‘தீவா கரத்திறஂகு வலிமை’ திட்டத்தில் ஊவா தொழில்முயற்சி வெற்றியாளர்களை கௌரவித்த தீவா

‘தீவா கரத்திறஂகு வலிமை’ திட்டத்தில் ஊவா தொழில்முயற்சி வெற்றியாளர்களை கௌரவித்த தீவா

Women in Management (WIM) அமைப்புடன் இணைந்து Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை பராமரிப்பு வர்த்தகநாமமான தீவாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டமானது, இன்றைய பொருளாதார சூழலில் தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவசியமான அறிவு, திறன் மற்றும் நம்பிக்கையுடன் பெண்களை தொடர்ச்சியாக வலுவூட்டி வருகிறது. ஊவா மாகாணத்தின் வெலிமடையில் நடைபெற்ற தீவா கரத்திற்கு வலிமை தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் வெற்றியாளர்களைக் கொண்டாடும் பிரத்தியேக நிகழ்வை தீவா அண்மையில் நடாத்தியிருந்தது.

‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டமானது, தீவா வர்த்தகநாமம் கொண்டுள்ள நோக்கத்தின் ஒரு அம்சமாகும். இது பெண் தொழில்முனைவோருக்கு நிபுணத்துவ வழிகாட்டல், வணிக ரீதியிலான புத்திசாலித்தனம், திறன்கள், திறமைகளை ஏற்படுத்தும் முதன்மை நோக்கத்துடன் திட்டமிடப்பட்டுள்ளது. பெண் தொழில்முனைவோருக்குத் தேவையான அறிவு, திறன், நம்பிக்கையை வழங்குவதன் மூலம் அவர்களின் வணிக செயற்பாடுகளை நிர்வகித்தல் மற்றும் மூலோபாய ரீதியாக அதனை வழிநடத்திச் செல்லல் ஆகியவற்றிற்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த திட்டம் சிறப்பாக திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

போதிய நேரமின்மை, உரிய அறிவு இல்லாமை, தங்களது அபிலாஷைகளைத் தொடர ஆதரவின்மை போன்ற காரணங்களால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்து, தீவா இந்தத் திட்டத்தைத் ஆரம்பித்திருந்தது. இலங்கை முழுவதிலும் உள்ள திறமையான பெண் தொழில்முனைவோருக்கு கைகொடுக்கும் தீவாவின் அர்ப்பணிப்பை இந்த திட்டம் கோடிட்டுக் காட்டுகிறது. இந்தத் திட்டம் ஒவ்வொரு பங்கேற்பாளரின் முன்னேற்றம் மற்றும் திறனைக் கண்காணித்து, மதிப்பீடுகள் நிறைவடைந்தவுடன் சிறந்த மற்றும் உயர்ந்த இடத்தைப் பெறும் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கிறது. வணிகப் பதிவு, கணக்கீடு மற்றும் கணக்குப் பதிவேடு, ஏனைய பெண்களுக்கு வேலைவாய்ப்பு, மாதாந்த விற்பனையில் முன்னேற்றம், பொதியிடல் மற்றும் வர்த்தகநாம பிரபலப்படுத்தல், புதிய வாடிக்கையாளர்களை பெறுதல், புத்தாக்கமான முறையிலான முயற்சிகள் போன்ற அளவுகோல்களின் மூலம், ஒரு முழுமையான மதிப்பீட்டு செயன்முறையின் கீழ் பெண் தொழில்முனைவோர் இங்கு மதிப்பிடப்படுகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களின் முன்னேற்றம் மதிப்பீடு செய்யப்பட்டமைக்கு அமைய, பின்வரும் பெண் தொழில்முனைவோர் வெலிமடையில் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டனர். முதலாம் இடம், காளான் மற்றும் காளான் தொடர்பான தயாரிப்புகளில் ஈடுபட்ட, “Little Farm” உரிமையாளர் திருமதி மனோஜா பிரசாந்தி. இரண்டாவது இடம் வெட்டுப் பூக்கள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள “Omalmi Roses & Cattle Farm” உரிமையாளர் திருமதி நிலந்திகா தமயந்தி. மூன்றாவது இடம் வெட்டு பூக்கள், காய்கறிகள் மற்றும் மூலிகைகள் செய்கைளில் ஈடுபட்டுள்ள “Apsara Rose Gardens” உரிமையாளர் திருமதி ஹேமமாலி அமரசேகர. நான்காவது இடம் அலங்கார கற்றாழை செடிகள் தொழிலில் ஈடுபட்டுள்ள “Asha Flora” உரிமையாளர் திருமதி ஆஷா கீதாசலுனி மற்றும் ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள “Ceylon Fashion” உரிமையாளர் திருமதி நிஷாதி ஹன்சிகா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். குறிப்பிடத்தக்க திறமைகளைக் கொண்ட இந்த  பெண்கள் ஒவ்வொருவரினதும் அசாதாரண முயற்சிகளுக்காக அவர்கள் கௌரவிக்கப்பட்டு வெகுமதியும் வழங்கி வைக்கப்பட்டது.

“தொட்டிலை ஆட்டும் கைகளே உலகையும் ஆளுகின்றன” எனும் புகழ்பெற்ற முதுமொழிக்கு அமைய, எதிர்கால சந்ததியினரை வளர்ப்பதிலும், தேசத்தின் வளர்ச்சியை வடிவமைப்பதிலும் பெண்களின் முக்கிய பங்கை இது சுட்டிக்காட்டுகிறது. விலைமதிப்பிட முடியாத அவர்களது இந்த பங்களிப்புகளை தொடர்ச்சியாக அங்கீகரித்து, அவர்களுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ள தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டமான ‘தீவா கரத்திற்கு வலிமை’ திட்டம், வடக்கு, வடமேல், தெற்கு, ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் 4 மாகாணங்களில் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாடளாவிய ரீதியில் பெண் தொழில்முனைவோர். ‘தீவா கரத்திற்கு வலிமை’ தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டமானது உத்வேகம் மற்றும் வலுவூட்டலில் தூணாக நின்று செயற்படுகிறது. பெண்கள் இயற்கையாகக் கொண்டுள்ள பலம் மற்றும் திறமைகளுடன் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றியமைக்கவும், அவர்கள் வணிக வாய்ப்புத் துறைகளில் பயணிக்கத் தேவையான வசதிகளை வழங்குவதன் மூலமும் அவர்களை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.

Hemas Consumer Brands பற்றி


60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளராக திகழும் Hemas Consumer Brands நிறுவனம், குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்காக வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்வதோடு, இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவியுள்ளது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.