இலங்கையின்சூரியசக்திக்கானமாற்றத்திற்குவலுவூட்டசம்பத்வங்கியுடன்கூட்டணிஅமைக்கும்David Pieris Renewable Energy

Off By Mic

டேவிட் பீரிஸ் குழுமத்தின் உறுப்பு நிறுவனமான David Pieris Renewable Energy (DPRE) நிறுவனம், இலங்கையில் சூரிய சக்தியை எளிதாகவும், கட்டுப்படியான விலையிலும் பெற்றுக்கொள்ளக்  கூடிய வகையில், சம்பத் வங்கியுடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்டாண்மையானது, தமது வீடுகளிலும் வணிகத்துறையிலும் சூரிய சக்தி தீர்வுகளை ஏற்படுத்த விரும்பும் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும், குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த பசுமைக் கடன் வசதிகளை அறிமுகப்படுத்துகிறது. சம்பத் வங்கியின் நாடு முழுவதுமான வலையமைப்பு மற்றும் DPRE நிறுவனத்தின் ஆழ்ந்த தொழில்துறை அனுபவம் ஆகியவற்றின் ஒன்றிணைவானது, நாடு தூய வலுசக்திக்கு மாறுவதை விரைவுபடுத்தும்.

இரு நிறுவனங்களினதும் சிரேஷ்ட பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த உடன்படிக்கை தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. சம்பத் வங்கியின் சார்பில், நடவடிக்கைகள் மற்றும் கிளை வங்கிச் சேவைகள் தொடர்பான சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் தீபால் டி சில்வா, கிளை வங்கிச் சேவைகள் பிரதான முகாமையாளர் கேஷான் தாபரே, கடன் தயாரிப்புகள் முகாமையாளர் திலும் இளயப்பெரும, உதவி முகாமையாளர் சந்தருவன் கொடகொட ஆகியோர் கலந்துகொண்டனர். DPRE நிறுவனத்தின் சார்பில், நிறுவனத்தின் தலைவரும் அதன் முகாமைத்துவ பணிப்பாளருமான ஜயந்த ரத்நாயக்க, நிறைவேற்றுப் பணிப்பாளர் சமந்த சில்வா, நிதி, மூலோபாயம் மற்றும் செயற்பாடுகளுக்கான பொது முகாமையாளர் லஹிரு விதாரண, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உதவிப் பொது முகாமையாளர் பிரசன்ன திசாநாயக்க, மின் பொறியியலுக்கான உதவிப் முகாமையாளர் ரிசில் ராஜசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

சூரிய சக்தி என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமின்றி, வீடுகளினதும் நிறுவனங்களினதும் மின்சார கட்டண சுமையை நீக்குவதோடு, தேசிய மின் கட்டமைப்புக்கு எஞ்சிய மின்சக்தியை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் ஈட்டும் வழியையும் ஏற்படுத்துகிறது. உரிய கட்டமைப்பின் மூலம் எந்தவொரு மின்சாதனத்தையும் வாடிக்கையாளர்களால் எவ்வித தடங்கலுமின்றி இயக்க முடியும் என்பதோடு, ஒரு நிலையான மாற்று வருவாயையும் பெற வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. காலத்திற்கேற்ற இந்த கூட்டமைப்பானது, வீட்டு உரிமையாளர்கள், தொழில் முயற்சியாளர்கள், பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை விரும்பும் பொதுமக்களுக்கும் தேவையான நிதி ஆதரவை வழங்குகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், சம்பத் வங்கி தமது பசுமை கடன் தயாரிப்புகளின் ஒரு கவர்ச்சிகரமான தொகுப்பை வழங்குகிறது. தனிநபர்கள் ரூ. 50 இலட்சம் வரை 10.5% நிலையான வருடாந்த வட்டியில் கடன்களை பெற முடியும். அதற்கு மேற்பட்ட தொகைகள் 11% வட்டியில் வழங்கப்படுகின்றன. சூரிய சக்தி இணைந்த வீடுகளுக்கான கடன்கள் எடுத்துக்கொள்பவர்களுக்கு 0.25% வட்டி விலக்களிப்பு வழங்கப்படுகிறது. சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ. 10 மில்லியன் கடன் மற்றும் 50kW கொள்ளளவுடன் கூடிய சூரிய மின்கல தொகுதிகளுடன், வருடாந்தம் 6.5% சலுகை வட்டியுடன் வழங்கப்படுகின்றன. 5 kW சூரிய கட்டமைப்புகளை நிறுவுபவர்களுக்கு ரூ. 12.5 இலட்சம் வரை உடன்படிக்கையில்லாமல் (collateral இல்லாமல்) கடன் கிடைக்கும். இது சூரிய சக்தியை தங்களுக்கேற்ப பெற்றுக் கொள்வதற்கான ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.

