First Capital இனால் பட்டம்பயிலும் மாணவர்களுக்காக investED நிகழ்ச்சி முன்னெடுப்பு

ஜனசக்தி குழுமத்தின் (JXG) துணை நிறுவனமான First Capital Holdings PLC, நிதிசார் அறிவை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்தும் உறுதி செய்யும் வகையில் First Capital investED எனும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. இதனூடாக நாடு முழுவதையும் சேர்ந்த 1775 க்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதிசார் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்தவும், நீண்ட கால நிதிசார் பாதுகாப்பை ஏற்படுத்த முதல் படியை எடுத்து வைப்பதற்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இளம் வயதினர் மத்தியில் நிதிசார் அறிவு இடைவெளியை குறைப்பதற்கான தெளிவான தேவை எழுந்திருந்ததைத் தொடர்ந்து, First Capital investED பற்றிய சிந்தனை வெளிப்பட்டது. அதன் பரந்த நிலைபேறாண்மை மற்றும் உள்ளடக்கமான நிகழ்ச்சி நிரலுக்கமைய, பல்கலைக்கழக மாணவர்களுக்கு தமது நிபுணத்துவ பயணங்களின் போது, உறுதியான நிதிசார் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமான சாதனங்கள் மற்றும் அறிவை வழங்கி வலுவூட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து First Capital செயலாற்றியிருந்தது.
ஈடுபாட்டுடன் கூடிய 1 மணி நேர அமர்வுகளுடன், நிதிசார் ஒழுக்கம், நிதி முகாமைத்துவம், நீண்ட கால செல்வ உருவாக்கம் மற்றும் இலக்கு நிர்ணயிப்பு போன்ற நடைமுறைச் சாத்தியமான கொள்கைகள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. சந்தை தளம்பல்களின் போது முதலீடுகளை எவ்வாறு கையாள்வது தொடர்பிலும் இந்த நடவடிக்கையினூடாக விளக்கங்கள் வழங்கப்பட்டு, பங்குபற்றுனர்களுகு்கு நிஜ உலகில் எழும் நிதிசார் சவால்களுக்கு முகங்கொடுக்க தம்மை சிறப்பாக தயார்ப்படுத்த உதவியாக அமைந்திருந்தது. ஒவ்வொரு அமர்வின் முடிவின் போது நேரடியான வினாக்களுக்கு பதிலளிக்கும் செயற்பாட்டினூடாக, கற்றுக் கொண்ட விடயங்கள் தெளிவாக பங்குபற்றுனர்களை சென்றடைவடையும், அவர்களின் ஈடுபாட்டையும் உறுதி செய்வதாக அமைந்திருந்தது.
கொழும்பு பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், NSBM Green பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் SLIIT Business School போன்றன அடங்கலாக முன்னணி கல்வியகங்களில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பீடத்திடமிருந்து இந்தத் திட்டத்துக்கு பெருமளவு வரவேற்பு கிடைத்துள்ளதனூடாக, இந்த நடவடிக்கையின் பொருத்தப்பாடு மற்றும் பெறுமதி மீள உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமது மாணவர்களுக்கு First Capital investED ஐ வழங்க ஆர்வமுள்ள பல்கலைக்கழகங்கள் 076 960 3083 உடன் தொடர்பு கொண்டு, எவ்வாறு அமர்வொன்றை முன்னெடுப்பது பற்றி மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். இந்த முயற்சியினூடாக, செல்வத்தை மதிநுட்பமாகவும், நிலைபேறான வகையிலும் கட்டியெழுப்பக்கூடிய, நிதிசார் ரீதியில் தகவலறிந்த தலைமுறையை உருவாக்க First Capital தொடர்ந்தும் வழிகோலுகின்றது.

###
First Capital Holdings PLC பற்றி
இலங்கையில் காணப்படும் பட்டியலிடப்பட்ட முழு-சேவை முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC திகழ்வதுடன், பிரதான வணிகர், கூட்டாண்மை நிதி ஆலோசகர், வெல்த் முகாமையாளர் மற்றும் பங்குமுகவராக இயங்குகின்றது. உறுதித்தன்மையை கட்டியெழுப்புவது, போட்டிகரமான அனுகூலத்தை ஊக்குவிப்பது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது போன்றவற்றில் உறுதியான கவனத்தை செலுத்துவதுடன், ஜனசக்தி குழுமத்தின் (JXG) ஆதரவுடன், First Capital, ‘செயலாற்றுகை முதலில்’ எனும் தனது கோட்பாட்டுக்கமைய திகழ்வதில் கவனம் செலுத்துகின்றது. தொடர்ச்சியாக இரண்டு வருட காலமாக முதலீட்டு வங்கியியல் துறையில் மிகவும் பெறுமதி வாய்ந்த நுகர்வோர் வர்த்தக நாமமாக First Capital கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2024 SLIM வர்த்தகநாம சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம்” எனும் உயர்ந்த கௌரவிப்பையும் First Capital பெற்றுள்ளது. நான்கு தசாப்த காலத்துக்கு மேலாக மூலதன சந்தை தீர்வுகளை வழங்கும் நிபுணத்துவத்துடன், First Capital Holdings PLC மற்றும் First Capital Treasuries PLC ஆகியவற்றின், LRA இன் கடன் தரப்படுத்தல்கள் “A” இலிருந்து “A+” ஆக stable outlook உடன் வழங்கப்பட்டுள்ளது.