மாறும் வானிலை நிபந்தனைகளுக்கேற்ப விளைச்சலை அதிகரிக்க DIM0 Agritech இன் புதிய தொழில்நுட்ப தீர்வுகள் அறிமுகம்!

கடந்த தசாப்தத்தில் எமது நாட்டில் கணிசமான அளவில் பாதுகாப்பான விவசாய பசுமை இல்லங்கள் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும், சரியான தொழில்நுட்ப அறிவின்றிய கட்டுமானங்கள் மற்றும் தவறான பராமரிப்பு நடைமுறைகளால் எதிர்பார்த்த இலக்குகளை இலங்கையினால் பெற முடியாமல் போயுள்ளது.
இதை உணர்ந்த DIMO நிறுவனத்தின் DIMO Agribusinesses ஆனது, தனது DIMO Agritech பிரிவின் மூலம், தெளிவான வழிகாட்டலுடன், நவீன பாதுகாப்பான விவசாய வீடுகள் மற்றும் பொலி டன்னல் (பாதுகாப்பான விவசயாக இல்லங்கள்) மாதிரிகள் போன்ற தொழில்நுட்ப தீர்வுகளை அறிமுகம் செய்து வருகிறது. இதன் நோக்கம், பாதுகாப்பான விவசாய முறைகளின் மூலமாக விவசாய விளைச்சல் உற்பத்தி திறனை அதிகரிப்பதாகும்.
இது தொடர்பில் DIMO Agribusinesses நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டுப் அதிகாரி பிரியங்க தெமட்டவ தெரிவிக்கையில், “மாறும் வானிநிலை காரணமாக பயிர்களின் சேதம் அதிகரிக்கிறது. எனவே, ஒவ்வொரு பயிருக்கும் ஏற்றவாறு, மாறும் காலநிலையிலிருந்தும் பாதுகாப்பாக வைத்திருக்கும் விவசாய நடைமுறை அவசியமாகிறது. அதற்கேற்ப, அந்தந்த பயிர்களுக்கு பொருத்தமான காலநிலை மாற்றங்களிலிருந்து பாதுகாப்பு வழங்கக் கூடிய பாதுகாப்பான பயிர்ச்செய்கை பசுமை இல்லங்கள், நாட்டின் மலையக மற்றும் இடைநிலை வலயங்களுக்கும், வரண்ட வலயங்களுக்கு ஏற்ற நவீன பாதுகாப்பான விவசாய இல்லங்களையும் நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம்.” என்றார்.
தாழ் மண்டல வரண்ட வலயங்களுக்காக, திரை மற்றும் விசிறிகள் கொண்ட நவீன பாதுகாப்பு விவசாய இல்லங்கள் DIMO Agritech நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இல்லங்களுக்குள் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு உகந்த சூழல் நிலைமைகளை மேம்படுத்த, காற்று சுழற்சியடையக் கூடிய விசிறிகள் மற்றும் தேவைப்படும்போது இயற்கை காற்றோட்டத்துடன் ஒருங்கிணைக்க இல்லத்தின் பக்கவாட்டு மறைப்பானது ஏற்ற வகையில் மாற்றி அமைக்க்கூடிய பொலித்தீன் திரைச்சீலைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பாதுகாப்பான விவசாய இல்லம் நவீன சொட்டு நீர்ப் பாசனம் மற்றும் உரமிடும் கட்டமைப்பையும் கொண்டுள்ளது. இந்த இல்லம் பல்வேறு வகையான பயிர்களை எளிதில் பயிரிடக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. குறிப்பாக மலையக ஈர வலயத்தில் வளர்க்கப்படும் பெல் பெப்பர், சலாது, வெள்ளரிக்காய், தக்காளி போன்ற அதிக மதிப்புள்ள பயிர்கள் உள்ளிட்டவற்றை இந்த வகை இல்லங்களில் எளிதாக பயிரிட முடியும்.
மேலும், மத்திய, இடை வலயங்களுக்கான பாதுகாப்பு பசுமை இல்லங்கள், இயற்கை சூழலின் வெப்பநிலை மற்றும் காற்றோட்டத்திற்கு ஏற்றவாறு, பூச்சி எதிர்ப்பு வலைகள் கொண்டதாக சமனிலைப்படுத்தப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கும். கூரையின் வடிவம், புகைபோக்கி மற்றும் மரம் ஆகியவற்றைக் கொண்ட வகையில் இரண்டு மாதிரிகளில் நிர்மாணிக்கப்படும் இந்த பாதுகாப்பு விவசாய இல்லங்களை DIMO Agribusinesses மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இவை, வெப்பநிலையை குறைக்க, பனி விசிறும் தொகுதியையும் கொண்டுள்ளது.
“ஒவ்வொரு பயிருக்கும் தனிப்பட்ட வழிகாட்டலுடன், உயர்தர திரவ உரங்கள் போன்றவை பயிரின் தேவைக்கேற்ற வகையில் DIMO Agritech நிறுவனத்தால் வழங்கப்படும. மேலும், பயிர்ச் செய்கைக்கு அவசியமான நாற்று விதைகள், வளர்ச்சிக்கான பொருட்கள், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு வழிகாட்டல்கள் ஆகியனவும் எமது நிறுவனத்தால் வழங்கப்படும்.” என தெமட்டவ தெரிவித்தார்.
பயிரின் சுகாதாரம், களைகள் அற்ற சூழல், உரிய நீர் வடிகாலமைப்பு வசதியை உறுதி செய்வதற்காக, நிறுவனம் உருவாக்கும் விவசாய பசுமை இல்லங்களில் ஒரு விசேட தரை பாதுகாப்பு உறை பயன்படுத்துகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவினால் பயிரின் அனைத்து நிலைமைகளுக்கும் அவசியமான தொழில்நுட்ப ஆதரவும் வழங்கப்படும்.
இங்கு குறைந்தபட்சமாக 2,000 சதுர அடி இல்லங்களுக்கு முதலீடு செய்யும் விவசாயிகள் சிறந்த விளைச்சலை பெறலாம். ஆயினும் 4,000 சதுர அடிக்கு அதிக இல்லங்களுக்கு, 2–3 வருடங்களில் வணிக ரீதியான அதிக வருமானம் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.