கொழும்பில் “Pentara Residencies Thummulla Handiya”அறிமுகம் செய்யும் ஹோம் லேண்ட்ஸ்
– இலங்கை ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய தனி முதலீடு

இலங்கை ரியல் எஸ்டேட் வரலாற்றில் புதிய அத்தியாயம், கடந்த 2025 ஜூன் 21 ஆம் திகதி Cinnamon Life ஹோட்டலில் அறிமுகப்படுத்தப்பட்டது. Home Lands Group நிறுவனத்தின் முக்கியமான அபிவிருத்தித் திட்டமான Pentara Residencies, இதன்போது கோலாகலமாக அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது, இலங்கை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பு தொடர்பான தனி முதலீட்டு திட்டம் எனும் பெருமையை பெற்றுள்ளது. “Signature Night: Beyond the Skyline” எனப் பெயரிடப்பட்ட இந்த நிகழ்வானது, இலங்கையில் இதுவரை நடைபெற்ற மிகப் பெரும் ரியல் எஸ்டேட் திட்டம் தொடர்பான ஒரு அறிமுக நிகழ்வாக அமைந்தது. இது தொழில்துறைக்கான புதிய தரத்திற்க்கான அளவுகோலாகவும் அமைந்தது.
தும்முல்ல சந்தியில் (Thummulla Handiya) அமைந்துள்ள Pentara Residencies திட்டம், கொழும்பு 03, 04, 05 மற்றும் பெருமைக்குரிய கொழும்பு 07 ஆகிய பிரதேசங்களை இணைக்கும் மையத்தில் “கொழும்பின் முகவரியாக” நிறுவப்பட்டுள்ளது. கொழும்பின் மையத்தில் நவீன ஆடம்பர வாழ்க்கை தொடர்பான வரையறையை மாற்றியமைக்கும் மறக்க முடியாத இரட்டை கோபுர திட்டமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தொழில்துறை தலைவர்கள், முன்னணி முதலீட்டாளர்கள், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், வாடிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். Home Lands நிறுவனத்தின் வர்த்தகநாமத் தூதராக செயற்படும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் தலைமையில், குழுமத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளுடன் இணைந்து Pentara Residencies திட்டம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டமை இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தது. புகழ்பெற்ற இந்த தருணத்திற்கு ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கே உரித்தான தனித்துவமான வசீகரம், சர்வதேச ரீதியான ஈர்ப்பை ஏற்படுத்தியது. இந்நிகழ்வில் அவரது பங்குபற்றுதலானது, Pentara Residencies திட்டத்தின் உலகளாவிய தூரநோக்கை வலியுறுத்தியது.
இந்நிகழ்வில் Home Lands Group நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அமாயா ஹேரத், வலுவான நோக்கம் கொண்ட இத்திட்டம் தொடர்பிலும், இத்தொழில்துறை தொடர்பிலும் தனது கருத்தை வெளியிடுகையில், “இது ஒரு சாதாரண திட்டம் ஒன்றின் அறிமுகம் அல்ல. இது இலங்கை ரியல் எஸ்டேட் துறை இதுவரை காணாத மிகப் பெரும் திட்டத்தின் அறிமுகமாகும். தும்முல்ல சந்தியில் அமைந்துள்ள இத்திட்டம், கொழும்பின் அதிக கேள்வி கொண்ட இடங்களில் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வீடுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Pentara Residencies திட்டத்தை தனிச்சிறப்புமிக்கதாக மாற்றுவது அத்திட்டத்தின் அளவு மாத்திரமன்றி, அதன் தொலைநோக்குப் பார்வையும் ஆகும். அதிநவீன முகப்புகள், ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்பம் மற்றும் நிலைபேறான தன்மையுடன் கூடிய கட்டுமானம் ஆகியன மூலம், நவீன நகர வாழ்க்கையின் எதிர்காலம் தற்போது கொழும்பில் அறிமுகமாகியுள்ளது.” என்றார்.
