GDSA உடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி Dentistree மாநாடு 2025 இற்கான முக்கிய அனுசரணையாளராக மீண்டும் பங்கெடுக்கும் Link Natural Products (Pvt) Ltd

Off By Mic

இலங்கையில் மூலிகை அடிப்படையிலான சுகாதார மற்றும் தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின் முன்னணி உற்பத்தியாளராக விளங்கும் Link Natural Products (Pvt) Ltd (லிங்க் நெச்சுரல் புரடக்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்) நிறுவனம், அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கம் (GDSA) நடாத்தும் Dentistree Congress 2025 மாநாட்டின் அனுசரணையாளராக மீண்டும் செயற்படுவதன் மூலம், நாட்டின் வாய்ச் சுகாதார மேம்பாட்டை உறுதிப்படுத்தும் தனது அர்ப்பணிப்பை மீண்டும் நிரூபித்துள்ளது.

இரண்டாவது ஆண்டாக, Link Natural Products (Pvt) Ltd நிறுவனம், Dentistree Congress 2025 மாநாட்டின் பிரதான அனுசரணையாளராக செயற்பட்டது. கொழும்பு Cinnamon Life ஹோட்டலில் இடம்பெற்ற இம்மாநாட்டில் பல் வைத்திய நிபுணர்களும், மருத்துவத் துறை சார்ந்தவர்களும் தொழில்துறை பங்குதாரர்களும் பங்கேற்றிருந்தனர். அறிவுப் பரிமாற்றம், புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான ஒரு தளமாக இது அமைந்தது.

இம்மாநாட்டில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை இராஜாங்க அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன, புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான அதிகாரசபை தலைவர் கலாநிதி ஆனந்த ரத்நாயக்க, பல் சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சந்தன கஜநாயக்க மற்றும் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜயசுந்தர பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் Link Natural Products (Pvt) Ltd நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, சமகி ராஜபக்ஷ (பெருநிறுவன திட்டங்களின் பிரதானி), ராஜ் குமார் (விற்பனை பிரிவு பிரதானி), சமிரு முத்துகம (பிரதம நிதி அதிகாரி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

40 இற்கும் மேற்பட்ட வர்த்தகக் கூடங்கள், நிபுணர் வழிகாட்டலுடன் இடம்பெற்ற பயிற்சிப்பட்டறைகள் மற்றும் கருப்பொருளை மையப்படுத்திய நிபுணர் கூட்டங்கள் ஆகியவற்றுடனான Dentistree Congress மற்றும் International Dental Trade Exhibition 2025 ஆனது, தொழில்முறை வளர்ச்சி மற்றும் அறிவுப் பரிமாற்றத்திற்கான ஒரு முக்கிய மேடையை வழங்கியது. இதில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள், பல் சுகாதார பராமரிப்பு, பொதுச் சுகாதாரம் மற்றும் நலன் தொடர்பான தயாரிப்புகளின் புத்தம்புதிய புத்தாக்க கண்டுபிடிப்புகளை ஆராய வழிவகுத்ததோடு, இலங்கையின் வாய்ச் சுகாதார மேம்பாட்டிற்கான ஒத்துழைப்புகளுக்கான வலுவூட்டலாகவும் இது அமைந்தது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த Link Natural Products (Pvt) Ltd நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் ராஜ் குமார் தெரிவிக்கையில், “GDSA மற்றும் Dentistree எனும் அதன் கல்விப் பிரிவுக்கு மீண்டும் ஆதரவு வழங்குவதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். இலங்கை மக்களின் நலனில் அக்கறை உள்ள ஒரு நிறுவனம் எனும் வகையில், சுகாதாரத் தரங்களை உயர்த்தவும், கல்வியை ஊக்குவிக்கவும், பொதுமக்கள் நம்பிக்கையை உருவாக்கும் முயற்சிகளை ஆதரிக்க முடியும் என்பதில் நாம் நம்புகின்றோம். இந்த ஒத்துழைப்பானது, பல் மருத்துவ சமூகத்துடனான எமது நீண்டகால உறவை வலுப்படுத்துவதோடு, நாடு முழுவதுமான முழு நலனையும் கவனிக்கும் ‘சுதந்த’ வர்த்தகநாமம் கொண்டுள்ள இலக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.”

நாற்பது வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட Link Natural Products (Pvt) Ltd நிறுவனம், ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட, பாரம்பரிய ஆயுர்வேத தயாரிப்புகள் மூலம் பல தலைமுறைகளின் நம்பிக்கையை பெற்றுள்ளது. சமஹன், சுதந்த, சுவஸ்த அமுர்தா, கேஷா, எஸ்.பி. பாம் ஆகிய பிரபல வர்த்தகநாமங்கள் இயற்கை பாரம்பரியம், பயனளிக்கும் திறன் ஆகிய சிறப்பமங்களுக்காக பெருமை படைக்கின்றன.

Dentistree Congress மாநாட்டுக்கு அனுசரணையாளராக தொடர்வதன் மூலம், Link Natural Products (Pvt) Ltd நிறுவனம் பொதுச் சுகாதாரத்திற்கான அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துவதோடு, பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவத் துறைகளுடனான உறவுகளை வலுப்படுத்தி, இலங்கை முழுவதும் தரமான மற்றும் கட்டுப்படியான விலையில் வாய்ச் சுகாதாரத்தை வழங்குகிறது.

END