இந்த பசுமை நிதியுதவி திட்டங்களுக்கு இணையாக, DPRE நிறுவனம் வாடிக்கையாளர் அனுபவத்தையும் தொகுதியின் நீடித்த செயல்திறனையும் மேம்படுத்தும் மதிப்புச்சேர்க்கப்பட்ட சேவைகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு இலங்கை மின்சார சபையின் இலவச அனுமதி, வலையமைப்பு இணைப்பு மற்றும் முதல் வருடத்திற்கு காப்புறுதி வழங்கப்படும். அது மாத்திரமன்றி, முதல் 2 இலவச பராமரிப்பு சேவைகளும் அதன் பின்னரான பராமரிப்பு சேவைகளுக்கு 25% தள்ளுபடியும் வழங்கப்படும். வழங்கப்படும் சூரிய தொகுதிகளில் உயர்தர Tier 1 N-Type சூரிய படலங்கள் காணப்படுவதுடன், 12 வருட உற்பத்தி உத்தரவாதம், 30 வருட செயல்திறன் உத்தரவாதம், 10 வருட வேலைத்திறன் உத்தரவாதமும் உண்டு. அதனுடன் இணைந்தவாறு, பிரபலமான வர்த்தகநாமங்களின் inverterகள் 10 வருட உத்தரவாதத்துடன் வழங்கப்படுகின்றன.

David Pieris Renewable Energy யின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உதவிப் பொது முகாமையாளர் பிரசன்ன திசாநாயக்க குறிப்பிடுகையில், “David Pieris Renewable Energy ஆகிய நாம் நவீன சூரிய தொழில்நுட்பத்தையும், நான்கு தசாப்தங்களுக்கு மேலான டேவிட் பீரிஸ் குழுமத்தின் நம்பிக்கையையும் ஒன்றிணைக்கின்றோம். எமது தயாரிப்புகளின் தரம், வழங்கும் சேவைகள் மட்டுமல்லாமல், நீண்டகால உத்தரவாதங்களும், இலவச சேவைகளும், விரிவான ஆதரவும் எமது தனித்துவத்தை நிரூபிக்கின்றன. நாடு முழுவதுமான வலையமைப்புடன் நம்பிக்கையான நிதி நிறுவனமாக விளங்கும் சம்பத் வங்கி, இந்த முயற்சிக்கான சிறந்த கூட்டாளராக விளங்குகின்றது. இந்த ஒத்துழைப்பு, மேலும் பல இலங்கையர்களுக்கு தூய வலுசக்திக்கு மாறுவதற்கும், நிதிச் சுமையை குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் நாம் ஒன்றிணைந்து எமது தேசத்தின் பசுமையான மற்றும் பாதுகாப்பான வலுசக்திக்கான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு உதவுகிறது.” என்றார்.

மேலதிக விபரங்களுக்கு www.dpre.lk இணையதளத்தை பார்வையிடவும். அல்லது 011 4700440 (விற்பனை) அல்லது 011 4700444 (தொழில்நுட்பம்) எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்கவும்.

Image caption
David Pieris Renewable Energy (DPRE) நிறுவன தலைவர் ஜயந்த ரத்நாயக்க மற்றும் சம்பத் வங்கியின் செயற்பாடுகள் மற்றும் கிளை வங்கி சேவைகள் சிரேஷ்ட பிரதிப் பொதுமுகாமையாளர் தீபால் டி சில்வா ஆகியோர் ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர். அவர்களுடன் கிளை வங்கிச் சேவைகள் பிரதான முகாமையாளர் கேஷான் தாபரே, கடன் தயாரிப்புகள் முகாமையாளர் திலும் இளயப்பெரும, DPRE நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சமந்த சில்வா, நிதி, மூலோபாயம் மற்றும் செயல்பாடுகளுக்கான பொது முகாமையாளர் லஹிரு விதாரண, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உதவிப் பொது முகாமையாளர் பிரசன்ன திசாநாயக்க, மின்சார பொறியியலுக்கான உதவிப் முகாமையாளர் ரிசில் ராஜசிங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.