இத்திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் மேலும் விளக்கமளித்த Home Lands குழுமத்தின் தலைவர் நளின் ஹேரத் தெரிவிக்கையில், “Pentara Residencies என்பது ஒரு முக்கியமான கட்டுமானம் மாத்திரமல்ல. இது நம்பிக்கையின், புத்தாக்கத்தின், சிறந்த தரத்தின், இலங்கை இளைஞர்களின் வாழ்வியல் கனவுகளின் அடையாளம் ஆகும். Pentara மூலமாக, நாம் கொழும்பின் விண்ணைத் தொடும் அழகியலை மாத்திரம் மாற்றவில்லை மாறாக ஆடம்பர நகர்ப்புற வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இலங்கையின் நகர வாழ்க்கைத் தரத்தில் புதிய தேசிய தரத்தையும் உருவாக்குகிறோம். எப்போதும் எமது தூரநோக்கானது தெளிவாக இருந்து வந்துள்ளதோடு, ஊக்கமளிக்கும், மேம்படுத்தும் மற்றும் நிலைத்திருக்கும் உலகத் தரம் வாய்ந்த வாழ்க்கைத் தரங்களை வழங்குவதே எமது இலக்காகும்.” என்றார்.
Pentara Residencies திட்டத்தின் கலைமயமான கட்டடக்கலையை உருவாக்கியவர் பிரபல கட்டடக் கலைஞர் பிலிப் வீரரத்ன ஆவார். அவர் வடிவமைத்த இந்த திட்டமானது, நவீனம் மற்றும் நேர்த்தி கலந்த ஒரு அற்புதக் கலைத்திறனைக் கொண்டது. Pentara திட்டதில் அவரின் பணியானது, ஆடம்பர வாழ்க்கை, புத்தாக்கம், மற்றும் வாழ்வியல் சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து Home Lands குழுமத்தின் தொலைநோக்குப் பார்வையைத் துல்லியமாக பிரதிபலிக்கிறது.
அத்துடன், Pentara Residencies திட்டத்தின் முதன்மை வடிவமைப்பு பொறியியலாளரும், உயரமான கட்டட வடிவமைப்பில் உலகளாவிய வல்லுநராகவும் திகழும் பேராசிரியர் பிரியன் மெண்டிஸ் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தார். மெல்பேர்னில் உள்ள உலகப் புகழ்பெற்ற Eureka Tower (யுரேக்கா கோபுரம்) உள்ளிட்ட பல முக்கிய, வானைத் தொடும் கட்டடங்களின் பின்னால் இவரது பங்களிப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. Pentara Residencies திட்டத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்ட, பேராசிரியர் பிரியன் மெண்டிஸ், இத்திட்டத்தின் பின்னணியில் உள்ள தொலைநோக்குப் பார்வையை பாராட்டி கருத்து வெளியிடுகையில், “Pentara Residencies என்பது வெறுமனே வடிவமைப்பு கட்டமைப்பில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்துவது மாத்திரம் அல்ல. இது இலங்கையின் உயரமான, குடியிருப்பு தரத்திற்கான, புதிய தரநிலையை ஏற்படுத்துகிறது. இத்திட்டத்தில் அவரது பங்குபற்றலானது, உலகத் தரம் வாய்ந்த பொறியியல் நுண்ணறிவை Pentara திட்டத்தில் இணைக்கிறது. இது, வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சர்வதேச தரநிலைகளுக்கான உறுதியாகப் பேணும் அர்ப்பணிப்பை Home Lands குழுமம் கொண்டுள்ளது என்பதை வலுப்படுத்துகிறது.” என்றார்.
