
சூழல், சமூக மற்றும் நல்லாட்சிக் கொள்கைகள் தொடர்பில் தொடர்ந்தும் உறுதியுடன் பயணிக்கும் Varun Beverages Lanka
இலங்கையில் பெப்ஸி (Pepsi) மென்பானத்தை போத்தலில் அடைக்கும் உத்தியோகபூர்வ ஒப்பந்ததாரராகவும், முன்னணி மென்பான உற்பத்தியாளராகவும் விளங்கும் Varun Beverages Lanka (Pvt) Ltd. நிறுவனம், சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் நீடித்த தாக்கத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் வகையில், சூழல், சமூக மற்றும் நல்லாட்சி (ESG) கொள்கைகளை முன்நோக்கி கொண்டு செல்லும் பணியில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் சமூகத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன், நிறுவனம் பலதரப்பட்ட திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அண்மையில் PET பிளாஸ்டிக் போத்தல் சேகரிப்பு மற்றும் பொறுப்பான மீள்சுழற்சி மற்றும் கழிவுகள் முகாமைத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் முக்கியமான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், PET பிளாஸ்டிக் மூலமான சூழல் பாதிப்பை குறைப்பது மாத்திரமல்லாது, இளம் தலைமுறையினரிடையே நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அது தொடர்பான சிறந்த பழக்கங்களை உருவாக்குவதும் ஆகும்.
Varun Beverages Lanka நிறுவனத்தின் சட்டம், இணக்கம் மற்றும் நிலைபேறான தன்மை தொடர்பான தலைவர் திருமதி எரேஷா கும்புருலந்த இது பற்றித் தெரிவிக்கையில், “Varun Beverages Lanka நிறுவனமாகிய நாம், சூழல் மற்றும் சமூக நலனை வலியுறுத்துவதுடன் ESG கொள்கைகளை பின்பற்றி பல தாக்கமுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். அதன் ஒரு முக்கியமான படியாக, கொடிப்பிலிகந்த வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பைகள் மற்றும் கற்றல் உபகரணங்ளை வழங்கி வைத்தோம். அது தவிர, அங்கு ஒரு அரச மரத்தை நடுகை செய்து, பௌத்த வழிபாட்டு பகுதிக்கான கட்டடத்திற்கான பணியையும் ஆரம்பித்து வைத்தோம். சமூக மேம்பாடு மற்றும் நிலைபேறான தன்மைக்கான எங்கள் உறுதிப்பாட்டை இது நிரூபித்துள்ளது. அத்துடன், மாணவர்களுக்கு சூழல் நட்பான முறையில் PET பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்கும் நோக்கில் இது அமைந்தது.” என்றார்.
சூழல் பாதுகாப்புக்கு மேலதிகமாக, கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சியிலும் நிறுவனத்தின் உறுதியான பங்குபற்றலை இது தெளிவாக வெளிப்படுத்துகிறது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டத்தில், கொடிப்பிலிகந்த பாடசாலையில் ஒரு பௌத்த வழிபாட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, ஒரு புனித அரச மரமும் நடுகை செய்யப்பட்டது. இதன் மூலம் மாணவர்களிடையே ஆன்மீக சிந்தனையை ஊக்குவித்து, பண்பாட்டு ரீதியான மற்றும் மத ரீதியான மதிப்பீடுகளை வலுப்படுத்தும் சூழலை உருவாக்க நிறுவனம் முனைந்துள்ளது. அத்துடன், மாணவர்களுக்கான புத்தகப் பைகள் மற்றும் அத்தியவசியமான கற்றல் உபகரணங்களும் இங்கு வழங்கப்பட்டதன் மூலம், கல்வியை ஊக்குவித்து எதிர்கால தலைமுறையினரின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தை Varun Beverages Lanka செயற்படுத்தியுள்ளது.
இந்த செயற்பாடுகள் அனைத்தும், முழுமையான ESG கொள்கைகளை ஒருங்கிணைக்கும் Varun Beverages Lanka நிறுவனத்தின் அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன. இலங்கை முழுவதும் உள்ள சமூகங்களிடையே சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், நிலைபேறான, வலுவூட்டப்பட்ட எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் நிறுவனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.
சூழல் பற்றிய பொறுப்பு, கல்விக்கான ஆதரவு மற்றும் கலாசார விழுமியங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் Varun Beverages Lanka நிறுவனத்தின் ESG தொடர்பான முழுமையான அணுகுமுறைக்கு தொடர்ச்சியான இந்த முயற்சிகள் ஒரு உண்மையான சான்றாகும். ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துதல், ஒரு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துதல் மற்றும் நாடு முழுவதும் உள்ள சமூகங்களுக்கு நிலைபேறான ஒரு எதிர்காலத்தை உருவாக்குதல் மற்றும் அவர்களை வலுவூட்டுதல் ஆகியவற்றில் Varun Beverages Lanka நிறுவனம், எதிர்காலத்திலும் நாட்டின் சமூகங்களை மேம்படுத்துகின்ற, நிலையான மற்றும் சக்திவாய்ந்த எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் தனது பணியை உறுதியாக தொடரும் என்று உறுதியளிக்கிறது.