Rank Container Terminals இன் செயற்றிறனை அதிகரிக்க DIMO Kalmar Reach Stacker

Rank Container Terminals இன் செயற்றிறனை அதிகரிக்க DIMO Kalmar Reach Stacker

இலங்கையிலுள்ள முன்னணி பல்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனமானது, நாட்டின் லொஜிஸ்டிக் துறையில் முன்னணியில் உள்ள Rank Container Terminals (RCT) நிறுவனத்திற்கு Kalmar Reach Stacker இனை வழங்கி வைத்துள்ளது. RCT இன் ஒருகொடவத்த மையத்தில் வைத்து இந்த Reach Stacker உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதோடு, இந்நிகழ்வில் RCT இன் அதிகாரிகள், சுங்க அதிகாரிகள் மற்றும் DIMO நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Kalmar Reach Stacker ஆனது. கப்பல் கொள்கலன்களைக் கையாளல், கொண்டு செல்லல், அடுக்கி வைத்தல் உள்ளிட்ட விடயங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள பல்துறை அம்ச பணிகளை மேற்கொள்ளக் கூடிய, திறனான தீர்வாகும். அதன் நெகிழ்வுத் தன்மை, செயற்றிறன், குறுகிய தூரத்திற்கு எளிதில் கொண்டு செல்லக்கூடிய திறன் ஆகியன காரணமாக இது மிகவும் பிரபலமாக விளங்குகின்றது. இது RCT இன் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் செயற்றிறனை அதிகரிப்பதற்கும் மிகவும் முக்கியமானதாக அமைகின்றது.

இது தொடர்பில் RCT இன் தலைவர் ரவி விஜேரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “அதிநவீன Kalmar Reach Stacker கொண்டுள்ள சிறப்பான செயற்பாட்டு இயலுமையானது, கொள்கலன்களை திறம்பட அடுக்கி வைத்தல் மற்றும் விரைவான போக்குவரத்து திறன் ஆகியன எமது பணியை மிகவும் எளிதாக்கும் என நாம் நம்புகிறோம். உயர் செயற்றிறன் மற்றும் நீடித்து நிலைத்திருப்பதை உறுதி செய்துள்ள இது, DRU450 எனும் வகையிலான, வழங்கும் பணத்திற்கு உச்ச பெறுமதியை வழங்கும் சிறந்த Reach Stacker ஆகும். கொள்கலன் கையாளும் உபகரணங்களின் திறன், நம்பகத்தன்மை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றில் DIMO நிறுவனம் கொண்டுள்ள அனுபவமானது, இந்த Kalmar Reach Stacker இனை DIMO நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான முக்கிய காரணமாக இருந்தது. Kalmar இன் இலங்கைக்கான பிரதிநிதி எனும் வகையில், நிபுணத்துவ ஆதரவையும் உடனடி சேவையையும் DIMO வழங்குவதோடு, உயர் செயற்பாட்டுத் தரங்களைப் பேணுவதில் அவர்கள் தொடர்ச்சியாக உறுதிபூண்டுள்ளனர். எனவே Kalmar Reach Stacker நிச்சயமாக எமது செயற்றிறனை உயர் நிலைக்கு கொண்டு செல்வதற்கான சரியான தெரிவாகும்.” என்றார்.

DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சமிந்த ரணவன இது குறித்து தனது கருத்துக்களைத் தெரிவிக்கையில், “இலங்கையின் பௌதீக அமைவிடம் காரணமாக, கொள்கலன் கையாளுதலுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதற்கமைய, DIMO மற்றும் Kalmar ஆகியன தமது ஒத்துழைப்பின் மூலம் நாட்டின் லொஜிஸ்டிக்ஸ் துறையில் ஒரு முக்கிய பங்கை வகிக்க தயாராக உள்ளன. DIMO நிறுவனத்தின் ஒப்பிடமுடியாத விற்பனைக்குப் பின்னரான சேவை மற்றும் Kalmar நிறுவனத்தின் அதிநவீன உபகரணங்கள், துறைமுகங்களின் உற்பத்தித்திறன் மற்றும் நிலைபேறான தன்மையை மேலும் அதிகரிக்க உதவும். அந்த வகையில், இப்பிராந்தியத்தில் ஒரு லொஜிஸ்டிக் கேந்திரநிலையமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு புத்தாக்கமான தீர்வுகளை வழங்குவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.” என்றார்.

Kalmar Reach Stacker இயந்திரத்தின் வலிமை மற்றும் சக்திவாய்ந்த எஞ்சின் ஆகியன, சிறந்த செயற்பாட்டுத் திறன் மற்றும் செயற்றிறனை உறுதி செய்கின்றது. அதன் சரியான அசைவுகள், கொள்கலன்களை ஒழுங்கான முறையில் அடுக்கி வைக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன், அதன் திறனான உள்ளக செயற்பாட்டு அமைப்பானது, குறுகிய இடங்களில் கூட எளிதாக பயணிப்பதற்கும், கொள்கலன்களை விரைவாக கொண்டு செல்வதற்குமான வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன் இது நான்கு வெவ்வேறு கொள்கலன் தூக்கும் திறன்களைக் கொண்டுள்ளதால், கொள்கலனை கையாளும் செயற்பாட்டில் செயற்றிறனை உறுதி செய்தவாறு, அதனை செயற்படுத்துபவரின் அன்றாட நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையிலான மாதிரியைத் தெரிவு செய்ய முடியும். இந்த நன்மைகள் மற்றும் இயந்திர பணிக்கான நேரத்தை குறைக்கும் திறன் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை மேம்படுத்தும் திறன் ஆகியன காரணமாக, எவ்வித தடையுமின்றி கையாளுகை நடவடிக்கைகளை முன்னெடுக்க RCT இனால் முடியும்.

பராமரிப்பு, அவசர பழுதுபார்ப்பு மற்றும் அசல் உதிரிப் பாகங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குவதன் மூலம், இலங்கையில் Kalmar உபகரணங்களுக்கான விற்பனைக்குப் பின்னரான விரிவான சேவையை வழங்க DIMO உறுதிபூண்டுள்ளது. DIMO நிறுவனத்தின் நன்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்ப நிபுணத்துவ வல்லுநர்கள் மற்றும் தவறுகளைக் கண்காணிக்கும் அதிநவீன கருவிகள் மூலம் துல்லியமான மற்றும் சிறந்த சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.