40 மாடிகளுக்கும் அதிக உயரத்திலான Pentara Residencies ஒரு உண்மையான கட்டடக் கலைச் சாதனையாக திகழ்கிறது. இது 45 இற்கும் அதிகமான நட்சத்திர தரம் வாய்ந்த வசதிகள் கொண்டதாகும். குறிப்பாக இலங்கையில் முதன்முறையாக ஐந்து நட்சத்திர வசதியுடனான வான் திறந்த மிதக்கும் உணவக (floating sky restaurant) வசதி, வான் திறந்த எல்லையற்ற நீச்சல் தடாகம் (cantilevered sky pool), மற்றும் 30ஆவது மாடியில் இரட்டைக் கோபுரங்களை இணைக்கும் பாலம் (skybridge) என பல்வேறு நவீன அம்சங்களை கொண்டுள்ளது. முக்கியமாக, 41ஆவது மாடியில் அமைக்கப்பட்டுள்ள “Sky Mansions” என்பது இலங்கையில் முதன்முறையாக அறிமுகமாகும் தரமான, அதிசொகுசு வாய்ந்த புதிய வாழ்வியல் அனுபவமாகும்.
இத்திட்டம், 2 மற்றும் 3 படுக்கை அறை கொண்ட, அதிசொகுசு அடுக்குமாடி வீடுகளாகவும், 3 மற்றும் 4 அறை கொண்ட Sky Villas, Penthouses, 6,000 சதுர அடி பரப்பளவு கொண்ட Sky Mansions என பலதரப்பட்ட வசதிகளை கொண்டுள்ளது. இது, வீடு என்பதற்கும் அப்பாலான வாழ்க்கையைத் தேடுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முழுமையான உலகத்தரம் வாய்ந்த வாழ்க்கை முறையை வழங்குகின்றது. பிரபல பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், முன்னணி மருத்துவமனைகள், ஆடம்பர வணிக நிலையங்கள் மற்றும் நவீன வாழ்க்கை மையங்களின் அருகில், மிகச் சிறந்த நகரமயமான வசதியுடன் இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நவீன கொள்வனவாளர்களின் மாறிவரும் தேவைகளை புரிந்துகொண்டு, Home Lands Group ஆனது இலங்கையில் முதன்முறையாக இரண்டு புத்தாக்க கண்டுபிடிப்புகளுடனான, தொழில்துறையில் முதன் முதலில் அமைந்த கட்டணத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது:

- The Developer Payment Plan – விரைவானதும் எளிமையானதும். வட்டி அற்றது.
- Wealth Builder Plan – கட்டுப்படியான விலையில், எளிமையாகவும், வசதியாகவும். மாதாந்தம் செலுத்தும் வசதியுடனானது.
முழுமையாக 100% நெகிழ்வான நிதி ஏற்பாடுகளுடன், ஆரம்ப கட்டணம் இன்றி, பெருந் தொகை கட்டணம் இன்றி, நிறைவுப்படுத்தலுக்கான கட்டணம் இன்றி, மறைமுகக் கட்டணங்கள் எதுவும் இல்லாத இந்த திட்டம், 30 வருடங்கள் வரையான தவணைக் கட்டண வசதியைக் கொண்டுள்ளது.
தும்முல்ல சந்தியில் இந்த முக்கிய இடத்தில் அமைந்துள்ள இந்த விசேடத்துவம் வாய்ந்த Pentara Residencies, அதன் பன்முகச் சிறப்புமிக்க கட்டடக் கட்டமைப்பு மற்றும் புதுமைமிக்க வாழ்க்கை வசதிகளுடன் ஒரு சாதாரண குடியிருப்புத் திட்டத்திற்கு அப்பால், முன்னேற்றம், நாகரிகம் மற்றும் கொழும்பின் எதிர்காலத்தின் அடையாளமாக அது திகழ்கிறது.
20 வருடங்களுக்கும் மேலான நம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் மேன்மையை கொண்டாடும் Home Lands Group, இலங்கையின் நகர வாழ்வியலையும், வானுயர்ந்த கட்டடங்களின் தரநிலைகளையும் மீண்டுமொருமுறை மீள்வரையறை செய்துள்ளது.