சுதேசி Star Sales Awards 2023/24: சுதேசியின்வணிகதிறமையாளர்கள்மற்றும்சிறந்தவணிகக்கூட்டாளர்கள்கௌரவிப்பு

சுதேசி Star Sales Awards 2023/24: சுதேசியின்வணிகதிறமையாளர்கள்மற்றும்சிறந்தவணிகக்கூட்டாளர்கள்கௌரவிப்பு

தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள மூலிகை சார்ந்த Swadeshi Industrial Works PLC ஆனது, அண்மையில் நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டலில் ‘சுதேசி Star Sales Awards 2023/24’ விழாவை நடாத்தியிருந்தது. விற்பனையில் சிறந்து விளங்குவோரை கௌரவிப்பதற்காகவும், பொது மற்றும் நவீன வர்த்தக பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வெகுமதி அளிக்கவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் வெற்றிக்கு பங்களித்த முக்கிய வர்த்தக பங்காளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

நவீன புத்தாக்க கண்டுபிடிப்புகளுடன் இலங்கை பாரம்பரியத்தை இணைக்கும் சுதேசியின் முக்கியமான பண்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழா பாரம்பரிய மேள தாளங்களுடன் ஆரம்பமானது. நிறுவனத்தின் முன்னோக்கிய பயணத்தை அடையாளப்படுத்தும் வகையில் பிரபல ‘தன்னோ புன்துன்கே’ எனும் மெல்லிசையுடன் ஆரம்பமாகி, நிறுவனத்தின் எதிர்கால பயணத்தை எடுத்துக்காட்டும் ‘ரைஸ் அப்’ எனும் எழுச்சியூட்டும் இசையாக மாறியது.

சுதேசியின் பிரதித் தலைவரும் நிர்வாகப் பணிப்பாளருமான சுலோதரா சமரசிங்க வரவேற்புரையை நிகழ்த்தியதோடு, நிறுவனத்தின் எதிர்கால இலக்குகளை அடைவதற்குத் தேவையான ஒத்துழைப்பு, குழுப்பணி மற்றும் கடின உழைப்பின் அவசியத்தை அவர் தனது வரவேற்பு உரையில் எடுத்துரைத்தார். தமது சாதனைகளை மீள நினைவூட்டி உற்சாகப்படுத்தவும், அவர்களை கொண்டாடவும் இந்நிகழ்வு நடத்தப்படுவதாக தெரிவித்த அவர், மகத்துவத்தை அடைவதற்காக எல்லைகளைத் தாண்டுவது அவசியம் எனவும் கூறினார்.

இந்த உரையைத் தொடர்ந்து, சுதேசியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அமில உடவத்த, கடந்த வருடத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் சாதனைகளை எடுத்துக் கூறியதோடு, 2024/25 நிதியாண்டுக்கான மூலோபாயங்களையும் அவர் சுட்டிக் காட்டினார். புத்தாக்கம், ஒத்துழைப்பு, மற்றும் நிறுவனத்தின் வலுவான தொடர்பை தொடர்ச்சியாக பேணுதல் ஆகியவற்றிலும் அவரது உரை கவனம் செலுத்தியிருந்தது. தனிநபர் பராமரிப்புத் துறையிலான மேம்பாட்டின் அவசியத்தையும் அமில உடவத்த இங்கு வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு, ‘இஸ்துதி ஸ்ரீ லங்கா’ (நன்றி ஶ்ரீ லங்கா) எனும் விசேட நடன நிகழ்வும் இடம்பெற்றது. சுதேசி உள்நாட்டு விழுமியங்களில் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது சுட்டிக் காட்டுகிறது. இந்நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக, இங்கு கூடியிருந்தோர் முன்னிலையில் நிறுவனத்தின் உற்பத்தியான புதிய சுதேசி கொஹொம்ப லெமன்கிராஸ் சவர்க்காரமும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது நிறுவனத்தின் தயாரிப்பு வகைகளில் ஒரு புத்துணர்ச்சியூட்டும் மேலதிக இணைப்பாகும். இந்த புதிய தயாரிப்பானது, உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, துர்வாடைகளிலிருந்தான நீண்ட நேர பாதுகாப்பை வழங்குகிறது. வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உயர்தர, தனிநபர் மூலிகைப் பராமரிப்பு தீர்வுகளை வழங்குவதில் சுதேசி கொண்டுள்ள உறுதிப்பாட்டுடன் இத்தயாரிப்பு இணைகின்றது.

இவ்விழாவைத் தொடர்ந்து அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஸ்டார் விற்பனை விருதுகள் நிகழ்வு இடம்பெற்றது. இதில் விற்பனையில் சிறந்து விளங்கியோர் அவர்கள் வழங்கிய விலைமதிப்பிட முடியாத பங்களிப்புகளுக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த வணிக பங்காளர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.