சலவை பராமரிப்பு துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான புத்தாக்கத்தின் அடையாளத்தை ‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ மூலம் கொண்டாடும் தீவா

இலங்கையின் நம்பிக்கைக்குரிய சலவைப் பராமரிப்பு வர்த்தகநாமமான Hemas Consumer Brands நிறுவனத்தின் தீவா (Diva), கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் விசுவாசத்துடனான தனது பயணித்தைக் கொண்டாடும் வகையில், ‘Diva Pawule Wassanawa’ (தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்) எனும் புதிய நுகர்வோர் ஊக்குவிப்பு பிரசார நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. முழுக் குடும்பத்திற்கும் தாம் பெற்றதிலிருந்து திருப்பி கொடுப்பதன் மூலம் தமது விசுவாசமான நுகர்வோரை கொண்டாடுவதே இதன் நோக்கமாகும்.
‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ ஊக்குவிப்புத் திட்டமானது ஒரு வழக்கமான ஊக்குவிப்பு பிரசாரம் அல்ல. இது இலங்கை குடும்பங்களை கொண்டாடும் ஒரு நிகழ்வாகும். தனது அடிப்படைக் கோட்பாட்டிற்கு உண்மைமையானதாக இருந்து, ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் பொருத்தமான பரிசுகளை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஊக்குவிப்புத் திட்டத்தை தீவா வடிவமைத்துள்ளது. இந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பரிசுகளில், குடும்பத்திற்கான மாபெரும் பரிசாக TOYOTA Wigo கார், சிறுவர்களின் கல்விக்கான மடிகணனிகள், குடும்ப பொழுதுபோக்கிற்கான தொலைக்காட்சி மற்றும் ஒரு நாள் சுற்றுலா பொதிகள், வீட்டு வேலைகளை எளிதாக்க ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசி, சலவை இயந்திரம், மின்னழுத்தி ஆகியன உள்ளிட்ட பல பரிசுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் பங்கேற்க, நுகர்வோர் 1kg Diva Fresh பொதியை அல்லது 5 Diva Fresh சசே பொதிகளோடு தங்களது பெயர், தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட இடத்தின் விபரங்களுடன், தபால் பெட்டி இல 1289, கொழும்பு எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். வெற்றியாளர்கள் தினசரி, வாராந்தம், மாதாந்த அடிப்படையிலான சீட்டிழுப்புகள் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். எனவே இதில் ஒவ்வொருவரும் வெற்றியாளராக மாற வாய்ப்பு உண்டு.
தினசரி சீட்டிழுப்புகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நுகர்வோர் மொபைல் ரீலோட் பரிசுகளை பெறுவார்கள். அதேபோல் Diva Fresh சசே பொதிகளை அனுப்பும் நுகர்வோர் வாராந்த சீட்டிழுப்பில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள், மின்னழுத்திகள், ஒரு நாள் சுற்றுலா பொதிகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். Diva Fresh 1kg பொதிகளை அனுப்பும் நுகர்வோர் சலவை இயந்திரங்கள், தொலைக்காட்சிகள், மடிகணினிகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுவதோடு, மாதாந்த சீட்டிழுப்பில் குடும்பத்தின் பயணங்களை இலகுவாக்கி மகிழ்ச்சியை பகிரும் வகையில் புதிய TOYOTA Wigo காரை மாபெரும் பரிசாக பெற வாய்ப்பு உள்ளது.
‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ திட்டத்திற்காக, நம்பிக்கைக்குரிய உள்நாட்டு சலவைத் தூள் வர்த்தகநாமம் மற்றும் உலகளாவிய நிலையான வாகன வர்த்தகநாமமான TOYOTA உடன் இணைந்து செயற்படுவதன் மூலம் TOYOTA மற்றும் Diva ஆகியவற்றின் வரலாற்று ரீதியான இணைவின் பின்னணியில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் குறிக்கிறது. இந்த கூட்டமைப்பானது, சந்தையில் தீவா கொண்டு வந்துள்ள நம்பிக்கையும் பாரம்பரியமும் எவ்வளவு வலிமையானது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
இது குறித்து Hemas Consumer Brands நிறுவனத்தின் வீட்டு பராமரிப்பு பிரிவின் Category Manager நாமல் பெனாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், “இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையின் சலவைப் பராமரிப்பு பிரிவில் முன்னணியில் தீவா இருந்து வருகின்றது. நாம் எப்போதும் நுகர்வோரின் மனதில் நெருக்கமாக இருந்து, நீண்ட காலமாக அவர்களுடன் இணைந்து பயணித்துள்ளதன் மூலம் இந்த நிலையை அடைந்துள்ளோம். ‘தீவா குடும்பத்தின் அதிர்ஷ்டம்’ ஊக்குவிப்புத் திட்டமானது, நாம் நுகர்வோருக்கு ‘நன்றி’ சொல்லும் விதமானதாகவும், எம்மை உருவாக்கிய குடும்பங்களுக்கு நாம் பெற்றதிலிருந்து திருப்பிக் கொடுக்கும் முயற்சியாகவும் அமைகின்றது.” என்றார்.
1,000 இற்கும் மேற்பட்ட வெற்றியாளர்களை உருவாக்க எதிர்பார்க்கப்படும் இந்த ஊக்குவிப்புத் திட்டமானது, தீவா வெறுமனே ஒரு சலவைப் பராமரிப்பு வர்த்தகநாமம் அல்ல, இலங்கை குடும்பங்களின் நம்பிக்கையின் ஒரு அங்கம் எனும் தீவாவின் பாரம்பரியத்தை வலுப்படுத்துகிறது. தொடர்ச்சியான புத்தாக்கம் மற்றும் தரம் ஆகியவற்றை பேணுவதில் உறுதியான அர்ப்பணிப்பின் மூலம், உள்நாட்டு சலவைப் பராமரிப்பு பிரிவில் மாறாத தலைவராக தீவா தொடர்ச்சியாக நிலைத்து நிற்கிறது.
Hemas Consumer Brands பற்றி 60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்கு வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவியுள்ளது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது