)  சான்றளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி பல் வைத்தியர்களால் வழங்கப்படும் இந்த சான்றானது, இந்த பற் பசையின் பாதுகாப்பின் தரமும், பலன்களும் மிக உயர்வாக இருப்பதை பெற்றோருக்கு உறுதிபடுத்துகிறது. இந்த வர்த்தகநாமமானது, உலகம் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பல்மருத்துவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் FDI உலக பல் மருத்துவ கூட்டமைப்பினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வாய்ச் சுகாதார பராமரிப்பில் அனுபவம் கொண்டுள்ள க்ளோகார்ட், சிறுவயதிலேயே பல் சுகாதாரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, சிறுவர்களின் புன்னகைகளை பாதுகாக்க புதிய தீர்வுகளை தொடர்ச்சியாக கொண்டு வருகிறது. அந்த எண்ணத்தின் பிரதிபலிப்பில் உருவானதே க்ளோகார்ட் சூட்டியாகும். இது சிறுவர்களிடையே சிறந்த வாய்ச் சுகாதார பழக்கங்களை உருவாக்கி, வாழ்நாள் முழுவதும் ஒரு ஆரோக்கியமான, தன்னம்பிக்கை வழங்கக் கூடிய புன்னகையை உறுதி செய்கிறது.