AIA இன்சூரன்ஸ் ‘Rethink Healthy’ – ஆரோக்கியத்திற்கான புதிய வரையறை

Off By Mic

AIA இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Rethink Healthy’ வர்த்தகநாம பிரசாரத்தின் ஒரு அங்கமாக, PodHUB எனும் முன்னணி தகவல் மற்றும் பொழுதுபோக்கு தளத்துடன் இணைந்து, நான்கு பாகங்களில் அமைந்த சிறந்த podcast தொடர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், பாரம்பரியமான, ஒரேகோணத்திலான வழக்கமான பார்வையிலான ஆரோக்கியத்தின் வரையறைகளை சவால்களுக்கு உட்படுத்தி, உண்மையான, நடைமுறைசார்ந்த மற்றும் அனைவரையும் உள்ளீர்த்த புதிய பார்வையை வழங்குவதாகும். இன்று உலகம் மக்களுக்கு காண்பிக்கிற ஆரோக்கிய எடுத்துக்காட்டுகள், பெரும்பாலும் யதார்த்தமற்ற மற்றும் அடைய முடியாதவையாகும். இதை மாற்றி, ஆரோக்கிய வாழ்கையை எளிதாகவும், நம்பகமாகவும் மாற்றும் நோக்கில் ‘Rethink Healthy’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

‘Rethink Healthy’ என்பது AIA இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஒரு அழுத்தமான அழைப்பாகும். இலங்கை மட்டுமல்லாது நான்கு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை உள்ளடக்கிய பிராந்தியம் முழுவதும், ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வை மீளாய்வு செய்யும் இயக்கமாக இது அமைகிறது. உடல், மனம், நிதி மற்றும் சுற்றுச்சூழலின் ஒவ்வொரு பரிமாணத்தையும் கவனத்தில் கொண்டு, வாழ்க்கையின் அனைத்து தளங்களையும் உள்ளடக்கிய விரிவான ஆரோக்கிய பார்வையை ஊக்குவிக்கிறது. “Healthier, Longer, Better Lives” எனும் AIA இன் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, உண்மையான சுகவாழ்வு என்பது, உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது அல்லது உணவு பழக்க கலாசாரத்தை பேணுவது மட்டுமல்ல மாறாக தெளிவும், நோக்கமும், தொடர்ச்சியானதுமான ஒருங்கிணைந்த வாழ்க்கைத் திட்டம் என உலகிற்கு வலியுறுத்துகிறது.

இந்த podcast தொடரின் முதல் கட்டம் நான்கு அழுத்தமான கதைகளை கொண்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் ஆரோக்கியத்தின் வரையறையை மாற்றும் குரல்களாக அமைகின்றன. பொல்கொட ஏரியை வெளியக விளையாட்டு மற்றும் சுகவாழ்வுக்கான மையமாக மாற்றிய ஒரு தம்பதி, முன்னாள் தேசிய பழு தூக்கும் வீரரும் தற்போது ஒரு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக உள்ளவர் (உடற்பயிற்சி கூடத்தில் அவரது ஒழுக்கமானது அவரது நிறுவன கூட்ட அறையில் அவரது தலைமையை பிரதிபலிக்கிறது), உடல்மாதிரியையும் மன உறுதியையும் ஆதரிக்கும் ஒரு பேஷன் தொழில்முயற்சியாளர், தனிநபர் நலம் என்பது மன நலத்திற்கும் உணர்வு நலத்திற்கும் முக்கியமானது என நம்பும் ஒரு அழகுக்கலை நிறுவன நிறுவுனர் ஆகியோர் இந்த 4 கதைகளில் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் பயணங்கள், பிழையற்ற பாதையை அடைய வேண்டும் என்பதல்ல; மாறாக, ஈடுகொடுக்கும் தன்மை, சுயநிலைத்தன்மை, உண்மைத்தன்மை மற்றும் தனிநபர் அடையும் மாறாத முயற்சியின் மூலம் நிறைபேறான தன்மையை ஒரு தனிநபர் அடைவதற்கான முக்கியத்துவத்தை பிரதிபலிக்கின்றன.

‘Rethink Healthy’ ஆனது, பல்வேறு தளங்களின் ஊடாகவும் பல்வேறு ஊடக வடிவங்களின் ஊடாகவும் சென்றடைகின்றது. கண்கவர் விளம்பர பலகைகள் மற்றும் சமூக ஊடக உள்ளடக்கங்களுடன் வாராந்த podcasts தொடர்கள், ஆரோக்கியத்தைப் பற்றிய உரையாடல்களை தூண்டும். மேலும், Hutch நிறுவனத்துடன் இணைந்து ஒரு புத்தாக்கமான ‘missed call’ வசதியும் இதனுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது இந்த உள்ளடக்கம் மேலும் பலரை சென்றடைந்து பரவலடைவதை வலுப்படுத்தும்.

AIA ஶ்ரீ லங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரதம அதிகாரி சசித் பம்பரதெனிய இது பற்றித் தெரிவிக்கையில், “சமூக ஊடகம் பல சமயங்களில், ஆரோக்கியம் எப்படி இருக்க வேண்டும் எனும் ஒரு உருவத்தை எமக்குக் காட்டுகிறது. ஆனால் அது பலருக்கு யதார்த்த வாழ்க்கையில் பொருந்தாது. எனவே ‘Rethink Healthy’ மூலம், இந்த வரையறையை மாற்றி நாம் மீள வரையறை செய்ய விரும்புகிறோம். ஆரோக்கியம் என்பது ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட பயணமாகும். சில நேரங்களில் அது ஒரு நிமிடத்தில் மெளனமாக இருப்பதோ, வீட்டில் ஒரு சிறிய உடற்பயிற்சியோ, அல்லது நிதிநிலையை அமைதியை பேணுவதற்கான ஒரு முடிவெடுப்பதோ போன்ற விடயங்களாக இருக்கலாம். இந்த பிரசாரம், மக்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கேயே சென்று, அவர்களை புரிந்துகொள்வதும், ஆதரிப்பதும், அவர்களின் நலன் தொடர்பான முயற்சியில் வலுவூட்டுவதுமாகும்.” என்றார்.

இன்றைய வேகமான வாழ்க்கையில் சமநிலையை நாடும் இலங்கை மக்களுக்கு இந்த பிரசாரம் மிகவும் பொருத்தமானது. பாரம்பரியமான ஆரோக்கியம் தொடர்பான வரையறைகளில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்ந்தவர்களுக்கும் இது புத்தாக்கமான நம்பிக்கையை தருகிறது. தினமும் சிறு சிறு படிகள் எடுத்தாலே போதும், அதைத் தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால், உடனடியான பெரிய மாற்றங்களை விட அவை சிறந்த பெறுபேற்றை வழங்கும் என்பதே ‘Rethink Healthy’ பிரசாரத்தின் எண்ணக்கருவாகும். இந்த முயற்சி ஒரு podcast என்பதற்கு அப்பாற்பட்டதாகும். ஆரோக்கியம் என்பது உண்மையில் என்ன என்பதைப் பற்றி அறியச் செய்வதற்கான ஒரு கனிவான, உள்ளீர்த்தலுடன் கூடிய, மிகவும் யதார்த்தமான அணுகுமுறைக்கான ஒரு அழைப்பாகும். AIA இன்சூரன்ஸ், சுகவாழ்வின் பல பரிமாணங்களை தோளில் ஏற்று, மக்கள் தங்களின் வாழ்க்கை கதையை மீள்வரையறை செய்து, சுறுசுறுப்பாகவும் தமது சொந்த வேகத்திலும் ஆரோக்கியத்தை அடைய உதவுகிறது