கொழும்பு Marina Square இற்கான LV power distribution தொகுதியை வடிவமைத்து, வழங்கும் பொறுப்பு DIMO நிறுவனத்திடம்

இலங்கையின் முன்னணி பல்வகைத்துறை வணிக குழுமமான DIMO, கொழும்பிலுள்ள Marina Square சொகுசு குடியிருப்புத் தொகுதி மற்றும் வணிக வளாக திட்டத்திற்கான Low Voltage (LV) Power Distribution (மின்சார விநியோக) தொகுதியை வடிவமைத்து வழங்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.
DIMO வழங்கும் இந்த நவீன LV power distribution தொகுதி மூலம் இத்திட்டத்தின் மொத்த பாதுகாப்பும் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்படுவதோடு, இது Marina Square திட்டத்தின் விசேட தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்படவுள்ளது. SIEMENS நிறுவனத்தின் Type-Tested (Design-Verified) SIVACON LV Switchboards, Sub/Floor Distribution Boards மற்றும் DIMO Lumin வர்த்தகநாமங்களின் கீழ் தயாரிக்கப்படும் நவீன Apartment DB அலகுகள் இந்த கட்டமைப்பில் உள்ளடக்கப்படுகின்றன.
SIEMENS உடனான உத்தியோகபூர்வ ஒப்பந்தத்தின்கீழ், வெலிவெரியவில் அமைந்துள்ள DIMO உற்பத்தி நிலையத்தில் இந்த LV Switchboards உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. IEC 61439-1 மற்றும் 2 ஆகிய சர்வதேச தரநிலைகளுக்கேற்ப இந்த பேனல்கள் தயாரிக்கப்படுவதால், இது சர்வதேச தரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன. சிறந்த செயல்திறன், நெகிழ்ச்சியான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு கொண்ட இந்த SIVACON LV Switchboards உலகின் சிறந்த “Arc-Free” Switchboards களில் ஒன்றாகும். இது Double-Front PCC, காப்புரிமை கொண்ட Hole-less தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட காற்றோட்ட தொகுதிகளைக் கொண்டுள்ளன. 7,000A மற்றும் 150kA வரையில் தரப்படுத்தப்பட்டுள்ள இது, சிக்கலான மற்றும் உயர் கொள்ளளவுள்ள மின்விநியோக சூழல்களுக்கு மிகவும் ஏற்றதாகும்.
இந்த திட்டத்தின் கீழ் 1,088 குடியிருப்பு தொகுதிகளும் DIMO Lumin Apartment DB களை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளதால், சிக்கலான மின்கம்பியிடல்கள் அவசியமில்லை என்பதோடு, குறைந்த நேரத்திலேயே இணைப்பை செயல்திறனாக மேற்கொள்ள முடியும். கடின சூழ்நிலைகளுக்கு ஈடுகொடுக்கும் ஆற்றலுடன், டிஜிட்டல் ஒருங்கிணைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த Apartment DBs வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எதிர்காலத் தேவைகளுக்கேற்ப குடியிருப்புகளுக்கான அடிப்படை வசதிகளை வழங்கப்படுகிறது. அத்துடன் இந்த DIMO Lumin Apartment DB கள் வெலிவெரியவில் உள்ள DIMO தொழிற்சாலையிலேயே தயாரிக்கப்படுகின்றன.
இது குறித்து DIMO நிறுவனத்தின் பணிப்பாளரும், அதன் மின்சார பொறியியல் பிரிவின் தலைவருமான விஜித் புஷ்பவெல கருத்து வெளியிடுகையில், “Marina Square திட்டத்திற்கு தேவையானது, ஒரு சேவை வழங்குநரின் தேவையத் தாண்டி, நம்பிக்கையூட்டும், புத்தாக்கமான மற்றும் சேவையில் விசேடத்துவத்தை உறுதி செய்யும் ஒரு கூட்டாளரின் பங்களிப்பாகும். SIEMENS போன்ற உலகத் தரமான நிறுவனத்துடன் உருவாக்கப்பட்ட உறுதியான ஒத்துழைப்பும், மின்விநியோக தீர்வுகளுக்கான எமது நிபுணத்துவமும் Marina Square இன் LV கட்டமைப்பை நிறுவும் இந்த திட்டத்தில் DIMO நிறுவனத்தை தெரிவு செய்வதற்கு காரணமாக அமைந்தன. இந்த திட்டம், DIMO நிறுவனத்தின் பொறியியல் திறனையும் உள்ளூர் உற்பத்தித் தரத்தையும் உறுதிப்படுத்தும் சிறந்த சான்றாகும்” என்றார்.
Access Engineering PLC மற்றும் China Harbour Engineering Company (CHEC) ஆகிய இரு முன்னணி நிறுவனங்களால் மேம்படுத்தப்பட்ட Marina Square, 36 மாடிகள் கொண்ட ஐந்து கோபுரங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு படுக்கையறை முதல் 4 படுக்கையறைகள் உள்ள குடியிருப்புகள் வரையிலான வசதிகள் உள்ளன. இதில் சில குடியிருப்புகள் தனிப்பட்ட பூங்காக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. Infinity pool, clubhouse, gym, சுகாதார மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட முழுமையான ஒருங்கிணைந்த வணிக வளாகமக நிர்மாணிக்கப்பட்டுள்ள Marina Square, இயற்கையான ஒளியுடனும் சுத்தமான காற்றோட்டத்துடனும் மிகச் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.